ant control for garden
முதலில் உங்கள் தோட்டத்தில் விவசாயம் இருக்கா அல்லது வெறும் நிலமா என்று பாருங்கள் .
வெறும் நிலமாக இருந்தால் செய்யவேண்டியது நன்றாக உழவேண்டும் . நன்றாக பிரட்டி போட்டு உழவேண்டும் ஏறும்போட புற்றை ஆய்வு செய்தால் 3 முதல் 4 அடிவரை வளைந்து நெளிந்து நல்ல கட்டமைப்புடன் இருக்கும் எனவே இதன் முட்டைகள் எல்லாவற்றையும் அளிக்கவேண்டுமென்றால் அதற்கு வேளாண்துறையிலோ அல்லது வெளியிலோ மோல்ட் ப்லோட் கலப்பை இருக்கும் இந்த கலப்பையை பயன்படுத்தினால் கீழ் இருந்து 2 அடி காலத்திற்கு தோண்டி மண்ணை திருப்பி போடும் இதனால் எறும்பு புற்று அழியும் .
கால்நடை மற்றும் விவசாயம் சார்ந்த வாட்ஸ்அப் குரூப் லிங்க் Part - 5
அதுவே செடிகள் இருக்கு என்றால் அதன் புத்து எங்கே இருக்குனு பாருங்கள் புற்று இருந்தால் நீரை நன்றாககொதிக்கவைத்துசுடுதண்ணீரை. புற்றுக்குள் ஊற்றி விடுங்கள் அழிந்து போகும் ஆனால் இந்த முறையை செடி அருகில் இருந்தால் பயன்படுத்த வேண்டாம் .
செடிக்கு அருகில் எறும்பு புற்று இருந்தால் 10 லிட்டர் நீருக்கு 1கிலோ வசம்பை இடித்து போட்டு ஒரு நாள் ஊற வைக்கவேண்டும் பின்பு அதை புற்றில் ஊற்றுங்கள் எறும்புகள் போய்விடும் . செடிகள் மீது அதிகம் எறும்புகள் தென்பட்டால் இந்த கரைசலை தெளிக்கலாம் .
Comments
Post a Comment
Smart vivasayi