What tree can be planted along the edges of the fence
வேலி ஓரங்களில் மரக்கன்று
வேலி ஓரங்களில் மரக்கன்று நடுவதற்க்கு முன் மண் அமைப்பை பார்த்துக்கொள்ளுங்கள் . உதாரணமாக செம்மண் செம்மண் சரளை மணல் போன்ற அமைப்பு இருந்து தண்ணீர் அளவாகத்தான் பயன் படுத்துவீர்கள் என்றால் எல்லா வகையான மரக்கன்றுகளும் நடலாம் . பொதுவா தமிழ் நாட்டோட மரத்தேவைக்காக வீடுகளுக்கும் அல்லது தொழிசாலைகளுக்கும் எல்லாத்தேவைகளுக்கும் ஏற்றமாதிரி எல்லா மரங்களும் வேலிப்பயிராக நடலாம் .
செம்மரம் , சந்தன மரம் , தேக்கு , குமிழ் , மகாகனி ,பெருமரம் , கரு மருது , நீர் மருது மற்றும் கருங்காலி இதெல்லாம் பொதுவா நடக்கூடிய மரங்கள் . இதை தவிர்த்து ஒரே வகை மரங்கள் நடலாம் என்றால் மலை வேம்பு , ஆச்சா மற்றும் சவுக்கு மரங்கள் நடலாம் இதுஎல்லாமே வேலிகளில் நடக்கக்கூடிய பயிர்கள் . இடத்தை பொறுத்து சூழ்நிலையை பொறுத்து நடலாம் . நம்ம பாத்துகிற மாதிரி பாதுகாத்துகிற மாதிரி இருந்தால் சந்தனமரம் செம்மரம் மாதிரி உயர் ரக மரங்களை வைக்கலாம் . இல்லையென்றால் இது இரண்டும் நீங்கலாக மற்ற மரங்களை வைக்கலாம்
களிமண் நிலங்களில்
களிமண்ணாக இருந்தால் அல்லது கொஞ்சம் உப்புத்தன்மை அதிகம் உள்ள நிலமாக இருந்தால் மேல் சொன்ன கரு மருது மற்றும் கருங்காலி மரத்தை தவிர்த்து மற்ற மரங்களை நடலாம் . இந்த களிமண் நிலத்தில் பூவரசு நன்றாக வரும் தேக்கு அல்லது அதைவிட இன்றய நிலையில் விலை அதிகம் , கொஞ்சம் மெதுவாக வளரும் நல்ல விலை மதிப்புடையது . அடுத்து வேம்பு இதுவும் வீடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய மரங்கள் .
Comments
Post a Comment
Smart vivasayi