விவசாய தங்க நகை கடன் கொடுக்கும் வங்கிகள் மற்றும் வட்டி விகிதம்
நீங்கள் டிராக்டர் வாங்குவதற்கு கடன் கேட்டாலும் சரி அல்லது ஒரு மாட்டு பண்ணை ஆரம்பித்தாலும் சரி உடனே கிடைக்காது சற்று காலதாமதமாகும். ஆனால் ,விவசாயிகளுக்கு உடனடியாக கிடைக்கக்கூடிய கடன்களில் ஓன்று இந்த தங்க நகை கடன் .
பயிர் சாகுபடிக்காக வாங்கலாம் , இயந்திரங்கள் அல்லது நீர்ப்பாசன உபகரணங்கள் வாங்குவதற்காக வாங்கலாம் அல்லது அறுவடை பின்சார் வேலைகளுக்காக வாங்கலாம் , முக்கியமாக விவசாய தங்கநகை கடனை அரசாங்கம் தள்ளுபடி செய்துவிடும் என்ற நம்பிக்கையிலும் வாங்கலாம். எது எப்படி இருந்தாலும் விவசாயத்திற்காக வாங்கும் தங்க நகை கடன் கொடுக்கும் வங்கிகளில் வட்டியின் அளவு , கடன் வாங்கும் அளவு , திரும்பச்செலுத்தும் கால அளவு மற்றும் கொடுக்கும் பணத்தின் அளவு ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும் . இதை பற்றி தெரிந்து கொள்வது அவசியம் அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம் .
விவசாய தங்க நகை கடன் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை
கடன்தொகை
ஆயிரம் முதல் 10 கோடி வரை கொடுக்கப்படுகிறது நாம் கவனிக்க வேண்டியது 1 கிராமிற்கு எவ்வளவு தருவார்கள்
வட்டி விகிதம்
7 சதவீதத்திலிருந்து ஆரம்பிக்கும் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்
திரும்ப செலுத்துதல்
மொத்தமாக செலுத்தவேண்டும் அல்லது தவணை முறையில் செலுத்தலாமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
தவணை காலம்
பொதுவாக 1 மாதத்திலிருந்து 24 மாதம் வரை ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்
விவசாய தங்கநகை கடன் கொடுக்கும் வங்கிகள் மற்றும் அவற்றின் வட்டி விகிதம் பற்றி பார்ப்போம்
SBI bank
நீங்கள் கொடுக்கும் நகையின் எடையை பொறுத்து கடந்தரப்படும் திரும்ப செலுத்தும் தவணைக்காலம் 1 முதல் 3 வருடம் வரை . வட்டி விகிதம் 7 சதவிதத்திலிருந்து இருக்கும் . கட்டணம் கிடையாது
Axis Bank Gold Loan For Farmers
குறைந்தது 25000 முதல் 200000 லச்சம் வரை வாங்கலாம் திரும்ப செலுத்தும் தவணைக்காலம் 12 , வட்டி 13 சதவீதத்திலிருந்து இருக்கும் +ப்ரோசசிங் பீஸ் 0.5 + GST இருக்கும்
Federal Bank Agri Gold Loan
குறைந்தது 1000 முதல் 1.5 கோடி வரை கடன் கொடுக்கப்படுகிறது . 6 முதல் 12 மாதம் வரை திரும்ப செலுத்தும் தவனைக்காலம் . வட்டி 8.50 சதவீதத்திலிருந்து இருக்கும் ப்ரோசசிங் பீஸ் 500 முதல் 1500 வரை ஆகும்
Bank of Baroda Agriculture Gold Loan
25 லச்சம் வரை தருவார்கள் திரும்ப செலுத்தும் தவணைக்காலம் 12. வட்டி 8.65 சதவீதத்திலிருந்து இருக்கும் +ப்ரோசசிங் பீஸ் 3 லச்சம் வரை கிடையாது அதற்கு மேல் 0.25+ GST உடன் கட்ட வேண்டும்
IDBI Agri Gold Loan
குறைந்தது 10000 முதல் 5 லச்சம் வரை கடன் கொடுக்கப்படுகிறது . 1 முதல் 24 மாதம் வரை திரும்ப செலுத்தும் தவனைக்காலம் வட்டி விகிதம் 7.70 சதவிதத்திலிருந்து இருக்கும் . கட்டணம் கிடையாது.
Indian Bank
மொத்த நகையிலிருந்து 85 % கடனாக கொடுப்பார்கள் ஒருவருடம் வரை தவணை திரும்ப செலுத்தும் காலமாகும் . வட்டி விகிதம் 7.00சதவிதத்திலிருந்து இருக்கும் . கட்டணம் கிடையாது
ICICI BANK GOLD LOAN
குறைந்தது 10000 முதல் 10,000,000 வரை கடன் கொடுக்கப்படுகிறது. 3 முதல் 12 மாதம் வரை திரும்ப செலுத்தும் தவனைக்காலம். வட்டி விகிதம் 10.00சதவிதத்திலிருந்து இருக்கும்.
Comments
Post a Comment
Smart vivasayi