வரும் மார்ச் மாதத்திலிருந்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மைக்கான பயிற்சி தொடங்க போகிறது !.
ஒவ்வொரு மாதமும் அங்கக வேளாண்மை பயிற்சி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் உள்ள கோயம்பத்தூரில் நடைபெறுவது வழக்கம் . போன வருடம் கொரோனா லாக் டௌன் பிறகு சில மாதங்கள் நடத்தப்படவில்லை . பின்னர் இந்த பயிற்சி ஆன்லைன் மூலம் நடைபெற்றது .
மறுபடியும் பயிற்சி கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து மீண்டும் இந்த பயிற்சி நேரடியாக ஆரம்பிக்கப்படுகிறது . வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அங்கக துரையின் மூலம் மீண்டும் நேரடி பயிற்சி ஒவ்வொரு மாதம் 7 தேதி நேரடி தமிழ் வழியில் அங்கக வேளாண்மை பயிற்சி வரும் மார்ச்2021 முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.
என்ன விதமான பயிற்சி
இயற்கை முறையில் பயிர் சத்துக்கள் மேலாண்மை
இயற்கை முறையில் களை மேலாண்மை
இயற்கை உரம் மற்றும் அங்கக இடுபொருட்கள் தயாரித்தல்
இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு
அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள் மற்றும் பங்கேற்பாளர்களின் உறுதியளிப்புத் திட்டம்.
ஆகியத் தலைப்புகளில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது.
முன்பதிவு அவசியம்
பயிற்சி கட்டணமாக 590 பயிற்சி செய்யும் நாளன்றே செலுத்த முடியும் . முன் பதிவு முக்கியம் செய்யவேண்டும் . 7 ம் தேதி என்பது சனி, ஞாயிறு கிழமைகளில் வந்தால் அடுத்த வேலை நாட்களில் (திங்கட்கிழமை) நடைபெறும்
Comments
Post a Comment
Smart vivasayi