How to make castor oil trap?
தென்னையில் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது .
அரையடி பானையை தரையோடு தரையாக புதைத்து வைக்கவேண்டும் பானையோட வாய்ப்பகுதி தரையோடு ஒட்டி இருக்கவேண்டும் . ஒரு வண்டு நடந்துவந்து பானைக்குள் விழவேண்டும் அந்த அமைப்பில் புதைத்து வைக்கவேண்டும் .
அந்த பானையில் பாதியளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் மூணு கைப்பிடி ஆமணக்கு புண்ணாக்கை கலந்துவிடவேண்டும்
பப்பாளிக்காய் ஒரு கைப்பிடி அளவு இருந்தால் அதை நாளாக வெட்டி உள்ளே போடலாம்
அல்லது அரிசி வடிகட்டிய கஞ்சி இருந்தால் ஓன்று அல்லது இரண்டு டம்ளர் ஊற்றி விடலாம்
அல்லது இளநி தண்ணீர் கிடைத்தால் ஓன்று அல்லது இரண்டு டம்ளர் ஊற்றி விடலாம்
ஒரு குறுகிய காலத்துல 10 அல்லது 15 நாட்களில் வண்டு சேரும் அதை அழித்துவிடலாம் பின்பு பானையை சாணம் போட்டு நன்கு கழுவிவிட்டு மறுபடியும் மற்றொரு இடத்தில வைக்கலாம். கழுவாமல் வைத்தால் பூச்சி இறந்த வாடை மற்ற பூச்சிகளை வர விடாது .
ஒரு ஏக்கருக்கு ஏழு எணிக்கையில் வைக்கலாம் . அதேசமயம் இடங்களை மாற்றி மாற்றி வைப்பதும் நல்லது . மூன்று மாதத்திற்கு இதை தொடர்ந்து செய்யலாம் ஏன்எனில் முதலில் பெரியவண்டுகள் விழும் புதிதாக பொறித்த வண்டுகள் மெதுவாக வரும் .
Where to get castor cake
ReplyDelete