Rainfed Maize Cultivation
மானாவாரியாக இருக்கக்கூடிய பெருவாரியான நிலப்பரப்புகளில் மக்காச்சோளம் எளிமையாக பயிரிடப்படுகிறது . இது மானாவாரி நிலங்களில் நீண்டகாலமா வறட்சியை இருக்கிற நிலங்களில் கொஞ்சம் மழை பெய்தாலும் உழுது நமக்காகவும் நம் கால்நடைகளுக்காகவும் வளர்க்கக்கூடிய பயிர் .மானாவாரி நிலத்தில் குறைந்தபச்சம் ஒரு ஹெக்ட்ர்க்கு இரண்டு டன் சோளம் கிடைக்கவேண்டும் . ஒரு ஏக்கர்ன்னு எடுத்துக்கிட்டா கூட 800 கிலோ கிடைக்கவேண்டும் . சோளத்தட்டை 3500 முதல் 4500 கிலோவாரை கிடைக்கவேண்டும் .
மக்காசோள விதை நேர்த்தி
பொதுவா சில விவசாயிகள் சோள விதையை வாங்கிட்டு வந்து சோதனை செய்யாமல் நிலத்தை உழுது விதைத்துவிடுவார்கள் , இது தவறு . முதலில் என்ன செய்யவேண்டும் , வாங்கி வரும் விதையை பரப்பி வைத்து சரியில்லாத விதையை நீக்கவேண்டும் முக்கியமா பூஞ்சாணம் உள்ளது , பாதிக்கப்பட்டது போன்ற விதைகளை நீக்கிவிட வேண்டும் .
ஒரு ஏக்கருக்கு 6 கிலோ சோள விதை தேவைப்படும் கிலோவிற்க்கு பவுடராக இருந்தால் 20 கிராம் சூடோமோனஸ் 200 கிராம் அசோஸ்பயிரில்லம் 50 கிராம் இந்த கலவையில் கலந்து இதனுடன் அரிசிக்கஞ்சி கலந்து ( கஞ்சி கலப்பதால் இந்த பொருட்கள் சோள விதையின் மீது நன்றாக படியும் ) குறைந்தது 12 மணிநேரமாவது ஊறவைக்கவேண்டும் பின்பு தூவலாம் .
களிமண்ணில் தூவப்பட்ட சோள விதை
எந்த காலகட்டமாக இருந்தாலும் 15 நாளுக்கு ஒருதடவை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகாவியவோ அல்லது இ .எம் கரைசல்லோ அதிகாலை 7 அல்லது 8 மணிக்கு மிகாமல் இலைகள் மீது தெளித்து விடலாம் . இது எந்த உயரமான சோளப்பயிரா இருந்தாலும் தெளிச்சு விடலாம் அப்படி தெளிப்பதால் இல்லை பெருக்கத்துக்கு நல்ல விளைச்சலும் கதிர் பெருக்கத்திற்கும் வாய்ப்பாக இருக்கும் .கதிர் விட ஆரம்பித்த 40 நாளைக்கு அப்புறம் மீன் அமிலம் 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி கலந்து தெளிக்கலாம் மீன் அமிலம் கதிர் வருவதற்க்கு முன் 200 லிட்டர் ட்ரம்மில் 180 லிட்டர் தண்ணீர் கலந்து அதில் கடலை புண்ணாக்கு கலந்து மூணு நாள் ஊறவைத்து வடிகட்டி அந்த தண்ணீரை அப்படியே தெளிக்கலாம் . கதிர் வந்தபின் மீன் அமிலம் மற்றும் மீன் அமிலம் கொடுக்கலாம் . இப்படி செய்வதால் 800 முதல் 1 டன் வரை கூட மகசூல் எடுக்கலாம்
மாதம் ஒரு முறை 1 ஏக்கருக்கு ஒரு கிலோ அளவிற்க்கு வேம் மற்றும் காய்ந்த தூளாக்கப்பட்ட நாட்டு மாடு சாணத்தோட கலந்து அதுகூட ஒரு ஏக்கருக்கு 2 கிலோ அளவிற்க்கு பௌடர்ல இருக்கக்கூடிய பாஸ்போபாக்டீரியாவை கலந்து தண்ணீரை தெளித்து பிரட்டி மூடி மூணு நாளைக்கு ஊறவைக்கலாம் இதை தூவிவிடலாம் அப்ப அப்ப பெய்ர மலையில பதமாகி நல்ல விளைச்சலை கொடுக்கும் .
செம்மண் நிலம்
வேம் கொடுப்பதற்க்கு பதிலா சூடோமோனஸோ அல்லது விரிடியோ கொடுக்கலாம் மற்றபடி களிமண் நிலத்தில் செய்யும் செயலை இங்கேயும் செய்யலாம் . இந்தமாதிரி செய்வதால் சோள விளைச்சலை அதிகப்படுத்தும்
Comments
Post a Comment
Smart vivasayi