Sunflower plant cultivation More Income five important points
இந்தியாவில் 80 மற்றும் 90 வருடங்களில் சமையலுக்கு சூரியகாந்தி என்னை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் அதை பயிர் செய்யும் பரப்பளவு அதிகமானது.
இதை விவசாயிகள் பயிரிடுவதற்க்கு 5 முக்கிய காரணங்கள் உள்ளன .
1) சூரியகாந்தி ஒரு குறுகிய காலப்பயிர் ஆகும்.80 முதல் 115 நாட்கள் ஆகும் . ஜயத் பயிர் பருவதிற்க்கு ஏற்றது . ரபி மற்றும் கரிப் பருவத்திற்க்கு இடையில் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் தரக்கூடிய மாற்று பயிராக இருக்கும்.
2) அடுத்ததாக இதன் ரகங்கள் பற்றி சொல்லலாம் PAC 36 சூரியகாந்தி ரகம் விவசாயிகளுக்கு சிறந்த வாழ்வாதாரமாக இருக்கிறது . சூரியனை விரும்பும் பயிர் என்பதால் மானாவாரியில் கூட பயிர் செய்யலாம் .
3) இது மாறுபட்ட மண் மற்றும் வேளாண் காலநிலை நிலைகளில் வளரக்கூடியது.
4) சூரியகாந்தியில் பூச்சி நோய் மேலாண்மை செய்வது எளிமை
5) இது விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை தருவதால் பணப்பயிர் என்றே அழைக்கப்படுகிறது . இது ஒரு லாபகரமான பயிராகும் .
சூரியகாந்தி பயிர் செய்யும்போது
கவனிக்கவேண்டியவை
1) சரியான ரகங்களை தேர்ந்தெடுத்தல்
உங்கள் பகுதிக்கு எந்த ரகம் என்பதை அறிந்துகொண்டு பயிர் செய்தால் நல்ல அதிக விளைச்சல் வரும் , நல்ல விதைகள் வரும் ,எண்ணையின் அளவும் தரமும் நன்றக இருக்கும் TNAUSUF 7 (CO 4), TNAU Sunflower Hybrid CO 2, COSFV 5 போன்ற ரகங்கள் தமிழ்நாட்டில் பயிர் செய்யப்படுகிறது
2) பருவத்தே பயிர்செய்
பருவம் என்பது மிக முக்கியம் நீண்டகால ரகமாக இருந்தால் விரைவாகவும் குறுகியகால ரகமாக இருந்தால் கொஞ்சம் இறுதியாகவும் விதைக்கலாம் .
கரிஃப் பருவத்தில் ஜூலை முதல் வாரமும் , ரபி பருவத்தில் அக்டோபர் 1 முதல் 14 நாட்களுக்குள்ளும் ஜயத் பயிர் பருவத்தில் ஜனவரி கடேசி அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலும் விதைக்கலாம்
3) இயற்கை இடு பொருட்கள்
சரியான காலத்தில் இயற்கை இடுபொருட்கள் கொடுத்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் சூரியகாந்தியை பொறுத்தவரை சாம்பல் , மணி சத்து மற்றும் போரான் சத்து மிக முக்கியமாகும் .
4) நீர் மேலாண்மை
9 முதல் 10 நாள் இடைவெளியில் நீர் விடவேண்டும் 10 முதல் 12 நாள் இடைவெளியில் பிப்ருவரியிலும் 8 முதல் 10 நாள் இடைவெளியில் மார்ச்சிலும் 6 முதல் 8 நாள் இடைவெளியில் ஏப்ரலில் 4 முதல் 6 நாள் இடைவெளியில் மே நீர் விடலாம் அதேசமயம் நீர் மேலாண்மை என்பது மண்ணின் தன்மையும் காலநிலையையும் பொறுத்து அமையும் .
5) பூச்சி நோய் மேலாண்மை
இயற்கை வேளாண்மையை பொறுத்தவரை வருமுன் காப்பதே சிறந்தது சூரியகாந்தியில் என்னவகையான பூச்சி அல்லது நோய்கள் தாக்கும் என்பதை தெரிந்து வைத்துஇருக்க வேண்டும் அதற்கேற்ற ரகங்களை தேர்தெடுக்கலாம் அல்லது பூச்சி விரட்டிகளை கைவசம் வைத்திருக்கலாம் .
Comments
Post a Comment
Smart vivasayi