New Agriculture Technology
இன்றைய காலகட்டத்தில் ஒரு டெக்னாலஜியோட தாக்கம் என்பது எல்லா இடத்திலும் இருக்கு . நீங்கள் ஒரு பொருளை வாங்கினாலும் சரி விற்றாலும் சரி அதை நாம் இருந்த இடத்திலே நாம் செய்ய முடியும் , ஒரு விஷயத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்மென்றாலும் அது உங்கள் உள்ளங்கைக்கே வந்துவிடும் . இது விவசாயத்திற்கும் பொருந்தும். உங்களுடைய பயிரை ஒரு பூச்சி தாக்கியிருந்தால் என்ன செய்லாம் ஒரு வெப்சைட்டில் தெரிந்துகொள்ளலாம் அல்லது ஒரு போட்டோ எடுத்து அதை பேஸ் புக்கிலோ , வாட்ஸ் ஆப்பிளோ அல்லது அல்லது அது சார்ந்த ஆஃப்ல பதிவு செய்தால் அதற்க்கான பதில் அடுத்த 5 நிமிடத்தில் கிடைத்துவிடும் . விவசாயத்தை பொறுத்தவரை உழுவதிலிருந்து அறுவடை வரை டெக்னாலஜியின் தாக்கம் இருக்கும். ஆனால் உங்கள் விவசாயத்தின் வெற்றியை நிர்ணையிக்க போவது அறுவடைக்கு பின் உள்ள விற்பனைதான் இந்த கட்டுரையில் நாம் எப்படி ஒரு இணையத்தளத்தில் விற்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம் .
ஏன் விற்பனையை இணையதளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்
காய்கறிகளாகவும் அல்லது தானிய பயிர்களாகவும் இருந்தாலும் சரி நேரடியாக சந்தையில் கொண்டுபோய் நேரடியாக விற்கும் பொழுது பேரம் பேசி விலையை குறைத்து கேட்பவர்கள் அதிகம் அதுவே இணையதளத்தை பொறுத்தவரை ஒரு fixed price வைத்து விற்க முடியும் . இதை இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லவேண்டுமென்றால் நான் ஒரு ஒருகிலோ ஆப்பிள் வாங்க வேண்டும் போகிறேன், கடைக்காரர் ஆப்பிள் கிலோ 180 என்கிறார் நான் 150 கேட்கிறேன் விலை படியாதலால் திரும்ப வந்துவிட்டேன் . அதே ஆப்பிளை இணையத்தில் தேடும்போது அதன் விலை கிலோ 200 நல்ல கவர்ச்சிகரமாக இருந்தது வாங்க தூண்டியது அதுவும் 220 ஆப்பிள் 200 என்று போட்டிருந்தார்கள் வாங்கிவிட்டேன் . கடைக்காரரிடம் 180 பேரம் பேசினேன் அதுவே இணையத்தளத்தில் பேரம்பேசாமல் 200 ரூபாய்க்கு வாங்கிவிட்டேன் . இப்பொழுது புரிகிறதா ஏன் ஒரு விவசாயி டெக்னாலஜி அல்லது இணையதளத்தை நோக்கி போகவேண்டுமென்று
உங்களுக்கென ஒரு இணையதளத்தை ஆரம்பிக்கலாம்
1) உங்கள் விளைபொருட்களை விற்பதற்கு உங்களுக்கென ஒரு வெப்சைட்டை நீங்கள் தனியாகவோ அல்லது பல விவசாயிகள் ஓன்று சேர்ந்தோ ஆரம்பிக்கலாம் .
2) நீங்கள் மட்டும் தனியாக ஆரம்பித்தால் ஓன்று அல்லது இரண்டு விளை பொருட்களைத்தான் விற்கமுடியும் பல விவசாயிகள் கூட்டாக ஆரம்பிக்க பல பொருட்களை உங்கள் இணையத்தளத்தில் விற்க முடியும்.
3) அடுத்ததாக விலை நிர்ணயிக்கும்போது மற்ற இணையதளங்களின் விலையையும் கவனத்தில் கொள்ளுங்கள் சந்தை விலையையும் கவனத்தில் கொண்டு விலையை நிர்ணயம் செய்யலாம் . குறைந்த விலை நல்ல தரம் இது நிறைய கஸ்டமர்களை உங்களுக்கு கொடுக்கும் .
Comments
Post a Comment
Smart vivasayi