What to do when flowering plants
பூ காயாக மாறுவதற்கு சில காரியங்கள் செய்ய வேண்டும் அதே சமயம் புழு மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்துவதற்கும் சில விஷயங்கள் செய்ய வேண்டும் . முதலில் பஞ்சகாவிய அல்லது தேமோர் கரைசல் அல்லது ஈ எம் கரைசல் ஏதாவது ஒன்றை அதிகாலை நேரத்திலோ இல்லை மாலை வேளைகளில் தெளித்து பூக்களை நிலை படுத்திக்கொள்ள வேண்டும் .
பெவேரிய பேசியான மற்றும் வெர்டிசீலியம் லக்கானி ஏதாவது ஒன்றை 10 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது 12 நாட்களுக்கு ஒரு முறையோ தெளித்து புழு பூச்சி இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும். இரண்டையும் ஒரே சமயம் தெளிக்காமல் ஐந்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம் . இது இல்லையென்றால் கற்பூரக்கரைசல் அக்னி அஸ்திரம் தெளிக்கலாம். இப்படி செய்வதால் பூக்கள் அதிகமாக பூத்து , காய்கள் நன்றாக பிடித்து நல்ல வருமானமும் கிடைக்கும்
Comments
Post a Comment
Smart vivasayi