Tamil Nadu Agricultural University has introduced new varieties as Pongal gift in the year 2021.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 2021 ஆம் ஆண்டில் பொங்கல் பரிசாக புதிய ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது .
நெல் - கோ 54
நெல் - ஏடிடீ 55
நெல் - டிஆர்ஒய் 4
கேழ்வரகு ஏடிஎல் 1
வரகு ஏடிஎல் 1
உளுந்து கோ 7
விஎம்ஆர் (கத்திரி) 2
பாலில்லா பழா பிஎல்ஆர் 3
குடம்புள்ளி பிபிஐ(கு) 1
விளாம்பழம் டபில்யுஎப்எல் 3
மலைவேம்பு எம்டிபி 3
வேளாண்மை துறையில் 6 ரகங்களும் தோட்டக்கலை துறையில் நான்கு ரகங்களும் மற்றும் வனவியல் துறையில் 1 ரகங்களும் வெளியிடப்பட்டுயிருக்கின்றன .
மூன்று நெல் ரகங்கள்
கோ 54
சொர்ணவாரி / கார் /குருவை /மற்றும் நவரை பட்டத்திற்கு ஏற்றது 110 முதல் 115 வயது கொண்டது சராசரியாக ஒரு ஹெக்டருக்கு 4600 கிலோ சராசரியாக கொடுக்கக்கூடியது பூச்சி மற்றும் நோய்களுக்கு மிதமான எதிர்ப்பு தன்மை கொண்டது.
ADT 55
கார் மற்றும் குருவை பட்டத்திற்கு ஏற்றது 110 முதல் 115 வயது கொண்டது சராசரியாக ஒரு ஹெக்டருக்கு 6000 கிலோ வரை சராசரியாக எடுக்கலாம் சம்பா பருவத்தில் திருநெல்வேலி, தென்காசி, காவிரி டெல்டா மண்டலம்பகுதிகளில் ஏற்படும் பாக்டீரியல் இலை புள்ளி நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டதாகும்
TRY 4
உப்புத்தன்மை அதிகமுள்ள நிலங்களுக்கும் சம்பா /தாளடி மற்றும் பின் தாளடிபட்டதில் மானாவாரியாக பயிரிடலாம் 125 முதல் 1300 நாள் வயது கொண்டது ஒரு ஹெக்டருக்கு 5800 கிலோ வரை சராசரியாக கொடுக்கக்கூடியது.
ராகி- ஏடிஎல் 1
சிறு தானியத்தில் ராகி- ஏடிஎல் 1, 110 நாள் வயதுடைய ரகமாகும் . நீர் பாசனத்தில் சராசரியாக ஹெக்டருக்கு 3130 கிலோவும் மானாவாரியில் ஒரு ஹெக்டருக்கு 2900 கிலோவும் எடுக்கலாம் கால்சியம் சத்து நிறைந்தது இயந்திர அறுவடைக்கு ஏற்றது.
வரகு ஏடிஎல் -1
110 நாள் வயதுடைய மானாவாரி மற்றும் நீர்ப்பாசன பகுதிகளுக்கு ஏற்ற ரகங்களாகும் . ஹெக்டருக்கு 2500 கிலோவும் தட்டை 4400 கிலோவும் கிடைக்கும் பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்து அதிகம் உள்ளது இயந்திர அறுவடைக்கு ஏற்றது
பிளாக் கிராம் Co 7
60 முதல் 65 நாள் வயதுடையது கரிப் மற்றும் ரஃபி பட்டத்திற்கு ஏற்றது .இது யெல்லோ மொசைக் வைரஸ் எதிர்ப்பு திறன் கொண்டது மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி இடத்திற்கும் ஏற்றது .சராசரியாக ஹெக்டருக்கு 881கிலோவும் கிடைக்கும்
தோட்டக்கலைத்துறை
தோட்டக்கலைத்துறையில் இந்தாண்டு நான்கு ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன வட தமிழ்நாட்டிற்காக முள் குறைவான ரகமாக கத்தரியில் VRM (Br) 2 ரகமும் கம்லெஸ் / லேடெக்ஸ் குறைவாக இருக்கும் PLR3 பலாப்பழ ரகம் பழத்தின் எடை 5 கிலோவும் சராசரியாக 200 பலம் வரை காய்க்கும் . சமையல் மற்றும் உடல் எடையை குறைக்கும் மருத்துவ பயன்பாட்டிற்க்காக குடம்புள்ளி பிபிஐ(கு) 1 PPI(K) 1ரகம் வெளியிடப்பட்டுள்ளது .அதிக மழை பெய்யும் இடத்திற்கு ஏற்றது ஒரு மரத்திற்கு 120 கிலோ வரை மகசூல் கிடைக்கும் , சத்து மிகுந்த விளாம்பழம் PKM 1 ரகமும் வெளியிடப்பட்டுள்ளது .
வானவியல் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கு மலை வேம்பு MTP3 ரகம் வெளியிடப்பட்டுள்ளது
Comments
Post a Comment
Smart vivasayi