Bhendi leaf sucker insect organic management
இயற்கை வழி தீர்வு
சோலார் விளக்கு பொறி வைக்கலாம் , அடியுரமாக வேப்பம் புண்ணாக்கு இடுவதன் மூலமும் இந்த பூச்சியை கட்டுப்படுத்தலாம் . ஒவ்வொரு ஏழு நாளைக்கு ஒரு முறையும் வேப்பெண்ணை கரைசல் ஐந்திலை கரைசல் , பதிலைக்கரைசல் , கற்பூரக்கரைசல் ,அக்கினி அஸ்திரம் இதில் ஏதாவது ஒன்றை தயார்பண்ணி கொடுத்துக்கொண்டே இருப்பது நல்லது .பொதுவா இப்படி செய்வதால் வெண்டை செடியை பூச்சிகள் காயப்படுத்தாமல் இருக்கும்.
உயிர்வழி தீர்வு
வெர்டிசீலியம் லக்கானி வாங்கி 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து இழையோட முன்னும் பின்னும் படடுவதுபோல் தெளிக்கவேண்டும் முடிந்த அளவு இதையும் ஆறு நாளைக்கு ஒரு முறை தெளிக்கலாம்
எருக்கு கரைசல்
200 லிட்டர் ட்ரம்மில் எருக்கு இலை . பூ,காய் , தண்டு எல்லாத்தையும் ஊறவைத்து அந்த தண்ணீரை 5 நாட்கள் கழித்து ஏழு லிட்டர் கரைசலில் மூணு லிட்டர் நீர் கலந்து ஒருதடவைக்கு இரண்டு தடவை தெளித்து மீதக்கரைசலை தரை வழி கொடுக்கலாம் .
Comments
Post a Comment
Smart vivasayi