Skip to main content

Posts

Showing posts from February, 2021

விவசாய தங்க நகை கடன் கொடுக்கும் வங்கிகள் மற்றும் வட்டி விகிதம்

விவசாய தங்க நகை கடன் கொடுக்கும் வங்கிகள் மற்றும் வட்டி விகிதம்  நீங்கள் டிராக்டர் வாங்குவதற்கு கடன் கேட்டாலும் சரி அல்லது ஒரு மாட்டு பண்ணை ஆரம்பித்தாலும் சரி உடனே கிடைக்காது சற்று காலதாமதமாகும். ஆனால் ,விவசாயிகளுக்கு உடனடியாக கிடைக்கக்கூடிய கடன்களில் ஓன்று இந்த தங்க நகை கடன் .  Whats App Group Link பயிர் சாகுபடிக்காக வாங்கலாம் , இயந்திரங்கள் அல்லது நீர்ப்பாசன உபகரணங்கள் வாங்குவதற்காக வாங்கலாம் அல்லது அறுவடை பின்சார் வேலைகளுக்காக வாங்கலாம் , முக்கியமாக விவசாய தங்கநகை கடனை அரசாங்கம் தள்ளுபடி செய்துவிடும் என்ற நம்பிக்கையிலும் வாங்கலாம். எது எப்படி இருந்தாலும்  விவசாயத்திற்காக வாங்கும் தங்க நகை கடன் கொடுக்கும் வங்கிகளில் வட்டியின் அளவு , கடன் வாங்கும் அளவு , திரும்பச்செலுத்தும் கால அளவு மற்றும் கொடுக்கும் பணத்தின் அளவு ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும் . இதை பற்றி தெரிந்து கொள்வது அவசியம் அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம் . விவசாய தங்க நகை கடன் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை  கடன்தொகை    ஆயிரம் முதல் 10 கோடி வரை கொடுக்கப்படுகிறது நாம் கவனிக்க வேண்டியது 1 கிரா...

training on organic farming In Tnau

வரும் மார்ச் மாதத்திலிருந்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மைக்கான பயிற்சி தொடங்க போகிறது !. ஒவ்வொரு மாதமும் அங்கக வேளாண்மை பயிற்சி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் உள்ள கோயம்பத்தூரில் நடைபெறுவது வழக்கம் . போன வருடம் கொரோனா லாக் டௌன் பிறகு சில மாதங்கள் நடத்தப்படவில்லை . பின்னர் இந்த பயிற்சி ஆன்லைன் மூலம் நடைபெற்றது . மறுபடியும் பயிற்சி கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து மீண்டும் இந்த பயிற்சி நேரடியாக ஆரம்பிக்கப்படுகிறது . வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அங்கக துரையின் மூலம் மீண்டும் நேரடி பயிற்சி ஒவ்வொரு மாதம் 7 தேதி நேரடி தமிழ் வழியில் அங்கக வேளாண்மை பயிற்சி வரும் மார்ச்2021 முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.  என்ன விதமான பயிற்சி   இயற்கை முறையில் பயிர் சத்துக்கள் மேலாண்மை  இயற்கை முறையில் களை மேலாண்மை  இயற்கை உரம் மற்றும் அங்கக இடுபொருட்கள் தயாரித்தல்   இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு   அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள் மற்றும் பங்கேற்பாளர்களின் உறுதியளிப்புத் திட்டம். ஆகியத் தலைப்புகளில் இந்த பயிற்சி நடைப...

how to become an organic farm Part-1

ஒரு இயற்கை வேளாண்மை பண்ணையை எப்படி உருவாக்கலாம்  நம்முடைய உணவு முறை என்பது கால் நூற்றாண்டில் நன்றாக மாறிவிட்டது . இயற்கை முறையில் விளைந்த உணவு பொருட்களின் சுவை கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது . இப்பொழுது உள்ள காய்கறிகளோ அல்லது உணவு பொருட்களோ எந்தஅளவிற்க்கு நச்சு தன்மையோடு உள்ளது அது எப்பொழுது நம் உடம்பை பாதிக்கும் என்பது நமக்கு தெரியாது . ஆனால் கடந்த 10 வருடங்களாக தமிழ் நாட்டில் நிறைய விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகிறார்கள் . அவ்வளவு ஏன் நிலம் இல்லாதவர்கள் கூட நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்கிறார்கள் .இந்த கட்டுரையில் ஏற்கனவே செயற்கை  விவசாயம் செய்துகொண்டிருப்பவர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாறினால் என்ன செய்யவேண்டும் அல்லது புதிதாக இயற்கை விவசாயம் செய்பவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை பார்ப்போம் . லட்சியத்தில் உறுதியாக   நீங்கள் இயற்கை விவசாயம் செய்ய முடிவெடுத்துவிட்டால் அதில் வெற்றி அடையும் வரை நீங்கள் உறுதியாக இருக்கவேண்டும் . ஏன்எனில் , இயற்கை விவசாயத்தில் உடனடியாக லாபத்தை எதிர்பார்க்க முடியாது அதுவும் செயற்கை இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறும்பொழுது லாப...

agriculture loan SBI Bank interest rate

விவசாய கடன் sbi  வங்கி  வட்டி விகிதம்  எவ்வளவு  எந்த ஒரு வங்கியாக இருந்தாலும் விவசாய கடன் வாங்குவதற்கு முன்பு நீங்கள் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் வட்டி . இந்த வட்டி நீங்கள் வாங்க போகும் ஒவ்வொரு  கடனுக்கும்  வித்தியாசப்படும் . அவ்வளவு ஒரு வங்கிக்கும் மற்றொரு வங்கிக்கும் கூட மாறுபடும் . விவசாய கடனில் மகளிருக்கு மற்றும் சுய உதவி குழுக்களுக்கு ஒரு வட்டி விகிதம் இருக்க வாய்ப்புண்டு . நாம் இந்த கட்டுரையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வில் கொடுக்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதங்களை பார்ப்போம் .  sbi  வங்கி பயிர்க்கடன்  விவசாயிகளுக்கு கடன் அட்டை மூலம் கொடுக்கக்கூடிய கடன்களில் ஓன்று இந்த வகை கடனில் 3 லச்சம் வரை உள்ள கடனுக்கு 7% வட்டியாகும் . மூணு லச்சத்துக்கு மேல் வாங்கினால், நீங்கள்  பணத்தை திரும்ப செலுத்தும் கால அளவை பொறுத்து வட்டி விகிதம் மாறும்  இந்த பயிர்கடனில் மூனு லச்சத்துக்குள் கடன் வாங்குபவர்களுக்கு 2 சதவீத வட்டியை அரசாங்கம் செலுத்தும் . விவசாய நகை கடன்  விவசாயிகளுக்கு உடனடியாக கிடைக்க கூடிய கடன்களில் ஓன்று  வட...

Advantages of organic farm

இயற்கை வேளாண்மையில் உள்ள நன்மைகள்  எந்த ஒரு தொழில் ஆரம்பிப்பதற்கு முன் அந்த தொழிலின் சாதகம் மற்றும் பாதகங்களை நன்கு ஆராய்ந்து விட்டு ஆரம்பிப்பது மிக நல்லது . அது இயற்கை வேளாண்மைக்கும் பொருந்தும் . இயற்கை விவசாயத்திற்கும் நன்மை தீமைகள் உண்டு , நன்மைகள் நிறைய உண்டு தீமைகள் ஒரு சில மட்டுமே உள்ளன சரியான திட்டமிட்டால் அதையும் நாம் கடந்து விடலாம்  இயற்கை விவசாயத்தின் நன்மைகள்   மண் பாதிப்பை தவிர்க்கலாம்  செயற்கை விவசாயத்தில் முதலில் பாதிக்கப்படுவது மண் மற்றும் அதில் உள்ள நுண்ணுயிரிகள். ஆரம்பகட்டத்தில்  செயற்கை உரங்களை பயன்படுத்தும் போது விளைச்சல் அதிகம் இருக்கும் ஆனால் படிப்படியாக மண்வளம் குன்றி நுண்ணுயிரிகள் குறைந்து விளைச்சல் பெருமளவு குறைய ஆரம்பிக்கும் பூச்சி நோய்களின் தாக்குதல் அதிகரிக்கும் அதை கட்டுப்படுத்த பூச்சி கொல்லிகள் தெளிக்கும் போது  செலவு மேலும் அதிகரிக்கும் மண் பாதிக்கப்படும் உணவு பாதிக்கப்படும் அதை உண்ணும் நாமும் பாதிக்கப்படுவோம் . அதுவே இயற்கை விவசாயம் என்று வரும்போது மேற்க்கூறிய அணைத்து பாதிப்புகளையும் நம்மால் தவிர்த்திட முடியும். ஓவுவொரு முறையும...

கேழ்வரகு சாகுபடி

Agriculture In India-  Ragi / Finger millet களர் நிலத்தில் கூட நன்கு வளரக்கூடிய ஒரே  பயிர் கேழ்வரகு மட்டுமே. கர்நாடகத்தில் மட்டுமே அதிகம் பயிரிடப்படுகின்றது. வறட்சியை தாங்கி வளரும். அதிக கால்சியம் சத்து இருக்கக்கூடிய தானியம் இது தான்.  ரகம்  கோ 9,  கோ 13,  கோ.ஆர்.ஏ 14,  டி.ஆர்.ஒய் 1, பையூர் 1, பையூர் 2 ஒரு வித்திலை தாவரங்களில் சத்து குறைவாக தேவைப்படும் பயிரும் இதுதான். தழை சத்து மட்டும் சற்று கூடுதலாக தேவை. அதிக பட்சம் மூன்று அடி உயரம் வரை வளரும்.    பட்டம் என்று பார்த்தால் அதிகமாக தை மற்றும் மாசி. சில பகுதிகளில் சித்திரை மற்றும் வைகாசி  அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட்/ எக்டர் (600 கிராம்/எக்டர்) மற்றும் 3 பாக்கெட்/எக்டர் (600 கிராம்/எக்டர்) பாஸ்போபாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்யவும் அல்லது அசோபாஸ் (1200 கிராம்/எக்டர்) பயன்படுத்தவும் 3×8 அடி அளவில் மேட்டு பாத்திகளில் விதை தூவி நாற்று விடப் படுகிறது. ஏக்கருக்கு குறைந்தது ஒன்னரை கிலோ விதை போதுமானது. அதிக பட்சம் இரண்டு கிலோ . நேரடி விதைப்பாக இருந்தால் 3.5 கிலோ . பதினைந்து முதல் இருபது நாள் ந...

மிளகாய் சாகுபடி

Agriculture In India - Cultivation of chillies   சிகப்பு தங்கம் என்று இதற்கு பெயர். இதை பயன்படுத்தாத மக்கள் மற்றும் நாடு கிடையாது.  மேட்டுபாத்திகளில் நாற்றங்கால் விடவேண்டும். அதாவது 3×9 நீள அகலங்களில் மற்றும் அரை அடி உயரம் இருக்க வேண்டும்.   தொழுஉரம் வயலில் இட்டு நன்கு உழுது 2.5 அடி அகல பார்கள் அமைத்து 2.5 அடி இடைவெளியில் நடலாம்.முதலில் வயலில் தண்ணீர் பாய்சவேண்டும் பின்பு உயிர் உரங்கள் இட்டு 35 நாள் நாற்று  ஒரு குத்துக்கு மூன்று நாற்றுகள் நடவேண்டும்.   அதாவது நாற்றங்காலில் ஆங்காங்கே ஓரிரு  பூ  தோன்றிய பின்பு நாற்றுகளை பிடுங்கி நடவுசெய்வது பின் காலத்தில் திடமான செடிகள் மற்றும் நல்ல மகசூலை எடுக்கலாம்.  நட்ட பத்தாவது நாள் முதல் களை. பின்பு தொடர்ந்து இயற்கை கரைசல்கள் தொடர்ந்து அளிப்பதன் மூலம் உயரமான செடிகள் அதிக ஆயுட்காலம் உண்டாகும்.  இவற்றை அதிகம் தாக்குவது இலை முடக்கு .அசுவினி மற்றும் காய்துளைப்பான்.ஆரம்பம் முதல் கற்பூரகரைசல் தொடர்ந்து தெளிப்பதனால் பூச்சிகள் தாக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தலாம்.    மண்புழு உரம் மற்றும் VAM...

துவரை செடிகள் பூக்கும் சமயத்தில் செய்ய வேண்டியவை என்ன

What to do when flowering plants பூ காயாக மாறுவதற்கு சில காரியங்கள் செய்ய வேண்டும் அதே சமயம் புழு மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்துவதற்கும் சில விஷயங்கள் செய்ய வேண்டும் . முதலில் பஞ்சகாவிய  அல்லது தேமோர் கரைசல் அல்லது ஈ எம் கரைசல் ஏதாவது ஒன்றை அதிகாலை நேரத்திலோ இல்லை மாலை வேளைகளில் தெளித்து பூக்களை நிலை படுத்திக்கொள்ள வேண்டும் . பெவேரிய பேசியான மற்றும் வெர்டிசீலியம் லக்கானி ஏதாவது ஒன்றை 10 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது 12 நாட்களுக்கு ஒரு முறையோ தெளித்து புழு பூச்சி இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும். இரண்டையும் ஒரே சமயம் தெளிக்காமல் ஐந்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம் . இது இல்லையென்றால் கற்பூரக்கரைசல் அக்னி அஸ்திரம் தெளிக்கலாம். இப்படி செய்வதால் பூக்கள் அதிகமாக பூத்து , காய்கள் நன்றாக பிடித்து நல்ல வருமானமும் கிடைக்கும்   

தென்னை குரும்பை பூஞ்சாண நோய் கட்டுப்பாடு

Coconut nut fungal disease control பூஞ்சாண நோய் கட்டுப்படுத்த முதலில் முறையான தண்ணீர் கொடுப்பது முக்கியம் . அடுத்து உரங்கள் அதிகமாக போடப்பட்டிருக்கலாம் அல்லது தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கும் இடமாக இருந்தால் தென்னையில்  பூஞ்சாண நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டு   இந்த பூஞ்சாண நோயை கட்டுப்படுத்த முறையான மற்றும் தேவையான நீர் நிர்வாகம் கடைபிடிக்கவேண்டும் . தரைவழியில் ஒரு மரத்திற்கு 10 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி சூடோமோனஸ் கலந்து மரத்தை சுற்றி ஊற்றிவிட்டு வேண்டும் இதை பத்தாவது நாள் ஒரு முறையும் 20 வது நாள் தரை வழி ஊற்றி விட வேண்டும் . ஒரு முறையாவது மரத்தின் மேல் சென்று 1 லிட்டருக்கு 10 மில்லி கலந்து ஸ்ப்ரே செய்யவும் வாய்ப்பு இருந்தால் இரண்டாவது முறையும் செய்யலாம்  . பாலைகள் வர இடத்தில என்ன மாதிரியான பிரச்சனைகள் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் . நீண்ட நாட்களாக பன்னாடைகளை சுத்தப்படுத்தாமல் உள்ளதா அல்லது தண்ணீர் தேங்கி நிற்கும் அமைப்பு மட்டைகளில் உள்ளதா என்று தேவை இல்லாததை சுத்தப்படுத்தினால் நல்லது . அடுத்து மட்டைகளில் காயம் ஏற்பட்டு இருந்தாலும் இந்த மாதிரி நடக்க வா...

வெற்றிகரமாக பால் பண்ணையை நடத்த 5 விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்

These 5 things to keep in mind if you want to run your dairy successfully நீங்கள் வெற்றிகரமாக உங்கள் பால் பண்ணையை நடத்த வேண்டும் என்றால் இந்த 5 விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும் ஒரு பால் பண்ணையை வெற்றிகரமாக நடத்தவேண்டுமென்றால் நீங்கள் செய்கின்ற சோதனை மிக அவசியம்மானது . மனிதன் ஆனாலும் சரி விலங்குகள் அனாலும் சரி புதுவிதமான நோய்கள் வந்துகொண்டே இருக்கின்றன  அதனால் மாடு , ஆடு போன்றவற்றின் சுகாதார நிலையை அடிக்கடி கண்காணிப்பது முக்கியம் . உடல்நலப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிவது பிரச்சினையின் ஆரம்ப கட்டங்களில் சரியான நடவடிக்கை எடுக்க உதவும். ஒரு கால்நடைக்கு எப்போதுவேண்டுமானாலும் உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்புள்ளது, அந்தமாதிரி சமயத்தில் கால்நடை மருத்துவரை அணுகவேண்டியுள்ளது . சில சமயம் அதிகம் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து மீண்டு வர சில காலம் பிடிக்கும் , அதே சமயம் பால் உற்பத்தி பாதிக்கப்படும் . நோய் அதிகமானால் கால் நடை இறந்து போகவும் வாய்ப்புள்ளது . இதையெல்லாம் தவிர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மாடுகளை சோதனை செய்வது அவசியமாகிறது . ஒரு ஐந்து விதமான சோதனைகள் பற்ற...

பூச்சி , பூஞ்சை மற்றும் நோய் அறிகுறிகளின் வித்தியாசம் எப்படி இருக்கும்

What is the difference between insect, fungus and disease symptoms in a plant? பூஞ்சை நோய்  மரப்பயிர்களோ அல்லது  தாவரப்பயிர்களோ அதாவது காய்கறி மாதிரியான பயிர்களோ பூஞ்சை நோய் வந்தால் இலைகள் தொங்குகிற மாதிரியான அமைப்புகள் வரும் அதோட இருக்க தன்மை போய்விடும் , வளர்ச்சி மிகவும் குன்றி காணப்படும் , சாப்பாடு எடுத்துக்கொள்ளாது தண்ணீர் எடுத்துக்கொள்வது செடியோட பச்சை போய்விடும் . அதாவது ஓவுவொரு பயிருக்கும் ஒரு பச்சை இருக்கும் அதன் நிறம் மாறி மஞ்சளை நோக்கி போகும் அந்த மாதிரியான அமைப்பு இருந்தால் அது பூஞ்சை நோய் . பூச்சி தாக்கம் பூச்சி தாக்கம் என்பது பொதுவா இலைகளின் பின் பகுதியை தாக்கும் . இலையின் பின்னால் நரம்பு இருக்கும் அதை வெட்ட வெட்ட இல்லை சுருங்க ஆரம்பிக்கும் . இறுக்கமாக இருந்து  கைவிருச்சு வளர்வதை பின்னால் பூச்சிகள் கடிப்பதால் வளைந்து சுருங்கிவிடும் இது பூச்சி தாக்குதல்  புழு என்பது இலைகளை கடித்து சாப்பிடும் அப்ப இலைகளில் ஒருபகுதி இல்லாமல் போய்விடும்  நோய் தாக்குதல் நோய் தாக்குதல் ஓன்று பாக்டீரியா நோய் தாக்குதல் அல்லது வைரஸ் நோய் தாக்குதல். பெரும்பாலும் நோய் தாக்குதல...

மா மரத்தில் பூஞ்சை தொற்று

Fungal infection of mango tree மிக நீளமான மழை அதாவது 7 நாள் 10 நாள் இப்படி மழை பெய்யும் நாட்களில் பொதுவா மானாவாரியாக இருக்கக்கூடிய தோட்டக்கலை பயிர்கள் எல்லாவற்றிலும் பூஞ்சை தொற்று வருவது வாடிக்கை  . பூமியில் உள்ள தவறான பூஞ்சைகள் மா மரத்தின் உடம்பு வழியாக நகர்ந்து கிளைகள் வழியாக போய் காம்புகள் வழியாக போய் பழங்களை தாக்குவது பொதுவான செயல் . அதில் உள்ள பூஞ்சைதான் படத்தில் காண்பிப்பது போல் வெள்ளையாக தெரியும் அல்லது நீல நிற படலங்களாக தண்டுகளில் இருக்கும் இப்படி அறிகுறிகள் தெரிந்தாலே அடுத்து பழங்களை தாக்க போகிறது என்று அர்த்தம்  இதை தடுப்பதற்கு சூடோமோனஸ் 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி கலந்து மாமரத்தின் தண்டுகள், இலைகள் ,காம்புகள் , தெளிக்கவேண்டும் மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பு அதாவது அக்டோபர் 1 தேதியிலிருந்து 15 நாள்களுக்கு 1 முறை தெளிக்கவேண்டும். ஒருவேளை பூஞ்சனா நோய் வந்துவிட்டால் இதை தெளிப்பதுடன் பேசில்ஸ் சப்ஸ்டில்ஸ 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கலாம் . பூஞ்சை அதிகம் தாக்கிய அல்லது தேவை இல்லாத கிளைகளை நீக்கி விடலாம் 

சம்பங்கி கிழங்கு விதை நேர்த்தி

Sampangi seed treatment  சம்பங்கி கிழங்கு பொறுத்தவரை இடைவெளி வரிசைக்கு வரிசை ஒன்றை அடியும் பயிருக்கு பயிர் முக்கால் அடி (அதாவது 20 சென்டிமீட்டர் ) நடலாம் . நம்முடைய நடவுமுறையில் ஓவுவொரு கிழங்கும் 30 கிராம் அளவுள்ள ஒரே மாதிரியான கிழங்குகளை எடுத்து கொள்ளலாம் . கிழங்கோட சைசில் மிகவும் சின்னதாக உள்ளதெல்லாம் ஒதுக்கிவிடவேண்டும் அதேபோல உடைந்தது , அழுகியது, கிழிந்த மற்றும் பூஞ்சாணம் புடித்த  கிழங்குகளை நீக்கி விடவேண்டும் . இந்த சம்பங்கி கிழங்குகளை ஒரு ட்ரம்மில் ஒரு உத்தேசமா 100 லிட்டர் தண்ணீருக்கு , அதாவது  1 கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் , 30 கிராம் அசோஸ்பைரில்லும் , இந்த அளவுக்கு தண்ணீரில் கலந்து கொள்ளவேண்டும் அதில் இந்த கிழங்குகளை போட்டு குறைந்தபச்சம் 5 முதல் 10 நிமிடம் இருந்தால் போதும் அதை எடுத்து நிழலில் காயவைத்து விதைக்கலாம் ( உதாரணமாக இன்று 10 மணிக்கு விதைக்க போகிறீர்கள் என்றால் காலை 6 மணியில் இருந்து செய்தால் நன்றாக இருக்கும்  வயலில் பார் பிடித்திருப்போம் பாரோட பக்கவாட்டு பகுதியிலிருந்து தரையிலிருந்து சுண்டு விரல் உயரத்தில் நடலாம். விதைநேர்த்திக்கு பயன்படுத்திய ந...

இயற்கை முறை சாமந்தி பூ பயிர் மேலாண்மை

Natural method marigold crop management உலகம் முழுவதும் , வருடம் முழுவதும் பயிர் செய்யக்கூடிய மலர்களில் சாமந்தி பூவும் ஓன்று . அதன் நிறம் மனதிற்குள் அதிக சந்தோசத்தை ஏற்படுத்துகிறது .இந்த பூவில் 33 வகைகள் உள்ளன . தமிழ்நாட்டில் சுப நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது . காய்கறி பயிர்களை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க வரப்பு ஓரங்களில் பயிர் செய்யப்படுகிறது . தமிழ் நாட்டில் பயிர்செய்யப்படும் ரகங்கள் கோ1, கோ 2 மற்றும் எம்.டி.யு 1 இதில் கோ 1 , எம்.டி.யு 1 மஞ்சள் நிற பூக்களை கொடுக்கும் கோ 2 கருபழுப்பு  நிறத்தில் பூக்களை கொடுக்கும்  கார அமிலத்தன்மை 6 ல் இருந்து 7 வரை இருக்கலாம் எல்லா வகை மண் வகைகளில் வளர்க்கலாம் என்றாலும் நீர்தேக்கமுள்ள வடிகால் வசதி குறைவாக உள்ள களிமண் நிலங்கள் சாமந்தி பூவிற்கு ஏற்றது. பகல்  பொழுது குறைவாகவும் இரவு நீண்டதாகவும் உள்ள காலங்களில் நன்றாக பூக்கும் . நிலத்தை  குறைந்தது மூன்று முறை உழவேண்டும் கடேசி உழவின் போது இருபத்தைந்து டன்  தொழு உரம் போடவேண்டும். நேரடி விதைப்பை விட நாற்று பாவி வயலில் நடுவது  நல்லது செடிக்...

வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க மானியம்

Subsidy to set up a vegetable garden on the terrace of the house புதிய திட்டம் தொடக்கம்வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. "நீங்களே செய்து பாருங்கள்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது  இந்தத் திட்டத்தின் கீழ், வீட்டு மாடியில் தோட்டம் அமைக்கத் தேவையான காய்கறி விதைகள், உரங்கள், பாலிதீன் பைகள் உள்ளிட்டவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன.  என்னென்ன காய்கறிகள்: கத்தரி, வெண்டை,தக்காளி, மிளகாய், அவரை, கொத்தவரை,முள்ளங்கி, கீரைகள், கொத்தமல்லி ஆகியவற்றை மாடி தோட்டத்தில் வளர்க்கலாம்.  இந்த செடிகள் அனைத்தையும் வளர்க்க மொட்டை மாடியில் 160 சதுர அடி இடம் இருந்தால் போதுமானது. இதற்கான மகசூல் காலம் 30 நாள்களில் இருந்து 6 மாதங்கள் வரை ஆகும். மாடித் தோட்டம் அமைப்பதன் மூலம் 1 கிலோ முதல் 15 கிலோ வரை காய்கறிகள் மற்றும் கீரைகளை மகசூலாகப் பெறலாம். இதற்கு தேவையான பொருள்கள் மானிய விலையில் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.  மானியமாக கிடைக்கும் பொருள்கள்: 2 கிலோ தேங்காய் நார் க...

ரோஜாக்களின் நிறமும் அதன் நோக்கங்களும்

The color of roses and its purposes ரோஜா பூக்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது , மற்ற பூக்களை விட ரோஜா பூவிற்கு அதிக நறுமணம் உண்டு . உலக சந்தையை பொறுத்தவரை அழகான பூக்களின் விற்பனை  கடந்த ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது . இது பூ உற்பத்தி மற்றும் அதிலிருந்து என்னை எடுப்பதை காண்பிக்கிறது . நாம் பேசும் மொழியின் நுணுக்கங்கள் இப்போது பெரும்பாலும் மறந்துவிட்டன, ஆனால் ரோஜாக்கள் இன்னும் உணர்ச்சி, காதல், பாசம், நல்லொழுக்கம் மற்றும் கற்பு, நட்பு அல்லது பக்தி போன்றவற்றைக் இன்னும் காண்பித்து கொண்டிருக்கின்றன . ரோஜாக்களின் ஓவுவொரு வண்ணமும் ஒன்றை குறிக்கும் அவற்றை பற்றி பாப்போம்  வெள்ளை ரோஜா  திருமணத்தை குறிக்கும் , கல்யாணத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது அதை தவிர்த்து அன்னையர் தினத்தை கொண்டாடவும் மற்றும் மரியாதை செலுத்தவும் இந்த நிற ரோஜாக்கள் பயன்படுத்தப்படுகின்றன  ஆரஞ்சு ரோஜா  உங்கள் மனைவிக்கோ அல்லது காதலிக்கோ உங்களுடைய அதீத அன்பை வெளிப்படுத்த இந்த நிற ரோஜாவை கொடுக்கலாம்  பீச் ரோஸ்  நேர்மை, நன்றியுணர்வு, நட்பு மற்றும் பாராட்டு ஆகியவற்றின் அடையாளமாகும். “ஒரு ஒ...

மல்லிகை பூ கவாத்து முடிந்தவுடன் செய்ய வேண்டியது

What to do after the jasmine flower pruning is over சூடோமோனஸ் 10 லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் கலந்து தெளிக்கவேண்டும் . ஓவுவொரு தூருக்கும் 5 மில்லி அல்லது 10 மில்லி யாவது தூரில் இருக்கும்படி ஊற்றவேண்டும் , அதாவது 200 லிட்டருக்கு 1 லிட்டர் கலந்து அதுல ஒரு ஒரு லிட்டர் எடுத்து தூருக்கு ஊற்றிவிடவேண்டும் இரண்டையும் ஒரே நாளில் செய்யவேண்டும்  மல்லிகை செடியின் இலைகள் முழுமை அடையவேண்டும் இதில் இருந்து ஒருநாள் அல்லது இரண்டு நாள் விட்டு மாலை வேளையில் 10 லிட்டர் தண்ணீரில் 200 அல்லது 300 மில்லி பஞ்சகாவியா அல்லது ஏ.எம் கரைசல் மாலைவேளைகளில் தெளிக்கவேண்டும் இதை வாரத்தில் இரண்டு தடவை தெளிக்கவேண்டும் அதேபோல் தரை வழி 200 லிட்டருக்கு 1 லிட்டர் மீன் அமிலம் கலந்து ஒவ்வொரு பயிருக்கும் இரண்டு லிட்டர் ஊற்றி விடவேண்டும் . இந்த மாதிரி செய்வதால் மல்லிகை செடியின் இலைகள் முழுமை அடையவேண்டும். இலை பெருக்கம் அடைய அதாவது கவாத்து முடிந்து இதுயெல்லாம் முடிந்து இலை முழுமை அடைய 22 நாட்கள் ஆகும் அதன் பின்பு அரப்பு மோர் கரைசல் கொடுத்தால் பூ எடுக்க ஆரம்பிக்கும். அப்பவும் மீன் அமிலம் தரைவழி கொடுக்கவேண்டும் . எருக்கு இலை ...

அதிக அளவு விதை வெங்காய உற்பத்திக்கான ( சாம்பார் வெங்காயம்) ஆலோசனைகள்

Strategies for high seed onion production (sambar onion)  . சாம்பார் வெங்காயம் எனப்படும் சிறுவெங்காயம் மற்ற பயிர்களைவிட மிகக்குறைவான வாழ்நாளைக் ( 65 - 80 நாட்கள்)  கொண்டுள்ளதால் அதனை பயிரிட விதைகளைவிட வெங்காய Bulb- களை நடவதே சிறந்தது. சாம்பாருக்கு விளைவிக்கப்படும் சிறுவெங்காயம் நடப்பட்டதிலிருந்து மூன்று முதல்  நான்கு பகுதியாக பிரிந்து வளர்ந்து விளைவதே சமையலுக்கு நன்றாக இருக்கும் .   வெங்காய சாகுபடியில் Bulb- கள் அதிகமாக பிரியாதிருப்பதால் விவசாயிகளுக்கு  மகசூல் சுமாராகவே இருந்தாலும் பயனாளிகள் மட்டத்தில் நல்ல வரவேற்ப்பை பெறுகிறது.  ஆனால் விதைகளுக்காக பயன்படுத்தப்படும்           Bulb- கள் பெரிய அளவில் இருந்தால் விதையளவு அதிகரித்து சாகுபடி செலவு மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொதுவாக விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதை வெங்காயத்தினை முதல் சீசனில் தாங்களே உற்பத்தி செய்வது வழக்கம்.  ஆனால் அவர்களுக்கு  எல்லா வெங்காய உற்பத்தியும் ( சமையல் மற்றும் விதை)  ஒன்றே. விதை வெங்காயம் சிறிய சைஸ் ஆக , அதிக அளவில் உற்பத்தி செய்வதால...

மாமரத்தில் பூக்கள் காய்களாக மாற என்ன செய்யலாம்

What can be done to turn the flowers into pods on the tree மாமரத்தில் பூக்கள் நன்றாக பூப்பதற்கு அடிப்படையில் ஒரு சில சத்துக்கள் வேண்டும். அந்த சத்துக்கள் இருந்தால் இருக்கக்கூடிய கொத்து பூவில் எது திறமையான பூவோ எளிமையாக சூழ் பிடிச்சு நமக்கு காலியாக மாறும் இதை அதிகப்படுத்துவதற்கு நாம் என்ன செய்யலாம் என்றால், பஞ்சகாவியா, தேமோர் கரைசல் , ஈ எம் கரைசல்  போன்றவற்றை தெளிக்கலாம் . மகரந்த சேர்க்கை நடை பெறுவதற்கு இதை எப்படி தெளிக்கவேண்டுமென்றால் 10 லிட்டருக்கு 200 மில்லி ஈ .எம் கரைசல் அல்லது 10 லிட்டருக்கு அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை தேமோர் கரைசல் பயன்படுத்தலாம். இதை நேரடியாக பூக்கள் மீது அடிக்காமல் கொஞ்சம் தள்ளி பொழியுற மாதிரி அமைப்புள்ள பூக்கள் மீது தெளித்தால் மகரந்த சேர்க்கை நடை பெறுவதற்கு உதவியாக இருக்கும் , அதாவது அதன் வாடை தேனீக்களை கவர்ந்து இழுப்பதற்கு வாய்ப்பாக இருக்கும் . பஞ்சகாவிய தெளிப்பதால் இப்படி தெளிப்பதால் பூக்களுக்கு ஆரம்பகால சத்துக்கள் கொடுப்பதற்கு பெரிய வாய்ப்பாக இருக்கும் மேலும் மற்றவற்றை விட பஞ்சகாவிய தெளிப்பதால் அதில் 40 சதவீதம் சூடோமோனஸ் இருப்பதால் மாமரத்தில் ...

விதையின் தரத்தை வீட்டிலேயே எப்படி நாம் சரி பார்க்கலாம்

How can we check the quality of the seed at home ஒரு வீட்டு தோட்டமோ அல்லது மாடி  தோட்டமோ நமக்கு முக்கியத்தேவை விதை . அந்த விதையை நீங்கள் வெளியிலிருந்து வாங்கியிருக்கலாம் அல்லது விதையை வாங்கி ஆறு மதமோ அல்லது ஒரு வருடமோ பயன்படுத்தாமல் வைத்திருக்கலாம்  , தற்பொழுது போட்டால் முளைக்குமா என்ற சந்தேகம் வரலாம் அதற்க்கு வீட்டிலேயே நீங்கள் சோதனை செய்து பார்க்கலாம் . சில விதைகள் நீண்ட ஆயுளை கொண்டிருக்கும் சில விதைகள் குறைந்த வயதை கொண்டிருக்கும் . நாம் வைத்திருக்கும் விதைகள் முளைக்குமா என்பதை அறிய இரண்டு சோதனைகள் செய்யலாம் . நீர் பரிசோதனை ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் நீரை ஊற்றி கொஞ்சம் விதைகளை அதில் போடுங்கள் , விதை முழுகுகிறதா அல்லது மிதக்கிறதா என்று பாருங்கள்  விதை மூழ்கியிருந்தால் தரமாணவிதை நீங்கள் பயிர் செய்ய பயன்படுத்தலாம்  விதை மிதந்துகொண்டிருந்தால் பயிர் செய்ய ஏற்ற விதை அல்ல , அது முளைக்காது , விதை முளைப்பு சோதனை  ஒரு ஈரத்துணியை எடுத்துக்கொள்ளுங்கள்  அந்த துணியில் 10 விதையை வரிசையாக வையுங்கள்  அதை மடித்து ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து மூடி வையுங்க...

ஆமணக்கு புண்ணாக்கு பொறி செய்வது எப்படி?

How to make castor oil trap? தென்னையில் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது . அரையடி பானையை தரையோடு தரையாக புதைத்து வைக்கவேண்டும் பானையோட வாய்ப்பகுதி தரையோடு ஒட்டி இருக்கவேண்டும் . ஒரு வண்டு நடந்துவந்து பானைக்குள் விழவேண்டும் அந்த அமைப்பில் புதைத்து வைக்கவேண்டும் . அந்த பானையில் பாதியளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் மூணு கைப்பிடி ஆமணக்கு புண்ணாக்கை கலந்துவிடவேண்டும்  பப்பாளிக்காய் ஒரு கைப்பிடி அளவு இருந்தால் அதை நாளாக வெட்டி உள்ளே போடலாம் அல்லது அரிசி வடிகட்டிய கஞ்சி இருந்தால் ஓன்று அல்லது இரண்டு டம்ளர் ஊற்றி விடலாம்  அல்லது இளநி தண்ணீர் கிடைத்தால் ஓன்று அல்லது இரண்டு டம்ளர் ஊற்றி விடலாம்  ஒரு குறுகிய காலத்துல 10 அல்லது 15 நாட்களில் வண்டு சேரும் அதை அழித்துவிடலாம் பின்பு பானையை சாணம் போட்டு நன்கு கழுவிவிட்டு மறுபடியும் மற்றொரு இடத்தில வைக்கலாம். கழுவாமல் வைத்தால் பூச்சி இறந்த வாடை மற்ற பூச்சிகளை வர விடாது . ஒரு ஏக்கருக்கு ஏழு எணிக்கையில் வைக்கலாம் . அதேசமயம் இடங்களை மாற்றி மாற்றி வைப்பதும் நல்லது . மூன்று மாதத்திற்கு இதை தொடர்ந்து செய்யலாம...

பலா மரம் பூஞ்சண நோய் கட்டுப்பாடு

Jackfruit fungal disease control பலா மரம் வளர்ப்பில் சில விஷயங்களை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும் . மழை பெய்யும் மாதங்கள் அதாவது ஆகஸ்ட் , செப்டெம்பர் அந்த காலகட்டத்திலும் ஜனவரி 15 பின் உள்ள மாதங்களிலும் மாதம் ஒரு முறையென இரண்டுதடவை 10 லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் கலந்து மரத்தை மேலிருந்து கீழ் வரை நன்றாக நனைத்து தெளிக்கவேண்டும் . பொதுவா இப்படி தெளிக்கும்போது பூஞ்சி தொற்று அகன்று , காம்புகள் வழியா பழங்களில் நகர்வது தடுப்பதற்கு ஒருவாய்ப்பாக  இருக்கும் , ஆகவே சூடோமோனஸ் , விரிடி அல்லது பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் மூன்றில் ஏதாவது ஒன்றை கலந்து மரங்கள் மீது தெளிப்பது நல்லது . பழ ஈ காண பொறிகள் வைக்கவேண்டும் குறைந்தபச்சம் ஒரு ஏக்கருக்கு 10 என்ற எணிக்கையில் வைப்பது நல்லது அதை தவிர்த்து கருவாட்டு பொறி வைக்கலாம் அல்லது சூரியஒளியில் இயங்கக்கூடிய விளக்கு பொறி வைக்கலாம் . இப்படி வைக்கும்பொழுது நாம் பலா காய்களை  தாக்கக்கூடிய ஈக்களை கட்டுப்படுத்தலாம் . பூவிலிருந்து ஒரு ஜான் வரக்கூடிய காய்கள் அமைப்பில் பழ ஈக்கள் தாக்காமல் கட்டுப்படுத்திவிடலாம்  பலா சின்ன காயாக இருக்கும் பொழுது பெவேரிய பே...

சூரியகாந்தி பயிர் செய்வதற்க்கு நீங்கள் ஐந்து முக்கிய விஷயங்கள்

Sunflower plant cultivation More Income five important points  இந்தியாவில் 80 மற்றும் 90 வருடங்களில் சமையலுக்கு சூரியகாந்தி என்னை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் அதை பயிர் செய்யும் பரப்பளவு அதிகமானது. இதை விவசாயிகள் பயிரிடுவதற்க்கு 5 முக்கிய காரணங்கள் உள்ளன . 1) சூரியகாந்தி ஒரு குறுகிய காலப்பயிர் ஆகும்.80 முதல் 115 நாட்கள் ஆகும் .  ஜயத் பயிர் பருவதிற்க்கு ஏற்றது . ரபி மற்றும் கரிப் பருவத்திற்க்கு இடையில் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் தரக்கூடிய மாற்று பயிராக இருக்கும். 2) அடுத்ததாக இதன் ரகங்கள் பற்றி சொல்லலாம் PAC 36 சூரியகாந்தி ரகம் விவசாயிகளுக்கு சிறந்த வாழ்வாதாரமாக இருக்கிறது . சூரியனை விரும்பும் பயிர் என்பதால் மானாவாரியில் கூட பயிர் செய்யலாம் . 3) இது மாறுபட்ட மண் மற்றும் வேளாண் காலநிலை நிலைகளில் வளரக்கூடியது. 4) சூரியகாந்தியில் பூச்சி நோய் மேலாண்மை செய்வது எளிமை  5) இது விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை தருவதால் பணப்பயிர் என்றே அழைக்கப்படுகிறது . இது ஒரு லாபகரமான பயிராகும் . சூரியகாந்தி பயிர் செய்யும்போது  கவனிக்கவேண்டியவை   1) சரியான ரகங்கள...

மரத்தில் எறும்பு கட்டுப்பாடு

Ant control in the tree இவ்வகை எறும்புகள் புற்று இருக்காது ஏதாவது ஒரு இடத்தில் கூடுகட்டி இருக்கும்.  இனப்பெருக்க காலத்திற்க்காக மரத்திற்கு வந்திருக்கலாம் . மரத்தில் அல்லது அருகில் ஏதாவது கூடு இருக்கிறதா என பார்த்து கொள்ளவும் . பொதுவா 10 லிட்டர் தண்ணீருக்கு 200 கிராம் மிளகுத்தூள் (கொஞ்சம் பணம் அதிகம்தான் ) கலந்து தெளிக்கலாம் . அல்லது எருக்கு கரைசல் தயார் செய்து அதை 7 லிட்டர் 3 லிட்டர் கலந்து தெளிக்கலாம். சாம்பல் இருந்தால் நேரடியாக தூவி விடலாம் . இந்த எறும்புகள் எதற்காக சுற்றுகிறது அறிய வேண்டும் உதாரணமாக மாவு பூச்சி அல்லது அதுமாதிரியான பூச்சிகள் இருந்தால் அதன் கால்களில் இருக்கும் வெள்ளத்திற்காக ஆசைப்பட்டு வரும் (முசுடு எறும்பு அதற்காக வர வாய்ப்பில்லை ) மாவு பூச்சி மாதிரியான பூச்சிகளை கட்டுப்படுத்த வெர்டிசிலியம் லக்கானி தெளிக்கலாம். எறும்புகள் வராமல் போய்விடும் , ஆனால் முசுடு வகை எறும்புகளை கட்டுப்படுத்த மிளகு அல்லது எருக்கு கரைசலை தெளிக்கவேண்டும் . அல்லது இந்த முசுடை கட்டுப்படுத்த கோமியத்துடன் மஞ்சள்தூள் கலந்து தெளிக்கலாம் அதாவது அரை லிட்டர் கோமியம் அரை லிட்டர் தண்ணீர் இந்த ஒரு லீடரோ...

வீட்டில் வளர்க்கக் கூடிய 10 பூச்செடிகள்

10 flowers that can be grown at home நம் வீட்டு தோட்டத்திலோ அல்லது மாடி தோட்டத்திலோ எந்த அளவிற்க்கு  காய்கறி வளர்கிறோமோ அந்த அளவிற்க்கு அழகுக்காகவும் ஆசைக்காகவும் வளர்க்கக்கூடியது பூக்கள் இப்படி சுலபமாகவும் ஆசையாகவும் வளர்க்ககூடிய பத்து பூக்களை பற்றி பார்ப்போம் . 1) ரோஜா  நிறைய பூக்கள் இருக்கிறது ஆனால் ஆசையாக வளர்க்கக்கூடிய பூக்களில் முதலில் இருப்பது ரோஜா பூக்கள்தான் . 100 க்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன உங்கள் பகுதியில் எந்த வகை வளரும் என்று தெரிந்து கொண்டு வளர்க்கலாம் . 2) மாரிகோல்டு     ஒருமுறை மட்டுமே பூக்ககூடிய பூவாகும் பொதுவா அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிகம் பூக்கும் இதன் நிறங்கள் நம் கண்களுக்கு அழகாக இருக்கும் (ஆரஞ்சு மற்றும் மஞ்சள் ). 3) ஜாஸ்மின்    மயக்கும் இனிமையான வாசனைக்காகவே இந்த பூக்கள் வளர்க்கப்படுகிறது. பொதுவாக அனைவராலும் வீட்டு தோட்டத்தில் வளர்க்கப்படுகிறது. 4) ஈஸ்ட் இந்தியா ரோஸ்பே இந்த பூ இந்தியாவை பூர்விகமாக கொண்டதாகும் . ஆயுர்வேத மருத்துவ பயன்பாட்டிற்க்காக அதிகம் வளர்க்கப்படுகிறது . இதன் வெள்ளைநிறம் உங்கள் தோட்டத்திற்கு ஒரு ...