10 flowers that can be grown at home
நம் வீட்டு தோட்டத்திலோ அல்லது மாடி தோட்டத்திலோ எந்த அளவிற்க்கு காய்கறி வளர்கிறோமோ அந்த அளவிற்க்கு அழகுக்காகவும் ஆசைக்காகவும் வளர்க்கக்கூடியது பூக்கள் இப்படி சுலபமாகவும் ஆசையாகவும் வளர்க்ககூடிய பத்து பூக்களை பற்றி பார்ப்போம் .
1) ரோஜா
நிறைய பூக்கள் இருக்கிறது ஆனால் ஆசையாக வளர்க்கக்கூடிய பூக்களில் முதலில் இருப்பது ரோஜா பூக்கள்தான் . 100 க்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன உங்கள் பகுதியில் எந்த வகை வளரும் என்று தெரிந்து கொண்டு வளர்க்கலாம்.
2) மாரிகோல்டு
ஒருமுறை மட்டுமே பூக்ககூடிய பூவாகும் பொதுவா அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிகம் பூக்கும் இதன் நிறங்கள் நம் கண்களுக்கு அழகாக இருக்கும் (ஆரஞ்சு மற்றும் மஞ்சள் ).
3) ஜாஸ்மின்
மயக்கும் இனிமையான வாசனைக்காகவே இந்த பூக்கள் வளர்க்கப்படுகிறது. பொதுவாக அனைவராலும் வீட்டு தோட்டத்தில் வளர்க்கப்படுகிறது.
4) ஈஸ்ட் இந்தியா ரோஸ்பே
இந்த பூ இந்தியாவை பூர்விகமாக கொண்டதாகும் . ஆயுர்வேத மருத்துவ பயன்பாட்டிற்க்காக அதிகம் வளர்க்கப்படுகிறது . இதன் வெள்ளைநிறம் உங்கள் தோட்டத்திற்கு ஒரு தனி அழகைத்தரும்
5) செம்பருத்தி
வீட்டு தோட்டமானாலும் சரி மக்கள் வந்து போக்ககூடிய இடமானாலும் சரி (Public Gardens ) இதை பார்க்கலாம் வளர்பதற்க்கு மிக சுலபமானது . அதிக மருத்துவகுணம் கொண்டது , மூலிகை மருந்து தயாரிக்கவும் , மூலிகை அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது . காய்ந்த மலர்கள்
சாப்பிடுவதற்கு பயன்படுகிறது . செம்பருத்தியின் அழகு நம்மை மயக்கும் வீட்டில் வளர்க்க ஏற்றது.
6) நித்ய கல்யாணி
மாதம் பன்னிரெண்டும் பூக்க கூடிய மலர்களில் ஓன்று நித்ய கல்யாணி . மருத்துவகுணம் கொண்டது . வெள்ளை மற்றும் பிங்க் கலரில் உள்ளன .
7. Dahlia
ஒரு அழகான பூச்செடி . வீட்டில் வளர்த்து , வீட்டுக்கு முன்னாள் ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி நீரில் இந்த பூக்களை மிதக்கவிடலாம் மிக அழகாக இருக்கும் . இது , சூரியகாந்தி மற்றும் சாமந்தி எல்லாம் ஒரே குடும்பத்தை சேர்ந்தது ஆகும் .
8) சாமந்தி பூ
ஆசியாவை பூர்விகமாக கொண்ட இந்த பூக்கள் பல நிறங்களில் உள்ளன . குளிர் காலத்தில் பூக்கக்கூடிய பூவாகும் .
9) Daisy
பொதுவாக இந்தவகை பூக்களை ஹிமாலயன் பகுதிகளில் காணலாம் . இதன் வெள்ளை நிற பூக்கள் மிக அழகாக இருக்கும் . தொட்டி செடி வளர்க்க ஏற்றது . சிறிய இல்லை வெள்ளை பூக்கள் நடுவில் பெரிய மஞ்சள் நிற மகரந்தம் அனைவரையும் ஈர்க்கும் .
10) சூரிய காந்தி
இதன் மஞ்சள் நிற பூக்களை பார்ப்பவர்களுக்கு சந்தோசத்தையும் மற்றும் புத்துணர்ச்சியும் கொடுக்கக்கூடியது . இந்த செடியை வளர்ப்பதன் மூலம் உங்கள் வீட்டிற்கு அழகை கூட்ட முடியும்
Comments
Post a Comment
Smart vivasayi