Coconut sapling planting method
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு இருக்ககூடிய மரம் இருக்கவேண்டிய மரம்மும் கூட , இந்த தென்னை மரக்கன்றை எப்படி நடுவது என்று பார்ப்போம் . இந்த தென்னை மரத்தோட தூர் பகுதி ஒரு ஆண்டிற்க்கு ஒரு கண அடி வரை வளர்ச்சி அடையும் . அப்போது , கிட்டத்தட்ட அய்ந்தாயிரம் முதல் ஆறாயிரம் வரை சல்லி வேர்கள் தோன்றும் அவை பக்கவாட்டாக சென்று மரத்தை தாங்கி பிடிக்கும்.
தென்னை மரக்கன்றை எப்படி நடுவது
முதலில் 3*3*3 அடிக்கு குழி எடுக்கவேண்டும் மறுநாள் முக்கால் குழி அளவிற்க்கு மண்ணை மறுபடியும் இழுத்துவிட வேண்டும் பின்பு காலில் கொஞ்சம் மிதித்து விடுங்கள் . பிறகு நடுப்பகுதியில் நெத்தை வைக்கவேண்டும் , கன்றோட பக்கவாட்டு பகுதியில் மண்ணை கொஞ்சம் இழுத்துவிட்டு அதில் குறைந்தபச்சம் 5 கிலோ மக்குண தொழு உரம் , 20 கிராம் சூடோமோனஸ் இரண்டையும் கலந்து சுற்றி வரை போட்டுவிடுங்கள் .
உரம்
தொழு உரம் கிடைக்கவில்லையெனில் அசோஸ்பயிரில்லம் 200 கிராம் , பாஸ்போபாக்டீரியா 100 கிராம் இதோட சூடோமோனஸ் கலந்து குழியோட எல்லா பகுதிகளிலும் போட்டு விட்டு மிச்சமண்ணை இழுத்து தென்னை கன்று உயரமாகவும் அதிலிருந்து மூணு அடிக்கு வட்டப்பாத்தி போட வேண்டும் என்னயென்றால் நீங்கள் ஊற்றும் தண்ணீர் கன்றிலிருந்து மூன்றடி தள்ளி இருக்கவேண்டும்
Comments
Post a Comment
Smart vivasayi