How can we check the quality of the seed at home
ஒரு வீட்டு தோட்டமோ அல்லது மாடி தோட்டமோ நமக்கு முக்கியத்தேவை விதை . அந்த விதையை நீங்கள் வெளியிலிருந்து வாங்கியிருக்கலாம் அல்லது விதையை வாங்கி ஆறு மதமோ அல்லது ஒரு வருடமோ பயன்படுத்தாமல் வைத்திருக்கலாம் , தற்பொழுது போட்டால் முளைக்குமா என்ற சந்தேகம் வரலாம் அதற்க்கு வீட்டிலேயே நீங்கள் சோதனை செய்து பார்க்கலாம் .
சில விதைகள் நீண்ட ஆயுளை கொண்டிருக்கும் சில விதைகள் குறைந்த வயதை கொண்டிருக்கும் . நாம் வைத்திருக்கும் விதைகள் முளைக்குமா என்பதை அறிய இரண்டு சோதனைகள் செய்யலாம் .
நீர் பரிசோதனை
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் நீரை ஊற்றி கொஞ்சம் விதைகளை அதில் போடுங்கள் , விதை முழுகுகிறதா அல்லது மிதக்கிறதா என்று பாருங்கள்
விதை மூழ்கியிருந்தால் தரமாணவிதை நீங்கள் பயிர் செய்ய பயன்படுத்தலாம்
விதை மிதந்துகொண்டிருந்தால் பயிர் செய்ய ஏற்ற விதை அல்ல , அது முளைக்காது ,
விதை முளைப்பு சோதனை
ஒரு ஈரத்துணியை எடுத்துக்கொள்ளுங்கள்
அந்த துணியில் 10 விதையை வரிசையாக வையுங்கள்
அதை மடித்து ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து மூடி வையுங்கள்
நேரடி சூரிய ஒளி படாமல் வைக்கவேண்டும்
தினமும் திறந்து பாருங்கள் அதேசமயம் துணியின் ஈரபதத்தையும் சரிபார்த்துக்கொள்ளவும்
ஈரப்பதம் குறைந்து இருந்தால் கொஞ்சமாக ஈரப்படுத்து கொள்ளவும்
ஒவ்வொரு விதைக்கும் முளைக்கும் நாள் மாறுபடும் உதாரணமாக கீரை விதைகள் 2 அல்லது 3 நாட்களில் முளைத்துவிடும் எனவே ஒரு வாரம் கழித்து பார்க்கும் போது ஐந்துக்கும் மேற்பட்ட விதைகள் முளைத்திருந்தால் தரமான விதைகள் நீங்கள் தாராளமாக பயிர் செய்யலாம் . சரியாக 5 விதை மட்டும் முளைத்திருந்தால் அதற்கு காலநிலை கூட காரணமாக இருக்கலாம் . அதற்கும் குறைவாக இருந்தால் வேண்டாம் .
அதே சமயம் இந்த சோதனை செய்யும்போது சரியான பருவம்தான் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் , இல்லையெனில் விதை உறக்கத்தில் இருக்கலாம் .
Comments
Post a Comment
Smart vivasayi