Flowers and flower-based business
தமிழ்நாட்டில் பெண்களையும் பூக்களையும் நம்மால் இரண்டாக பிரித்து பார்க்க முடியாது . எவ்வளவு விலை விற்றாலும் ஒரு 20 ரூபாய்க்காவது பூவை வாங்கி தலையில் வைத்து கொள்வார்கள் . ஒரு திருவிழா ஆகட்டும் அல்லது கல்யாணம் ஆகட்டும் பூக்களே முதலிடம் வகிக்கும் அந்த அளவிற்கு பூக்கள் நம் கலாச்சாரத்தோடு பின்னி பிணைந்தது .நாம் இந்த கட்டுரையில் பூக்கள் மற்றும் பூக்கள் சார்ந்த தொழில்களை பற்றி பார்ப்போம் .
பூக்கள் சார்ந்த தொழில்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்
1) அழகு சார்ந்த பூக்கள்
2) உணவு சார்ந்த பூக்கள்
அழகு சார்ந்த பூக்கள் பொறுத்தவரை தமிழ்நாட்டில் மல்லிகை பூ , ரோஜா , சம்பங்கி , முல்லை , சாமந்தி , கனகாம்பரம்(கனகாம்பரத்தை பொறுத்தவரை மற்ற பூக்களை போன்று வாசனை இருக்காது ரோஜா போன்று அழகு இருக்காது அதன் நிறத்தை வைத்தே அதிகம் தமிழ் நாட்டில் மூன்றாவதாக அதிகம் விற்கப்படுகிறது ) இந்த வகை பூக்கள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது .
அழகு சாதன பொருட்கள்
இன்றைக்கு உள்ள நிறைய அழகு சாதனா பொருட்கள் கெமிக்கல் ஆனது . நீங்கள் இயற்கையான பூக்களை வைத்து அழகு சாதன பொருட்கள் தயாரிக்கலாம் . ஒரு அழகு நிலையம் அல்லது ஸ்பா ஆரம்பிக்கலாம்
அலங்கார பூக்கள்
பொது நிகழ்ச்சிகள் , கோயில் திருவிழாக்கள் , திருமணங்கள் போன்றவற்றிக்கு வித விதமாக அலங்காரம் செய்ய பூக்கள் பெருமளவிற்கு பயன்படுகிறது . ஒரு தனித்துவமாக பூக்களை வைத்து அலங்காரங்கள் செய்யும் போது உங்கள் தொழில் அதிக லாபம் தரும்
பொக்கே மற்றும் உலர்மலர்கள் விற்பனை
பொது நிகழ்ச்சிகள் , வரவேற்பு போன்றவற்றிற்கு பொக்கே அதிகம் தேவை படும் குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டக்கூடிய தொழிலாகும் . இதெற்கென ஒரு இணையதளம் தொடங்கி வித விதமான பொக்கேக்களை செய்து காண்பித்தாள் நல்ல விற்பனையாகும் .
வாசனை திரவியங்கள்
பூக்களில் இருந்து அதிக அளவு என்னை மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்க படுகின்றன . ஆனால் இந்த தொழில் நல்ல லாபம் கொடுத்தாலும் ஆரம்பகட்ட முதலீடு என்பது கொஞ்சம் அதிகம்
பூ விற்பனை மற்றும் ஏற்றுமதி
நீங்கள் பூக்களாக விற்கும் பொழுது பூக்களை அதிகபச்சம் 7 நாட்கள் வரைதான் சேமித்து வைக்கமுடியும் எனவே உங்களுடைய பூ விற்பனை ஒரு குறிப்பிட்ட பகுதி என்றில்லாமல் பறந்து விரிந்ததாக இருக்கவேண்டும் . அதற்கு நீங்கள் எப்படி ஏற்றுமதி செய்வது என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம் . துபாய் , அமெரிக்கா நாடுகளுக்கு பூக்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன . இந்த ஏற்றுமதி பற்றிய விவரங்களை இணையதளத்தில் நிறைய உள்ளன தெரிந்து கொள்ளலாம்
உணவு சார்ந்த பூக்கள்
உணவு சார்ந்த பூக்களை பொறுத்தவரை பெரும்பாலும் இயற்கை வைத்தியத்திற்கே பயன்படும் இவற்றை மருத்துவத்திற்காக உற்பத்தி செய்து விற்கலாம் உதாரணமாக செம்பருத்தி பூக்கள் , சூரியகாந்தி பூக்கள் . ரோஜாவிலிருந்து குல்கந்து தயாரிக்கப்படுகிறது .இதை தவிர்த்து தேனீர் மற்றும் பானங்கள் தயாரிக்க பூக்கள் பயன்படுகிறது
Comments
Post a Comment
Smart vivasayi