வயல் தயாரிப்பு
1.பசுந்தாள் உரப்பயிர் செய்து பூக்கும் நிலையில் மடக்கி உழுது விடுங்கள்.
2. மக்கிய தொழு உரம் 7டன் அளவுக்கு ஒரு ஏக்கருக்கு கொடுங்கள்.
3. டிரைக்கோடிர்மா விரிடி 2 கிலோவை தொழு உரத்தோடு கலந்து கொடுப்பது அவசியம்.
இது பயிர் பாதுகாப்பில் பூசானங்களின் தாக்குதலை தடுக்கும்.
4. மண் புழுதி படும் படியாக உழவு செய்வது அவசியம்.
5. சொட்டுநீர் பாசனம் அமைப்பது செலவையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும்.
6. 4' ஒரு பார் அமைத்து கொள்வது அறுவடை செய்ய வசதியாக இருக்கும்.
நாற்றுகள் நடவு
1. நல்ல தரமான விளைச்சல் கொடுக்கும் ரகங்களை தேர்வு செய்வது நல்லது.
2. வியாபார நோக்கில் பயிர் செய்யும் போது ஹைபிரீட் விதைகளை பயன்படுத்துங்கள்.
3. சந்தை வாய்ப்பு உள்ள ரகங்களை தேர்வு செய்வது நல்லது.
4. 28 நாள் வயதுடைய நாற்றுகள் நடவு செய்யுங்கள்.
5. கத்தரிக்கு 4'×4' , தக்காளி 2 1/2'×2 1/2', வெண்டை, மிளகாய் 1 1/2'×1 1/2'
என்ற இடைவெளி அவசியம்.
6. நாற்றுகளை பஞ்சகவியம், அல்லது ஜீவாமிர்தம் கொண்டு விதை நேர்த்தி செய்வது நடவு செய்யுங்கள்.
7. தக்காளியை ஆழமாக நடவு செய்யுங்கள்.
கத்தரியையும், தக்காளியையும் பக்கத்தில் நடவு செய்யாமல் இருப்பது நல்லது.
பயிர் பாதுகாப்பு
1. நடவு செய்த 15 வது நாளில் வேப்பெண்ணெய் + பூண்டு சாறு கலந்து தெளியுங்கள்.
இது தண்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்தும்.
2. 15 நாட்களுக்கு ஒரு முறை சூடோமோனஸ் 1:10 என்ற விகிதத்தில் செடிகள் மீதும் வேர் பகுதியிலும் படுமாறு தெளியுங்கள்.
3. வாரம் ஒருமுறை பாசனநீரில் ஜீவாமிர்தம் அல்லது WDC கலந்து விடுங்கள்.
4. பயிர் பாதுகாப்பில் "வருமுன் காப்பது" தான் சிறந்தது. அதற்கு ஜீவாமிர்தம் (1:10)அல்லது WDC (3:10) அளவுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை தெளியுங்கள். இது மிகச்சிறந்த பலனை கொடுக்கும்.
5. பெவேரியா பேசியானா கையிருப்பு நல்லது.
புழுக்கள் தாக்கம் தெரிந்தால் ஒரு லிட்டர் நீருக்கு 3ml என்ற விகிதத்தில் கலந்து தெளியுங்கள்.
6.வயலை சுற்றி இரண்டு வரிசை மக்காச்சோளம் நடவு செய்யுங்கள். இது பூச்சி தாக்குதலை குறைக்கும்.
7.பூக்கள் தோன்றும் நிலையில் டிரைக்கோகிராம்மா ஒட்டுண்ணி அட்டையை கட்டுங்கள்.
8. இன கவர்ச்சி பொறி ஒரு ஏக்கருக்கு 4 வைப்பது நல்லது.
9. மஞ்சள் நிற அட்டையை எண்ணெய் தடவி தேவையான அளவு கட்டி விடுங்கள்.
10. செண்டுமல்லி செடிகளை 10' க்கு ஒன்று நடவு செய்யுங்கள்.
களை கட்டுப்பாடு
நடவு செய்த 30 வது நாளில் களை எடுப்பது அவசியம். களை கொத்தும் முன் நரிப்பயறு விதைகளை காலியிடங்களில் தெளித்து கொத்தி விடுங்கள்.
இவை முளைத்து வெற்றிடங்களை மூடிக் கொள்ளும். உயிர் மூடாக்காக இருப்பதுடன் களைகள் தோன்றாது காக்கும். மண்ணை மிருதுவான வைத்துக் கொள்ளும்.
உர மேலாண்மை
செடிகள் பலன் கொடுக்க தொடங்கியவுடன் தொழு உரத்தை தொடர்ந்து கொடுங்கள்.
இது செடியின் வளர்ச்சியை தொடர்ந்து ஊக்குவிக்கும். பலன் கொடுக்கும் காலமும், தரமும் அதிகரிக்கும்.
நன்றாக பூ எடுக்க புளித்த மோருடன் பெருங்காயம் கலந்து தெளியுங்கள்.
வளர்ச்சிக்கு ஏற்ப பஞ்சகவியம், மீனோ அமிலம் தெளியுங்கள்.
முக்கியமானது 4 நாட்களுக்கு ஒருமுறை ஜீவாமிர்தம் அல்லது WDC தெளிப்பது பயிர் பாதுகாப்பில்சிறப்பாக பயன் படும்.
Comments
Post a Comment
Smart vivasayi