Jackfruit fungal disease control
பலா மரம் வளர்ப்பில் சில விஷயங்களை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும் .
மழை பெய்யும் மாதங்கள் அதாவது ஆகஸ்ட் , செப்டெம்பர் அந்த காலகட்டத்திலும் ஜனவரி 15 பின் உள்ள மாதங்களிலும் மாதம் ஒரு முறையென இரண்டுதடவை 10 லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் கலந்து மரத்தை மேலிருந்து கீழ் வரை நன்றாக நனைத்து தெளிக்கவேண்டும் . பொதுவா இப்படி தெளிக்கும்போது பூஞ்சி தொற்று அகன்று , காம்புகள் வழியா பழங்களில் நகர்வது தடுப்பதற்கு ஒருவாய்ப்பாக இருக்கும் , ஆகவே சூடோமோனஸ் , விரிடி அல்லது பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் மூன்றில் ஏதாவது ஒன்றை கலந்து மரங்கள் மீது தெளிப்பது நல்லது .
பழ ஈ காண பொறிகள் வைக்கவேண்டும் குறைந்தபச்சம் ஒரு ஏக்கருக்கு 10 என்ற எணிக்கையில் வைப்பது நல்லது அதை தவிர்த்து கருவாட்டு பொறி வைக்கலாம் அல்லது சூரியஒளியில் இயங்கக்கூடிய விளக்கு பொறி வைக்கலாம் . இப்படி வைக்கும்பொழுது நாம் பலா காய்களை தாக்கக்கூடிய ஈக்களை கட்டுப்படுத்தலாம் . பூவிலிருந்து ஒரு ஜான் வரக்கூடிய காய்கள் அமைப்பில் பழ ஈக்கள் தாக்காமல் கட்டுப்படுத்திவிடலாம்
பலா சின்ன காயாக இருக்கும் பொழுது பெவேரிய பேசியான 10 லிட்டருக்கு 75 மில்லி கலந்து இரண்டுதடவை அடித்துவிட்டால் (1வது மற்றும் 14வது நாள் ) பூஞ்சாணத்தை கட்டுப்படுத்திவிடலாம்
Comments
Post a Comment
Smart vivasayi