Cultivation of tomatoes in a natural way
தக்காளி பயிரின் வயது
தக்காளி பயிரின் வயது குறைந்தபட்சம் 150 ஒரு சில பயிர்களில் 180 நாட்கள் , 5 முதல் ஆறு மாதம் வரை செய்ய வேண்டிய விவசாயம். நாட்டு விதைகளை தேர்ந்தெடுத்தால் குறைந்தபச்சம் 10 டன் அதுவே ஹைபிரிட் ஆக இருந்தால் 25 டன் மகசூல் எடுக்க வேண்டும் என ஒரு இலக்கை முடிவு செய்து கொள்ளவேண்டும் . இது எல்ல வகை மண்ணுக்கும் பொருந்தும் . தக்காளியை பொறுத்தவரை தழைச்சத்து ,சாம்பல்சத்து இது இரண்டும் மிகவும் முக்கியம் . பேரூட்ட சத்துக்களை 100 ஆக பிரித்தால் தழைச்சத்து 40 மணி சத்து 20 சாம்பல் சத்து 40 என்ற அளவில் கொடுக்கவேண்டும் . உங்களுக்கு சரியான விளைச்சல் கிடைக்கவில்லையென்றால் அதற்க்கு காரணம் சாம்பல் சத்தாக இருக்கும் .
தக்காளி விதைகள்
தரமான விதைகள் வாங்க வேண்டும் . நாட்டு விதைகள் வாங்கினால் அதை போடுவதற்கு முன்னாள் வெள்ளை துணியில் பரப்பி பாதிக்கப்பட்ட விதைகளை ஒதுக்க வேண்டும். கறுப்பானது , வளைந்தது பூசணம் பூத்தது போன்ற தக்காளி விதைகளை அப்புறப்படுத்தவேண்டும் , ஹைபிரிட் விதை வாங்கினாலும் இதை செய்யவேண்டும் .
விதை நேர்த்தி
1 கிலோ தக்காளி விதைக்கு 10 கிராம் அல்லது மில்லி சூடோமோனஸ் கலந்து மாற்று 20 முதல் 30 கிராம் அசோஸ்பயிரில்லம் கலந்து கொள்ளவேண்டும், தேவையான அளவு வடிகட்டிய அரிசி கஞ்சி சேர்த்து நன்றாக பெரட்ட வேண்டும் . பின்பு தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும் நிழலில் காயவிட வேண்டும் அப்போது ஒட்டிக்கொண்டிருக்கும் விதைகளை தனித்தனியாக பிரிக்க வேண்டும்
பிறகு நாற்றங்காலில் போடலாம் .நாற்றங்காலாக வாங்கி வந்தால் , எங்கிருந்து வாங்கி வந்தாலும் வேரழுகல் அதை உண்டாக்கும் நூற்புழு இல்லாமல் இருக்கவேண்டும்
நிலம் தயாரிப்பு
இதில் முக்கியமானது 2 அல்லது மூன்று தடவை உளவு ஓட்டவேண்டும் ஒன்னேகால் அடி ஆழத்திற்க்கு மண் பொல பொலன்னு இருக்கணும் அப்பத்தான் வேர் நன்றாக ஓடும் . இரண்டு தடவை 5கை கலப்பை ஒருதடவை ஒன்பது கை கலப்பை போட்டு உழலாம் . கடேசி உளவிற்க்கு முன் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு அல்லது வேப்பம் கொட்டை தூள் பரப்பி விடலாம் மற்றும் சாம்பல் குறைந்தபச்சம் 120 கிலோ , சூடோமோனஸ் 2 கிலோ பரப்பி விடலாம் தொழுஉரம் குறைந்தது 2 ட்ராக்டராவது போடவேண்டும் 4 லோடு போடுவது நல்லது அது வாய்ப்பு இல்லையெனில் உயிர் உரங்கள் போடவேண்டும் பிறகு கடேசி உழவு செய்யவேண்டும். இதை நாம் நாற்று போட்டால் இதைச்செய்யவேண்டும் அதுவே , வெளியிலிருந்து நாற்று வாங்கினால் கடேசி உழவின் போது ட்ரைகோடெர்மா ஹசானியம் அல்லது பேஸிலோ மைசிஸ் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் தெளிச்சுவிட்டு உழுது இரண்டு அல்லது மூன்று நாள்கள் கழித்து நடலாம்
Comments
Post a Comment
Smart vivasayi