What to do after the jasmine flower pruning is over
சூடோமோனஸ்
10 லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் கலந்து தெளிக்கவேண்டும் . ஓவுவொரு தூருக்கும் 5 மில்லி அல்லது 10 மில்லி யாவது தூரில் இருக்கும்படி ஊற்றவேண்டும் , அதாவது 200 லிட்டருக்கு 1 லிட்டர் கலந்து அதுல ஒரு ஒரு லிட்டர் எடுத்து தூருக்கு ஊற்றிவிடவேண்டும் இரண்டையும் ஒரே நாளில் செய்யவேண்டும்
மல்லிகை செடியின் இலைகள் முழுமை அடையவேண்டும்
இதில் இருந்து ஒருநாள் அல்லது இரண்டு நாள் விட்டு மாலை வேளையில் 10 லிட்டர் தண்ணீரில் 200 அல்லது 300 மில்லி பஞ்சகாவியா அல்லது ஏ.எம் கரைசல் மாலைவேளைகளில் தெளிக்கவேண்டும் இதை வாரத்தில் இரண்டு தடவை தெளிக்கவேண்டும் அதேபோல் தரை வழி 200 லிட்டருக்கு 1 லிட்டர் மீன் அமிலம் கலந்து ஒவ்வொரு பயிருக்கும் இரண்டு லிட்டர் ஊற்றி விடவேண்டும் . இந்த மாதிரி செய்வதால் மல்லிகை செடியின் இலைகள் முழுமை அடையவேண்டும்.
இலை பெருக்கம் அடைய அதாவது கவாத்து முடிந்து இதுயெல்லாம் முடிந்து இலை முழுமை அடைய 22 நாட்கள் ஆகும் அதன் பின்பு அரப்பு மோர் கரைசல் கொடுத்தால் பூ எடுக்க ஆரம்பிக்கும். அப்பவும் மீன் அமிலம் தரைவழி கொடுக்கவேண்டும் . எருக்கு இலை கரைசல் தெளிக்கலாம் மற்றும் தரை வழியும் ஊற்றிக்கொள்ளலாம் . இவ்வாறு செய்வதால் மல்லிகை மகசூல் அதிகமாகும் .
Comments
Post a Comment
Smart vivasayi