drumstick benefits and value added
விவசாயத்தில் நீங்கள் சுலபமாக ஒரு ஸ்டார்ட் அப் (Start -Up ) ஆரம்பிக்க வேண்டுமென்றால் தாராளமாக நீங்கள் முருங்கையை தேர்வு செய்யலாம். கீரை வகைகள் பொறுத்தவரை எல்லாமே சத்து மிகுந்ததுதான் ஆரோக்யமானதுதான் மேலும் மருத்துவக்குணமும் கொண்டதுதான் ஆனால் முருங்கை மட்டும் விவசாயிடமும் சரி மக்களிடையேயும் ஒரு தனிப்பட்ட வரவேற்பு இருக்கும் . கீரை வகைகள் என்று பொதுவாக எடுத்துக்கொண்டால், ஒரு போகத்திற்கு மட்டும் பலன் தரக்கூடிய அரைக்கீரை முளைக்கீரை உள்ளன. சில கீரைகள் நாம் வெட்ட வெட்ட முளைக்க கூடியது உதாரணமாக பொன்னகன்னி கீரை . ஆனால் மேல் சொன்ன இந்த இரண்டு வகை கீரைகளில் இலை மட்டுமே பிரதான விற்பனை அல்லது சாப்பிடும் பொருளாக இருக்கும் . ஆனால் முருங்கை எடுத்துக்கொண்டால் பல வருடம் பலன்தரக்கூடியதாகவும் , இலை , காய் மற்றும் பூக்களும் விதைகளும் கூட விற்பனை பொருளாக இருக்கும் . நாம் இந்த கட்டுரையில் முருங்கை மட்டும் மதிப்பு கூட்டல் பற்றி பார்ப்போம் .
முருங்கை இலை மற்றும் முருங்கை இலைப்பொடி
காய் மற்றும் பூக்களை விட அதிகம் சத்து நிறைந்தது முருங்கை இலைகள்தான் கரோட்டின் சத்து அதிகம் நிறைந்து இருப்பதால் கண் குறை உள்ளவர்களுக்கு நல்லது.
இதன் இலைகளை அரைத்து புண்களுக்கும் போடப்படுகிறது .
இதன் இலைகளில் சாறு எடுத்து ஜூஸ் ஆக விற்கலாம் .
முருங்கை விதை
விதைகள் சத்து நிறைந்ததாக உள்ளது , இதயும் பொடியாக மாற்றி விற்கலாம் . முருங்கை விதை தேவை படுபவர்களுக்கு நேரடியாக விற்கலாம் .
முருங்கை விதையில் பென் ஆயில் என்கிற எண்ணெய் தயாரிக்கப்படுகிறது . விதையில் 30 முதல் 35% எண்ணெய் இருக்கிறது இது உயவு எண்ணையாக பயன்படுத்தப்படுகிறது . அழகுசாதனப்பொருட்களுக் துணை பொருளாகபயன்படுத்தப்படுகிறது
முருங்கை காய் பயன்படுத்தி ஊறுகாய் தயாரிக்கலாம்
முருங்கைக்காய் வற்றல்
PKM - 2 விதை குறைவாக இருந்து சதைப்பற்று அதிகமாக இருக்கும் அதில் முருங்கைக்காய் வற்றல் தயாரிக்கலாம் .
முருங்கை காய் வரத்து அதிகமாகி விலை வீழ்ச்சி அடையும் போது மதிப்பு கூட்டி விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்
Comments
Post a Comment
Smart vivasayi