cultivation of mango - how to control mango fruits fall
சத்து குறைபாடு - Malnutrition
இதற்கு முதல் காரணம் மாமரம் சத்து இல்லாமல் இருந்திருக்கலாம் . பொதுவா மே மாசம் அறுவடை முடிந்த பின் மரத்தை நம் சரியாக கவனித்திருக்க மாட்டோம் , மறுபடியும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் மாமரத்தை கவனிக்க ஆரம்பிப்போம் எனவே இடைப்பட்ட பகுதிகளில் மரத்திற்கு தேவையான சத்துக்கள் இல்லாமல் போயிருக்கும் நாம் இந்த கட்டுரையில் மாம்பிஞ்சுகள் உதிர்வதை எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம் .
வரப்புகள் தேவை- Boundaries required
முதலில் முறையான வரப்புகள் இருக்கவேண்டும் . அந்த அந்த வரப்புகளில் உள்ள மரங்களில் அடியில் உள்ள சத்துக்கள் வெளியே செல்லாமல் பார்த்துக்கொள்ளும். நீங்கள் இடு பொருட்கள் கொடுத்தாலோ அல்லது போன தடவை கொடுத்திருந்தாலோ அவை நகராமல் இருக்க வரப்பு தேவை , அதேசமயம் தீடிரென்று கடும்மழை பெய்யும் போது நீங்கள் கொடுக்கும் சத்துக்கள் அடித்து செல்ல வாய்ப்புள்ளது எனவே முதலில் வரப்பு சரியான உயரத்தில் (3 அடி ) போடுங்கள்
பூஞ்சை தொற்று சூடோமோனஸ்
அடுத்தது ஜூன் முதல் நவம்பர் வரை மழை பெய்ய கூடிய இந்த காலகட்டங்களில் எப்ப மழை பெய்தாலும் குறைந்தபச்சம் 45 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் மரங்களில் மீது தெளித்து விடுவது பெரிய அளவில் மாமரங்கள் நோய் வராமல் தடுக்கும் . பொதுவா இந்தக்காலகட்டத்தில் பூஞ்சைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் மாமரத்தின்இலைகள் பச்சை அல்லது கரும் பச்சை நிறத்தில் இருக்கும் , பூஞ்சை தொற்றுக்கு ஆளாகும்போது சாம்பல் நிறத்திற்கு மாறி பூ மற்றும் பிஞ்சுகளை தாக்கி கிழே விழவைக்கும் இது மழைக்காலத்தில் பூஞ்சை தொற்று கொஞ்சம் அதிகமாக இருக்கும் .
பருவநிலை
அடுத்து மாம்பிஞ்சு உதிர்வதற்கு முக்கிய காரணம் பருவநிலை . பொதுவா டிசம்பர் பாதியோட மழை முடிந்து பின்பு காற்றில் ஈரப்பதம் இருக்கும் அதில் மாமரம் பூக்கும் . தரைவழி தண்ணி தர மாட்டோம் தண்ணீர் குறைய ஆரம்பித்துவிடும் , தரை வழியும் நீர் தரமாட்டோம் அப்பொழுது பூக்கள் காய் பிடித்து காம்பெல்லாம் வத்தி உறுதியாகி காயை உறுதியாக பிடித்து கொள்ளும் . இந்த மாதிரியான நேரங்களில் மிக அதிகமாக தண்ணீர் கொடுக்கக்கூடாது . நீங்கள் கொடுத்தாலோ அல்லது பருவம் தப்பி மழை பெய்தாலோ காம்பு ஊறி போய் மா பிஞ்சுகளை தாங்கும் அளவிற்க்கு வலிமை இருக்காது. எனவே அது காம்பிலிருந்து பிஞ்சு வரை கருப்பாகி பிஞ்சு விழுந்துவிடும் .
பஞ்சகாவியா
பொதுவா இந்தமாதிரி பூ வந்தபிறகு ஒரு சுண்டு விரல் அளவு வரவரைக்கும் மரத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது .எதாக இருந்தாலும் தெளித்து கொடுக்கலாம் சத்துக்களாக இருந்தாலும் நுன்னூட்ட சத்துக்களாக இருந்தாலும் . குறிப்பாக பஞ்சகாவிய நன்றாக தெளித்து கொடுக்கலாம் . ஒரு வேளை மழைபெய்து காம்புகள் உறுதியாக இல்லாமல் இருக்கும் சமயத்தில் பஞ்சகாவியா நல்லபலன் தரும் . இதில் உள்ள நுண்ணூட்ட சத்துக்கள் மா பிஞ்சு உதிர்வதை தடுக்கும். மேலும் இதில் உள்ள சூடோமோனஸ் பூஞ்சணத்தை கட்டுப்படுத்தும் . டிசம்பர் 20 தேதியிலிருந்து பிப்ரவரி முதல் வரம் வரை குறைந்தது மூன்று முறை தெளிக்கலாம்
Comments
Post a Comment
Smart vivasayi