Sampangi seed treatment
சம்பங்கி கிழங்கு பொறுத்தவரை இடைவெளி வரிசைக்கு வரிசை ஒன்றை அடியும் பயிருக்கு பயிர் முக்கால் அடி (அதாவது 20 சென்டிமீட்டர் ) நடலாம் . நம்முடைய நடவுமுறையில் ஓவுவொரு கிழங்கும் 30 கிராம் அளவுள்ள ஒரே மாதிரியான கிழங்குகளை எடுத்து கொள்ளலாம் . கிழங்கோட சைசில் மிகவும் சின்னதாக உள்ளதெல்லாம் ஒதுக்கிவிடவேண்டும் அதேபோல உடைந்தது , அழுகியது, கிழிந்த மற்றும் பூஞ்சாணம் புடித்த கிழங்குகளை நீக்கி விடவேண்டும் .இந்த சம்பங்கி கிழங்குகளை ஒரு ட்ரம்மில் ஒரு உத்தேசமா 100 லிட்டர் தண்ணீருக்கு , அதாவது 1 கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் , 30 கிராம் அசோஸ்பைரில்லும் , இந்த அளவுக்கு தண்ணீரில் கலந்து கொள்ளவேண்டும் அதில் இந்த கிழங்குகளை போட்டு குறைந்தபச்சம் 5 முதல் 10 நிமிடம் இருந்தால் போதும் அதை எடுத்து நிழலில் காயவைத்து விதைக்கலாம் ( உதாரணமாக இன்று 10 மணிக்கு விதைக்க போகிறீர்கள் என்றால் காலை 6 மணியில் இருந்து செய்தால் நன்றாக இருக்கும்
வயலில் பார் பிடித்திருப்போம் பாரோட பக்கவாட்டு பகுதியிலிருந்து தரையிலிருந்து சுண்டு விரல் உயரத்தில் நடலாம். விதைநேர்த்திக்கு பயன்படுத்திய நீரை ஊற்றிவிடலாம்.
Comments
Post a Comment
Smart vivasayi