ஒரு இயற்கை வேளாண்மை பண்ணையை எப்படி உருவாக்கலாம்
நம்முடைய உணவு முறை என்பது கால் நூற்றாண்டில் நன்றாக மாறிவிட்டது . இயற்கை முறையில் விளைந்த உணவு பொருட்களின் சுவை கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது . இப்பொழுது உள்ள காய்கறிகளோ அல்லது உணவு பொருட்களோ எந்தஅளவிற்க்கு நச்சு தன்மையோடு உள்ளது அது எப்பொழுது நம் உடம்பை பாதிக்கும் என்பது நமக்கு தெரியாது .
ஆனால் கடந்த 10 வருடங்களாக தமிழ் நாட்டில் நிறைய விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகிறார்கள் . அவ்வளவு ஏன் நிலம் இல்லாதவர்கள் கூட நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்கிறார்கள் .இந்த கட்டுரையில் ஏற்கனவே செயற்கை விவசாயம் செய்துகொண்டிருப்பவர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாறினால் என்ன செய்யவேண்டும் அல்லது புதிதாக இயற்கை விவசாயம் செய்பவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை பார்ப்போம் .
லட்சியத்தில் உறுதியாக
நீங்கள் இயற்கை விவசாயம் செய்ய முடிவெடுத்துவிட்டால் அதில் வெற்றி அடையும் வரை நீங்கள் உறுதியாக இருக்கவேண்டும் . ஏன்எனில் , இயற்கை விவசாயத்தில் உடனடியாக லாபத்தை எதிர்பார்க்க முடியாது அதுவும் செயற்கை இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறும்பொழுது லாபம் கிடைப்பது சற்று கஷ்டம் அது உங்கள் லட்சியத்தை அசைத்து பார்க்கும்
பயிற்சி தேவை
இயற்கை விவசாயத்தில் முக்கிய கோட்ப்பாடு செலவை குறைத்து லாபத்தை அதிகரிப்பது . அதற்கு இயற்கை உரங்கள் , பூச்சி விரட்டிகள் வெளியில் வாங்காமல் தேவையானவற்றை நாமே தயாரிப்பது, அதை எப்படி தயாரிப்பது, எந்த தருணத்தில் இயற்கை இடுபொருட்கள் கொடுக்கவேண்டும் என்பதை நாம் தெளிவாக கற்று கொள்ளவேண்டும் இதற்கு தமிழ் நாடு இலவசமாக கூட கற்றுத்தருகிறார்கள் (TNAU ,வானகம் , பிரிட்டோ ராஜ் ) சந்தேகங்களுக்கும் பதில் தருவார்கள்.
நமக்கு எது உதவக்கூடியது
பயிற்சியை தவிர இயற்கை விவசாயத்தில் நமக்கு உதவக்கூடியது எது என்பதை நாம் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும் உதாரணமாக இயற்கை விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் , வாட்ஸ் ஆஃப் குழுக்கள் மேலும் இயற்கை விவசாயம் சம்பந்தப்பட்ட விவரங்கள் இணையதளங்கள் உள்ளன அவற்றையும் அறிந்து வைத்திருக்க வேண்டும் . இறுதியாக இது சம்பந்தப்பட்ட வேளாண்மை கல்லூரிகள் ஆராய்ச்சி நிலையங்கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் இது உங்களுக்கு அங்கக சான்றிதழ் வாங்க மிக உதவியாக இருக்கும் .
இயற்கை விவசாயத்தில் திட்டமிடல்
இது மிக முக்கியமாக கவனிக்க படவேண்டிய ஓன்று. இந்த திட்டமிடலில் இரண்டு மிக முக்கியமானது ஓன்று முதலீடு மற்றொன்று சந்தை படுத்துதல் . முதலீடு என்று பார்த்தல் விதை , மற்றும் பயன் படுத்தக்கூடிய இயந்திரங்கள் , வாடகைக்கு எடுத்தாலும் சொந்தமாக வாங்கினாலும் அதன் முதலீடு கொஞ்சம் அதிகம் . அடுத்து இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தை படுத்துதல் கவனத்தில் கொள்ளவேண்டும் நீங்கள் விற்பனையை சரியாக திட்டமிடவில்லையெனில் லாபம் இருக்காது
Comments
Post a Comment
Smart vivasayi