Ant control in the tree
இவ்வகை எறும்புகள் புற்று இருக்காது ஏதாவது ஒரு இடத்தில் கூடுகட்டி இருக்கும். இனப்பெருக்க காலத்திற்க்காக மரத்திற்கு வந்திருக்கலாம் . மரத்தில் அல்லது அருகில் ஏதாவது கூடு இருக்கிறதா என பார்த்து கொள்ளவும் .
பொதுவா 10 லிட்டர் தண்ணீருக்கு 200 கிராம் மிளகுத்தூள் (கொஞ்சம் பணம் அதிகம்தான் ) கலந்து தெளிக்கலாம் . அல்லது எருக்கு கரைசல் தயார் செய்து அதை 7 லிட்டர் 3 லிட்டர் கலந்து தெளிக்கலாம். சாம்பல் இருந்தால் நேரடியாக தூவி விடலாம் .
இந்த எறும்புகள் எதற்காக சுற்றுகிறது அறிய வேண்டும் உதாரணமாக மாவு பூச்சி அல்லது அதுமாதிரியான பூச்சிகள் இருந்தால் அதன் கால்களில் இருக்கும் வெள்ளத்திற்காக ஆசைப்பட்டு வரும் (முசுடு எறும்பு அதற்காக வர வாய்ப்பில்லை ) மாவு பூச்சி மாதிரியான பூச்சிகளை கட்டுப்படுத்த வெர்டிசிலியம் லக்கானி தெளிக்கலாம். எறும்புகள் வராமல் போய்விடும் , ஆனால் முசுடு வகை எறும்புகளை கட்டுப்படுத்த மிளகு அல்லது எருக்கு கரைசலை தெளிக்கவேண்டும் . அல்லது இந்த முசுடை கட்டுப்படுத்த கோமியத்துடன் மஞ்சள்தூள் கலந்து தெளிக்கலாம் அதாவது அரை லிட்டர் கோமியம் அரை லிட்டர் தண்ணீர் இந்த ஒரு லீடரோட 20 கிராம் மஞ்சள் கலந்து தெளிக்கலாம் .
Comments
Post a Comment
Smart vivasayi