Fungal infection of mango tree
மிக நீளமான மழை அதாவது 7 நாள் 10 நாள் இப்படி மழை பெய்யும் நாட்களில் பொதுவா மானாவாரியாக இருக்கக்கூடிய தோட்டக்கலை பயிர்கள் எல்லாவற்றிலும் பூஞ்சை தொற்று வருவது வாடிக்கை
. பூமியில் உள்ள தவறான பூஞ்சைகள் மா மரத்தின் உடம்பு வழியாக நகர்ந்து கிளைகள் வழியாக போய் காம்புகள் வழியாக போய் பழங்களை தாக்குவது பொதுவான செயல் . அதில் உள்ள பூஞ்சைதான் படத்தில் காண்பிப்பது போல் வெள்ளையாக தெரியும் அல்லது நீல நிற படலங்களாக தண்டுகளில் இருக்கும் இப்படி அறிகுறிகள் தெரிந்தாலே அடுத்து பழங்களை தாக்க போகிறது என்று அர்த்தம்
இதை தடுப்பதற்கு சூடோமோனஸ் 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி கலந்து மாமரத்தின் தண்டுகள், இலைகள் ,காம்புகள் , தெளிக்கவேண்டும் மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பு அதாவது அக்டோபர் 1 தேதியிலிருந்து 15 நாள்களுக்கு 1 முறை தெளிக்கவேண்டும். ஒருவேளை பூஞ்சனா நோய் வந்துவிட்டால் இதை தெளிப்பதுடன் பேசில்ஸ் சப்ஸ்டில்ஸ 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கலாம் . பூஞ்சை அதிகம் தாக்கிய அல்லது தேவை இல்லாத கிளைகளை நீக்கி விடலாம்
Comments
Post a Comment
Smart vivasayi