Here are some easy ways on how to detect impurities in our daily foods
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் கலப்படம் இருப்பதாக வரும் செய்திகள் நம்மை அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன் நாம் உணவுப்பொருள் வாங்குபவர்களிடம் நம்பகத்தன்மையை குலைக்கச்செய்கிறது . நாம் வாங்கும் உணவு பொருட்களில் கண்டுபுடிக்க சிலவழிமுறைகள் உள்ளன , அவற்றை பற்றித்தெரிந்து கொள்ளலாம் .
பால் - Millk
நாம் அன்றாட பயன்படுத்தும் முக்கியமான உணவுப்பொருள் . ஒரு பளபளப்பான சாய்தளத்தில் ஒரு சொட்டுப்பாலை விடுங்கள் கலப்படம் இல்லாத பாலாக இருந்தால் வெண்மை தடம் பதித்து மெதுவாக கிழே இறங்கும் .தண்ணீர் கலந்திருந்தால் வேகமாக வழுக்கி ஓடும் .
நெய் - Ghee
ஒரு கண்ணாடி கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெயை விட்டு அதில் வேகவைத்து மசித்த உருளைகிழங்கை நன்றாக பிசைந்து அதில் அயோடினை இரண்டு சொட்டு விடவும் உருளை கிழங்கு நீல கலராக மாறினால் கலப்படம் உள்ளது .
காபித்தூள் - Coffee powder
ஒரு டம்ளரில் தண்ணீரை ஊற்றி ஒரு ஸ்பூன் காபித்தூளை போடுங்கள் அதில் காபித்தூள் சக்கரைத்தூள் மாதிரி மிதந்தாள் சிக்கரி கலப்படம் உள்ளது
டீ தூள் - Tea
ஒரு வடிகட்டியை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் டீ தூளை பரப்பி வைக்கவும் பின்பு நீரில் கழுவவும் வடிகட்டியில் கரை ஒட்டியிருந்தால் கலப்படம் , தூய தூளில் கழுவும்போது கரை வராது .
காய்கறிகள் - Vegetables
ஒரு காய்கறி எடுத்துக்கொண்டு உதாரணமாக பச்சை மிளகாய் எடுத்துக்கொள்ளுங்கள் , துணி அல்லது பஞ்சு எடுத்துக்கொண்டு அதில் நீர் அல்லது சிறிதளவு என்னை எடுத்து மிளகாயில் தேய்க்கவும் , துணி பச்சையாக மாறினால் கலப்படம் .
மஞ்சள் - Turmeric
மஞ்சள் தூளில் கலப்படம் உள்ளதை தெரிந்துகொள்ள ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சள் பொடியை போடுங்கள் கலப்படமான மஞ்சள் தூளாக இருந்தால் அடர் மஞ்சள் நிறமாக தோன்றும்.
Comments
Post a Comment
Smart vivasayi