Agriculture In India- Ragi / Finger millet
களர் நிலத்தில் கூட நன்கு வளரக்கூடிய ஒரே பயிர் கேழ்வரகு மட்டுமே. கர்நாடகத்தில் மட்டுமே அதிகம் பயிரிடப்படுகின்றது. வறட்சியை தாங்கி வளரும். அதிக கால்சியம் சத்து இருக்கக்கூடிய தானியம் இது தான்.
ரகம்
கோ 9, கோ 13, கோ.ஆர்.ஏ 14, டி.ஆர்.ஒய் 1, பையூர் 1, பையூர் 2
ஒரு வித்திலை தாவரங்களில் சத்து குறைவாக தேவைப்படும் பயிரும் இதுதான். தழை சத்து மட்டும் சற்று கூடுதலாக தேவை. அதிக பட்சம் மூன்று அடி உயரம் வரை வளரும்.
பட்டம் என்று பார்த்தால் அதிகமாக தை மற்றும் மாசி. சில பகுதிகளில் சித்திரை மற்றும் வைகாசி
அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட்/ எக்டர் (600 கிராம்/எக்டர்) மற்றும் 3 பாக்கெட்/எக்டர் (600 கிராம்/எக்டர்) பாஸ்போபாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்யவும் அல்லது அசோபாஸ் (1200 கிராம்/எக்டர்) பயன்படுத்தவும்
3×8 அடி அளவில் மேட்டு பாத்திகளில் விதை தூவி நாற்று விடப் படுகிறது. ஏக்கருக்கு குறைந்தது ஒன்னரை கிலோ விதை போதுமானது. அதிக பட்சம் இரண்டு கிலோ . நேரடி விதைப்பாக இருந்தால் 3.5 கிலோ .
செம்மை நெல் நடவு முறை பின் பற்றி கேழ்வரகு நட்டால் அதாவது கயிறு பிடித்து சரியான இடைவெளி யில் ஒற்றை நாற்று நடவு செய்யும் போது அதிகமாக தூர்கள் வர அதிக வாய்ப்பு.
இதன் வயது சுமார் நூறு முதல் நூற்றி பத்து நாட்கள். அதாவது தை பட்டத்தில் நாட்டால் சிறிது முன்னதாகவே அறுவடை க்கு வர வாய்ப்பு. இரண்டு களை எடுப்பது நல்லது.
பூச்சி தாக்குதல் குறைவு. அதனால் கற்பூரகரைசல் தெளித்தால் போதும் .
மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் தொடர்ந்து வேரில் அளிப்பதன் மூலம் அதிக கிளைப்புகள் தோன்றும். மண் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்சவேண்டும்.
கேழ்வரகு தட்டை (தண்டு)அறுத்து காயவைத்து போர் போட்டு வைக்கலாம். சிறிது இனிப்பு சுவை உள்ளதால் மாடுகள் விரும்பி உண்ணும். இது வறட்சி காலத்தில் கால்நடைகளை காப்பாற்ற வசதியாக இருக்கும்.
கதிர் அறுவடை க்கு பின்னர் தட்டை மடக்கி உழுது விட்டாலும். அடுத்த பயிர் நன்றாக வளரும். இதன் வேர் ல் இயற்கையாகவே VAM என்னும் வேர் பூஞ்சானம் இருப்பதால் இதையடுத்து வேற்கடலை பயிரிட்டால் நல்ல திரட்சியான பருப்புகள் உடைய காய்களை பெறலாம். எண்ணிக்கை மற்றும் எண்ணெய் சத்தும் அதிகமாகும்.
ஏக்கருக்கு சுமார் இருபது குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும்.
கேழ்வரகை வாரத்தில் மூன்று நாள் உணவில் பயன்படுத்தினால் அனைத்து வியாதிகளை தடுக்கலாம். குறிப்பாக நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம். இரத்த சோகை நோய் முற்றிலும் வராது. மலச்சிக்கல் ஏற்படாது.
Comments
Post a Comment
Smart vivasayi