Ten ways to increase the yield of chili plant
உங்களுடைய மாடித்தோட்டத்திலோ அல்லது வீட்டின் பின்புறத்திலோ மிளகாய் செடி வளர்த்தால் மகசூலை அதிகரிக்க செடி வளர்க்கும் போது சில சின்ன விஷயங்களை கையாண்டால் நல்ல மகசூல் கிடைக்கும். என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம் .
1) நீங்கள் மிளகாய் நடுவதற்க்கு முன் நடுமிடத்தில் வீட்டில் தயாரித்த இயற்கை உரங்களை போடலாம். பயன்படுத்திய டி தூள் . முட்டை ஓடு மற்றும் வெங்காயத்தோல் எல்லாத்தையும் காயவைத்து கலந்து அதனுடன் தேங்காய் நார் மற்றும் மிளகாய்த்தூள் கலந்து நாடும் இடத்தை கிளரி தூவி விடலாம்
2) நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் காய்ந்த மிளகாயை விதைப்புக்கு எடுத்துக்கொள்ளலாம் விதைப்பதற்க்கு முன் தண்ணீரில் ஊறவைத்து மிதக்கும் விதைகளை எடுத்துவிட்டு மற்ற விதைகளை விதைப்புக்கு பயன்படுத்தலாம்
3) நீங்கள் தொட்டியில் வளர்த்தாலும் தரையில் வளர்த்தாலும் ஒரு இடத்தில இரண்டு செடி வைத்து வளருங்கள்
4) மிளகாய்ச்செடிக்கான உரங்களை வீட்டிலேயே தயாரிக்கலாம் . கடலை புண்ணாக்கில் நேற்று வடித்த அரிசி கஞ்சியை ஊற்றி நன்றாக கலக்கி ஒருவாரம் வைத்திருக்க வேண்டும் எட்டாவது நாள் 10 கப் தண்ணீர் சேர்த்து வாரம் ஒரு முறை தெளிக்கலாம் .
5) வேப்பம்புண்ணாக்கு இரண்டு வாரத்துக்கு ஒரு முறை இடலாம்
6) வெள்ளை பூச்சியின் தாக்குதலை குறைக்க வடித்த கஞ்சியை நீர் சேர்த்து 10 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம்
7) ஒரு கைப்புடி நிறைய சாம்பலையெடுத்து அதில் ஒரு கப் வடித்த கஞ்சியை ஊற்றி அதனுடன் 20 கப் நீரை ஒற்றி தெளித்தும் , ஊற்றியும் வந்தால் மிளகாய்ச்செடி சீக்கிரம் பூ பூக்கும்
8) பெருங்காயத்தூள் ஒரு டி ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் ஒரு லிட்டர் நீரை கலந்து தெளித்தால் காய் பிடிப்பு அதிகமாகும் பூக்கள் உதிர்வதும் குறையும் .
9) பழைய செய்தி தாள்களை சிறிதாக கட் செய்து செடியின் கீழ் இரண்டு வாரத்திற்க்கு ஒருமுறை போட்டு வைத்தால் மகசூல் போட்டுவைத்தால் மகசூல் பெருகும்
10) நீங்கள் மீன் கழுவிய தண்ணீரில் கொஞ்சம் ஜாக்கிரியை போட்டு ஒருவாரம் கழித்து வடிகட்டி தெளித்தோ அல்லது ஊற்றியோ விட்டால் நல்ல பலன் தரும்
கடலை புண்ணாக்கில் நேற்று வடித்த அரிசி கஞ்சியை - இரண்டின் அளவு கூறினால் நன்றாக இருக்குமே
ReplyDelete