What can be done to turn the flowers into pods on the tree
மாமரத்தில் பூக்கள் நன்றாக பூப்பதற்கு அடிப்படையில் ஒரு சில சத்துக்கள் வேண்டும். அந்த சத்துக்கள் இருந்தால் இருக்கக்கூடிய கொத்து பூவில் எது திறமையான பூவோ எளிமையாக சூழ் பிடிச்சு நமக்கு காலியாக மாறும் இதை அதிகப்படுத்துவதற்கு நாம் என்ன செய்யலாம் என்றால், பஞ்சகாவியா, தேமோர் கரைசல் , ஈ எம் கரைசல் போன்றவற்றை தெளிக்கலாம் .
மகரந்த சேர்க்கை நடை பெறுவதற்கு
இதை எப்படி தெளிக்கவேண்டுமென்றால் 10 லிட்டருக்கு 200 மில்லி ஈ .எம் கரைசல் அல்லது 10 லிட்டருக்கு அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை தேமோர் கரைசல் பயன்படுத்தலாம். இதை நேரடியாக பூக்கள் மீது அடிக்காமல் கொஞ்சம் தள்ளி பொழியுற மாதிரி அமைப்புள்ள பூக்கள் மீது தெளித்தால் மகரந்த சேர்க்கை நடை பெறுவதற்கு உதவியாக இருக்கும் , அதாவது அதன் வாடை தேனீக்களை கவர்ந்து இழுப்பதற்கு வாய்ப்பாக இருக்கும் .
பஞ்சகாவிய தெளிப்பதால்
இப்படி தெளிப்பதால் பூக்களுக்கு ஆரம்பகால சத்துக்கள் கொடுப்பதற்கு பெரிய வாய்ப்பாக இருக்கும் மேலும் மற்றவற்றை விட பஞ்சகாவிய தெளிப்பதால் அதில் 40 சதவீதம் சூடோமோனஸ் இருப்பதால் மாமரத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தாலும் அதை சரி செய்து பூக்கவைப்பதில் அதன் பங்கு மிக முக்கியம் . இதை பூக்கள் பூக்க ஆரம்பித்ததிலிருந்து காய் சுண்டுவிரல் அளவு வரவரைக்கும் ஒரு மூன்று அல்லது நான்கு தடவை கொடுக்கலாம். இது கொஞ்சம் செலவு அதிகம்தான் ஆனால் நல்ல பலன் கொடுக்கும் . முடியவில்லை எனில் தாராளமாக தேமோர் கரைசல் கொடுக்கலாம்
Comments
Post a Comment
Smart vivasayi