Natural method marigold crop management
தமிழ் நாட்டில் பயிர்செய்யப்படும் ரகங்கள் கோ1, கோ 2 மற்றும் எம்.டி.யு 1 இதில் கோ 1 , எம்.டி.யு 1 மஞ்சள் நிற பூக்களை கொடுக்கும் கோ 2 கருபழுப்பு நிறத்தில் பூக்களை கொடுக்கும்
கார அமிலத்தன்மை 6 ல் இருந்து 7 வரை இருக்கலாம் எல்லா வகை மண் வகைகளில் வளர்க்கலாம் என்றாலும் நீர்தேக்கமுள்ள வடிகால் வசதி குறைவாக உள்ள களிமண் நிலங்கள் சாமந்தி பூவிற்கு ஏற்றது. பகல் பொழுது குறைவாகவும் இரவு நீண்டதாகவும் உள்ள காலங்களில் நன்றாக பூக்கும் .
நிலத்தை குறைந்தது மூன்று முறை உழவேண்டும் கடேசி உழவின் போது இருபத்தைந்து டன் தொழு உரம் போடவேண்டும். நேரடி விதைப்பை விட நாற்று பாவி வயலில் நடுவது நல்லது செடிக்கு செடி 30 cm இருப்பது நல்லது ஒரு ஏக்கருக்கு 40 முதல் 45ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும் வெளியிலிருந்து வாங்கினாலும் சரி நீங்களே நாற்று பாவினாலும் சரி வயலில் நடுவதற்கு முன்பு ஏக்கருக்கு 100 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி சூடோமோனஸ் கலந்து அரைமணிநேரம் ஊறவைத்த பின்னர் நடலாம் .
பூச்சி நோய் கட்டுப்பாடு
சாமந்தியை சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன், அசுவினி இலைப்புழுஅதிகம் தாக்கும்.வேப்பெண்ணை கரைசல் கற்பூரகரைசல் மற்றும் இஞ்சி பூண்டு கரைசல் ஆகியவற்றை தெளிப்பதன் மூலம் இந்த பூச்சிகளை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்.
பூக்கள் விழாமல் இருக்கவும் அதிக பூக்கள் பூப்பதற்கு எருக்கு கரைசல் கொடுக்கலாம்
7 நாட்களுக்கு ஒரு முறை இ .எம் கரைசல் கொடுக்கலாம் முடிந்தளவு நீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும் நடவு செய்த 22 நாட்களில் இருந்து பூக்க ஆரம்பிக்கும் ஏக்கருக்கு 10 டன் வரை மகசூல் கிடைக்கும் .
Comments
Post a Comment
Smart vivasayi