What to do if bird flu comes
What is bird flu?
இந்தவகை காய்ச்சல் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா A வகை வைரசால் ஏற்படுகிறது . இதனால் பலவகையான பறவைகள் பாதிக்கப்படுகின்றன காட்டில் வாழக்கூடிய பறவைகள் , வான் கோழி , காடை , கோழி மற்றும் வாத்துகள் இநோய்யால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன
எப்படி பரவுகின்றது
பறவைக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட பறைவைகளிடமிருந்து வெளிப்படும் எச்சில் , மலம் போன்றவற்றால் எளிதில் பரவும் மேலும் நன்றாக உள்ள பறவைகளுக்கு நோய் பாதிக்கப்பட்ட உணவு , நீர் , மற்றும் பொருட்கள் மூலமும் பரவும் .
இந்த நோய் பறவைகளிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. ஆனால், பறவைகளுடன் நெருங்கிய தொடர்பில் பணிபுரியும் நபர்கள் முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் இதை தடுக்கலாம் .
பண்ணையில் பின்பற்ற வேண்டிய வழி முறைகள்
கோழி மற்றும் முட்டையை நன்கு வேகவைத்து உண்ணவேண்டும் 70 C இவ்வகை வைரஸ்களை அழித்துவிடும். பாதிக்கப்பட்ட பண்ணையிலிருந்து மற்றொரு பண்ணைக்கு வண்டிகள் மூலமும் பரவுகிறது . இதனை கவனமாக கையாளவேண்டும்
உங்கள் பண்ணைக்கு அருகில் புலம்பெயர்ந்த பறவையோ அல்லது காட்டில் வாழும் பறவையோ இறந்து கிடந்தால் அதை வெறும் கையால் தூக்க கூடாது . கையுறை , முகக்கவசம் , மற்றும் கண்ணாடி அணிந்து குழிதோண்டி புதைக்கவோ அல்லது எரிக்கவோ செய்யலாம்.
நீங்கள் தண்ணீர் கொடுக்கும் டேங்க் மாற்றப்பறவைகள் அருந்தாதவாறு மூடிவைக்க வேண்டும். உங்கள் பண்ணையை சுற்றி அடர்த்தியான மரங்கள் இருந்தால் prune செய்து விடுங்கள் பண்ணையை எப்பொழுதும் சுத்தமாக வைக்கவேண்டும் .
Comments
Post a Comment
Smart vivasayi