Summer plowing and its benefits
பிப்ரவரி முடுஞ்சு மார்ச் மாதம் ஆரம்பிக்கும் இந்த காலகட்டத்துல அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் இந்த இரண்டு மாதங்களில் நாம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான வேலை கோடை உழவு . இந்த கோடை உளவு என்பது மிக முக்கியமானது எல்ல காலகட்டத்திலும் விவசாய நிலம்மாக இருக்க கூடாது , ஒரு காலகட்டத்திலாவது மண்ணை வளப்படுத்துவதும் மற்றும் சரிபடுத்துவதும் அடுத்த விவசாயத்திற்கும் தயார் செய்வதும் மிக முக்கியம் . இந்த கட்டுரையில் நாம் கோடை உழவை பற்றி பாப்போம்
இந்த கோடை காலத்தில் ஒரு நேரமாவது அல்லது குறைந்தபச்சம் ஒரு 15 நாளாவது நம்முடைய நிலத்தில் எந்த பணியும் செய்யாமல் சூடாக்கி ஒரு முறை படுத்துவது மிக முக்கியம் . அப்படி செய்வதில் முதன்மையானது நம் நிலத்தை உழுவது . இந்த நிலம் என்பது நீங்கள் ஏற்கனவே விவஸ்யம் செய்யும் நிலமாக இருக்கலாம் அல்லது ஒரு போகம் செய்யும் மானாவாரி நிலமாக இருக்கலாம் அல்லது நீண்ட காலமாக பராமரிக்காத தரிசு நிலமாக இருக்கலாம் அது ஏதுவாக இருந்தாலும் அதாவது நெல் போடுற நிலத்திலிருந்து பண்படாத நிலம் வரையிலும் இந்த காலகட்டத்தில் உழுவது மிக முக்கியம் .
நீங்கள் உழுவது சரிவுக்கு குறுக்கே உழவேண்டும் அப்படி உழுவது நல்ல பண்பட்ட நிலமாக இருந்தால் ஒன்பது கை கலப்பையை வைத்து உழுகலாம் . கொஞ்சம் கடினமாகவோ அல்லது அப்ப அப்ப விவசாயம் செய்வோம் என்கிற நிலங்களுக்கு ஐந்து கை அல்லது ஏழு கை கலப்பையை வைத்து உழுகலாம் . நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாத நிலமாக இருந்தால் அதை விவசாயத்திற்கு தயாராவதற்கு சட்டிக்கலப்பை அல்லது மண்ணை திருப்பி போடுகின்ற வகையிலான ரிவசார்பில் கலப்பை இவைகளை வைத்து நாம் உழவேண்டும் .
கோடை உழவால் கிடைக்கும் நன்மைகள்
1) மண்ணில் உள்ள சத்துக்கள் அணைத்து பகுதிகளுக்கும் சரிசமமாக கிடைப்பதற்கு வாய்ப்பாக அமையும் .
2) மண்ணில் அடியாழத்தில் இருக்கக்கூடிய கூட்டு புழுக்கள் வெளியில் வந்து , முட்டைகளும் வந்து அழிந்து நமக்கு அடுத்த பயிருக்கு தொல்லை கொடுக்காமல் இருக்கும் .
3) மண் பொலபொலப்பு தன்மை இருப்பதற்கும் , உதாரணமாக கோடை மலை பெய்தால் அது உள்ளே இறங்கி நுண்ணுயிர் பெருக்கத்தை உருவாக்கத்தை பெருக்குவதற்கும் முக்கியமானது
4) மண்ணில் ஈரப்பதம் அதிகரித்து , குறைவா தண்ணீர் கொடுத்தாலும் மண்ணின் அணைத்து அடுக்குகளுக்கும் பரவுவதற்க்கு முக்கியமானது.
5) இந்த கோடை உழவினால் மண் அரிமாணம் தடுக்கப்படும் , மேல் இருக்கக்கூடிய பொடிமண் நகராமல் நம் நிலத்திலேயே இருப்பதற்கு அதாவது பெரிய மண் துகள்களுக்கிடையே போய் ஒட்டிக்கொள்ளும்
6) தேவை இல்லாத வேர்கள் மற்றும் தேவை இல்லாத களைகளோட விதைகள் இதை எல்லாமே சூடாக்கி நீர்த்து போக செய்யலாம் எங்கெல்லாம் கோரை கிழங்கு இருக்கோ அல்லது அருகம்புல் இருக்கோ இந்த மாதிரி நிலங்களுக்கு கோடை உழவு முக்கியம் .எப்படி உழுகலாம் என்றால் 1தேதி ஒருதடவையும் வெயிலோட தன்மையை பொறுத்து 15 அல்லது 20 தேதி ஒருதடவையும் உழுகலாம் இதனால் கோரை கிழங்கும் அருகம்புல்லும் அழியும் .
7) கோடை மழையைப் பொறுத்து பலதானிய விதைப்பு செய்து மடக்கி உழுவதால் எதிர் காலத்தில் சிறந்த விளைநிலம் கிடைக்க வாய்ப்புள்ளது எங்கெல்லாம் காரா அமிலத்தன்மை அதிகமாக உள்ளது அங்கே சணப்பை , தக்கை பூண்டு விதைத்து 38 வது நாள் மடக்கி உழுகலாம் . மற்ற இடங்களில் அவுரி, கொழுஞ்சி பலதானிய விதைப்பு செய்யலாம் .
இதையெல்லாம் ஒவ்வொரு நிலத்திலையும் கோடை உழவில் செய்யவேண்டிய விஷயம்
Comments
Post a Comment
Smart vivasayi