Natural methods to look out for in groundnut cultivation
நிலக்கடலை சாகுபடி அசோஸ்பைரில்லம் , ரைசோபியம்
விளையக்கூடிய நிலக்கடலை பூமிக்கு கீழே இருக்கு . ஆரம்பத்தில் அசோஸ்பைரில்லம் பயன்படுத்தலாம் 40 நாட்களுக்கு பிறகு வேளாண் அலுவலகம் அல்லது கடைகளில் ரைசோபியம் கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்தனும். அசோஸ்பைரில்லம் பவுடரடாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 4 கிலோ மணலோடு கலந்து தெளிக்கணும் . இதிலிருந்து 5 நாட்கள் கழித்து பாஸ்போ பாக்டீரியா ஏக்கருக்கு 2 கிலோ உங்கள் நிலைத்து மண்ணிலேயே கலந்து துவலாம் அல்லது தண்ணீர் வழியாக விடலாம்.
நிலக்கடலையின் வேர்களுக்கு
இப்படி செய்வதால் நிலக்கடலையின் வேர்களுக்கு கிடப்பதை உறுதிப்படுத்தலாம் . இதில் சூடோமோனசை , விரிடி அல்லது பேசில்லஸ் சாப்ஸ்டில்ஸ் தெளிச்சும் கொடுக்கணும் தரைவழியும் கொடுக்கணும் 15 நாட்களுக்கு அல்லது மாதம் ஒரு முறை கொடுக்க வேண்டும் . 10 லிட்டருக்கு 50 மில்லி அல்லது 100கிராம் கலந்து தெளிக்கலாம் . தரை வழியென்றால் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் கொடுக்க வேண்டும் .
இப்படி நிலக்கடலைக்கு செய்யும்போது
ஆரம்பத்துல ஒரு இரண்டு தடவை கொடுக்கிறோம். 30 வது நாள் வேம் இருந்தால் ஒரு ஏக்கருக்கு குறைந்தது 1 கிலோ கலந்து தெளித்தால் வேர் வளர்ச்சியும் நன்றாக இருக்கும் பூஞ்சாண தாக்குதலையும் கட்டு படுத்தலாம் .
கடலை சாகுபடியில் கவனமாக இருக்கவேண்டிய நாட்கள்
எதுலயும் அதிக லாபம் கிடைக்கவேண்டும் என்பதால் உதாரணமாக 105 நாள் பயிராக இருந்தால் 10 ,20 30 இப்படி பத்து பத்தாக ஏதாவது இடுபொருள் தரைவழியும் , 5, 15, 25 இப்படி பத்து பத்தாக தெளித்தும் விடலாம் கடலை சாகுபடியில் கவனமாக இருக்கவேண்டிய நாட்கள் 25 வது நாள் முதல் 45வது நாள் வரை இந்த காலத்தில்தான் பூக்கள் அதிகம் பூக்கும் வேர்களும் அதிகம் விரியும் இந்த நாட்களை சரியாக கவனிக்கவேண்டும் ரைசோபியம் கொடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும் பாஸ்போபாக்டீரியா கொடுக்கும் அளவை அதிக படுத்த வேண்டும்
அருமை
ReplyDelete