Strategies for high seed onion production (sambar onion)
சாம்பார் வெங்காயம் எனப்படும் சிறுவெங்காயம் மற்ற பயிர்களைவிட மிகக்குறைவான வாழ்நாளைக் ( 65 - 80 நாட்கள்) கொண்டுள்ளதால் அதனை பயிரிட விதைகளைவிட வெங்காய Bulb- களை நடவதே சிறந்தது.
சாம்பாருக்கு விளைவிக்கப்படும் சிறுவெங்காயம் நடப்பட்டதிலிருந்து மூன்று முதல் நான்கு பகுதியாக பிரிந்து வளர்ந்து விளைவதே சமையலுக்கு நன்றாக இருக்கும் .
வெங்காய சாகுபடியில் Bulb- கள் அதிகமாக பிரியாதிருப்பதால் விவசாயிகளுக்கு மகசூல் சுமாராகவே இருந்தாலும் பயனாளிகள் மட்டத்தில் நல்ல வரவேற்ப்பை பெறுகிறது.
ஆனால் விதைகளுக்காக பயன்படுத்தப்படும் Bulb- கள் பெரிய அளவில் இருந்தால் விதையளவு அதிகரித்து சாகுபடி செலவு மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பொதுவாக விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதை வெங்காயத்தினை முதல் சீசனில் தாங்களே உற்பத்தி செய்வது வழக்கம்.
ஆனால் அவர்களுக்கு எல்லா வெங்காய உற்பத்தியும் ( சமையல் மற்றும் விதை) ஒன்றே.
விதை வெங்காயம் சிறிய சைஸ் ஆக , அதிக அளவில் உற்பத்தி செய்வதால் அவர்களுக்கு மிகுந்த இலாபமே.
அதற்கு ஒரு மிகச்சிறிய தொழில்நுட்பத்தினை மட்டுமே பயன்படுத்தினால் அதிக எண்ணிக்கையிலான விதை Bulb- கள் கிடைத்திட வாய்ப்புள்ளது.
நடப்போகும் விதை வெங்காயத்தினை மெலிதான மூட்டையில் கட்டி 10 கிராம் ஜிப்ரலிக் ஆசிட்
( Gibberallic acid ) என்ற வளர்ச்சி ஊக்கி மற்றும் தலா 2 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றினை போதிய அளவு தண்ணீரில் சுமார் 10 நிமிடங்கள் நன்கு நனைத்து நடவேண்டும்.
இந்த விதை நேர்த்தி மூலம் நட்ட வெங்காயம் இருநாட்களிலேயே அதிகவேர்கள் பிடித்தும் , அதன்பின் அளவிற்கதிகமான துார் பிரிந்தும் எந்த சீசனாக இருந்தாலும் ஏக்கருக்கு 100 மூட்டைகளுக்கு குறைவில்லா மகசூல் கிடைக்கும்.
அடுத்த சீசனில் மேற்கண்டவற்றைக் கொண்டு நடப்படும் வெங்காய Bulb அளவில் சிறிதாக இருந்தாலும் அதனால் உற்பத்தி பாதிப்பு எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.
இது ஒரு சிறு தொழில்நுட்பமாகவும் செயல்படுத்த எளிமையாக இருப்பதாலும் சிறு வெங்காய விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Comments
Post a Comment
Smart vivasayi