Natural insect repellent papaya leaf solution for home garden
பப்பாளி இலைக் கரைசல்
நம் வாழ்க்கையில் விரும்பி சாப்பிட்ட பழங்களில் பப்பாளிக்கு எப்பவுமே ஒரு தனி இடம் உண்டு . பப்பாளியின் பச்சை இலை எப்பொழுதுமே நம் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் . பப்பாளியில் எப்பொழுதுமே வைட்டமின் A சத்து அதிகமாக காணப்படும் , இது நம் உடம்பிற்க்கு தேவையான ஒன்றாகும் , பப்பாளி அழுகு சாதன பொருளாகவும் பயன்படுகிறது. பப்பாளி சிறந்த பூச்சி விரட்டியாகவும், பயிர் வளர்ச்சியூக்கியாகவும் செயல்படுகிறது . பப்பாளி சாற்றை தெளிப்பதால் வெள்ளை புள்ளி , ஏபிட்ஸ் , நத்தை , எறும்புகள் வராமல் தடுப்பதோடு like leaf blight, plant blight, leaf curling and rot போன்றவற்றையும் வராமல் தடுக்கிறது .
பப்பாளி இலைக் கரைசல் எப்படி தயாரிப்பது
புதிதாக வந்த இலையை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் அல்லது பெரிய இலையை சிறுதுண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளலாம் , அதில் அரை கப் தண்ணீரை ஊற்றி அதனுடன் 4 நறுக்கிய வெள்ளைப்பூண்டை போட்டு 12 மணிநேரம் வைக்கவேண்டும் . பின்பு அதில் கொஞ்சம் நீரை ஊற்றி கையால் பிழிந்து வடிகட்டி பப்பாளி இலை சாற்றை எடுக்க வேண்டும் . இதனுடன் ஒரு கப் வடித்த கஞ்சி மற்றும் தண்ணீர் சேர்க்கவேண்டும்
இந்த பப்பாளி கரைசலை பாதிக்கப்பட்ட செடிகளுக்கு 1வது நாள் மற்றும் 7 வது தெளிக்கலாம் தெளித்த ஒருவாரத்தில் நல்ல பலன்தெரியும். மழை காலத்தில் தெளிப்பதை தவிர்த்து விடுங்கள் . காலை 8 மணிக்குள் தெளிப்பது நல்ல பலன்கள்தரும் .
இந்த பப்பாளி கரைசல் பட்டாணியில் வெள்ளை ஈ மற்றும் அஸ்வினி தாக்குதலை குறைகின்றது , தக்காளியின் இலைகள் மஞ்சளாக மாறுவதை தடுக்கும் கத்தரியில் இலை புள்ளி நோயை குறைக்கும் .
Comments
Post a Comment
Smart vivasayi