What are the uses of Rice porridge in agriculture and its benefits?
விதை நேர்த்தி
வடிகட்டிய கஞ்சியை பொறுத்தவரை நாலா ஒட்டும் திரவம் . நாம் செய்யக்கூடிய விதை நேர்த்தியை உயிர் உங்களோட அதையும் சேர்த்து கொடுக்கும் போது அதனுடன் ஒட்டும் அதனாலதான் அது ஒரு ஒட்டும் திரவமாக இருக்கு .மிக குறைந்த விலையில் சிறப்பாக செயல் படக்கூடிய திரவம்
Sooty Mould
விதை நேர்த்தியை தவிர்த்து பயன்படக்கூடிய இடங்கள் என்று பார்த்தால் . இத்திரவம் ஒட்டி காய்ந்து ஒட்டி விழக்கூடியது . பொதுவா இலைகளில் ஒட்டி இருக்கும் பூஞ்சாண தொற்று மற்றும் வெள்ளை ஈ மீது தெளித்தால் அரிசி கஞ்சி காய்ந்து இவற்றை எடுத்துகொண்டு கிழே விழ வாய்ப்புள்ளது . முக்கியமா வெள்ளை ஈ தாக்குதல் முடிந்தவுடன் கருப்பாக இருக்கும் "sooty mould " என்று சொல்வார்கள் அதை எடுக்க இதை தெளிக்கலாம்.இப்படி இலைகள் தண்டுகள் மேல் உள்ள பிரச்சனைகளை தண்ணீர் ஊற்றி கழுவிவிட முடியாது இப்படி அடித்து விட்டால் நல்ல பலன் இருக்கும் .அரிசி வடிகட்டிய கஞ்சி நல்ல வளர்ச்சியூக்கியும் கூட , சாதத்தில் இருக்கக்கூடிய அதிகமான கார்போ ஹைட்ரட் கலந்திருக்க வாய்ப்புள்ளது இதை நேரடியாக கொடுத்தால் எறும்பு தொல்லைகள் வரலாம் , அதனால் மக்கவைத்து கொடுக்கலாம் . நாம்ம எங்க தெளிக்க வேண்டுமோ அங்க வைத்து 100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் அரிசி கஞ்சி கலந்து கூட 1கிலோ நாட்டு சக்கரையும் சேர்த்துக்கொள்ளலாம் , மூன்று நாள் மக்கவைத்து இதை தெளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்
தோட்டக்கலை பயிர்
தோட்டக்கலை பயிர்களில் மரத்தோட தண்டுகளில் ஒட்டி இருக்கக்கூடிய பூஞ்சாண தொற்று ஏற்பட்டு கருப்பாக இருந்தால் அரிசிக்கஞ்சியை தெளித்துவிடலாம் . காய்ந்து கருப்பாக இருப்பது விழுந்துவிடும் . இது பூஞ்சாணத்தை கட்டுப்படுத்தாது அதற்கு சூடோமோனஸ் கொடுக்கவேண்டும் கட்டுப்படுத்திய பின்பு வரும் கருப்பை இதன் மூலம் எடுக்கலாம்
Comments
Post a Comment
Smart vivasayi