Ad Code

தென்னையில் பார்த்தீனியம் அழிக்க என்ன செய்யலாம் - What can be done to destroy Parthenium in coconut

What can be done to destroy Parthenium in coconut





தென்னை கழிவு - Coconut waste



தென்னை மட்டைகளையும் தென்னையின் மற்ற கழிவுகளையும் அரைத்து அதையே பயண்படுத்தலாம் அது சிறிது காலத்தில் உரமாகவும் மாறிவிடும்... தேவையற்ற பார்த்தீனிய போன்ற செடிகளின் சந்ததிகளை தோட்டத்தை விட்டே துரத்த இதுதான் செலவு குறைந்ந வழி.

தென்னையை சுற்றி நாம் பாத்தி கட்டும் இடங்களில் இந்த மூடாக்கு அவசியம் இல்லை. ஏனென்றால் நாம் அந்த பாத்திகளில் சொட்டு நீர் போட்டு விடுவோம் அப்போது அந்ந இடங்களில் நாம் கீரை போன்ற ஊடு பயிர்களையும் செய்யலாம் 

கீழே உள்ள படத்தில் அதையும் காணலாம்..
மேலும் இந்த மூடாக்கின் அடர்த்தியும் திக்னஸ்சும் கொஞ்சம் அதிகம் இருந்தால்தான் களைகளை அறவே ஒழிக்க முடியும்


Coco pith ஆகமாற்றி பயன் படுத்துங்கள் - Use Coco pith converter




நல்ல வழிமுறை. ஆனால் உடனை பயன்படுத்தக்கூடாது. தென்னை நார்கழிவில் உள்ள Lignin phenols போன்ற அமிலங்களைப் போக்கி பயன்படுத்த வேண்டும். முடிந்தால் Coco pith ஆகமாற்றி பயன் படுத்துங்கள். அரைத்த பின்பு அதில் உள்ள தேவையில்லாத வேதி நச்சுப்பொருட்களை நீக்காமல் பயன்படுத்தினால் தற்போது வேண்டுமானால் நீர் விரையமாதைத் தடுப்பது போல் உங்களுக்கு பயன் உள்ளதாக காட்டும். காலம் போகப்போக.... அதிலுள்ள லிக்னின் சவ்வூடுபரவலை தடுக்கும். சவ்வூடுபரவல் நடைபெறவில்லை யென்றால் தாவர வளர்ச்சி குன்றும். மகசூல் பெரும் பாதிப்புக்குள்ளாகும்


தென்னை மட்டை - Coconut bat



நீங்க அப்படியே பயன்படுத்தி உரமாகும் என்கிறீர்கள். ஆனால் தென்னை மட்டை தானாக நம்மண்ணில் உரமாக எடுத்துக்கொள்ளும் காலம் ஓராண்டுக்கும் மேல் இரண்டாண்டுகூட ஆகலாம். அதிலுள்ள வேதி நச்சுக்கள் முழுவதும் மண்ணில் இறங்கிய பின்தான் உரமாகத்தொடங்கும். அதற்குள் நம் தாவரம் உற்பத்தி நிலையிலிருந்து பல மைல் தூரம்(புரிதலுக்காக) சென்றிருக்கும். 


இப்படி பல தென்னை தோட்டங்கள் உற்பத்தி குறைந்து மீண்டும் அதை மீட்டெடுக்க 2-3 வருடங்கள் ஆகிவிட்டது.  ஆகவே இந்த தென்னை மட்டைக்கூழின் வேதிநச்சுக்களை நீக்கி விட்டு பயன்படுத்தினால் அது ஒரு மகா வரம்.



*குறிப்பு*


செயற்கை விவசாயத்தை யாதொருவர் துணையுமின்றி செய்துவிடலாம். வந்தால் இலாபம். எதிர்விளைவுகளாயிருந்தால் உடனே பயிரில் தெரியும். மாற்றுவதும் எளிது. ஆனால் இயற்கை விவசாயம் பாற்கடல் போன்றது. கடைய கடைய அமிர்தம். ஆனால் அறிவியலின் புரிதல் இன்றி அனுகினால்.. எதிர்விளைவுகள் அறியப்படும் முன்பே பயிரும் அழிவுநிலை நோக்கீ பயணப்பட்டிருக்கும். 



. ..நீங்கள் கண்ட பார்த்தீனி அழிவுமட்டுமல்ல எத்த ஒரு ஓராண்டு மற்றும் ஈராண்டுத்தாவரங்கள்  உடனே மடியும். சவ்வூடு பரவல் நிறுத்தப்பட்டதால் வந்த விளைவு. காரணம் புதிய தென்னை மட்டைக்கழிவின் வேதி நச்சுக்களான பெக்டின் லிக்னின் போன்றவை. தென்னை மா போன்ற பல்லாண்டுத்தாவரங்க மடியாது ஆனால் உற்பத்தியை இழக்கும். 


தென்னை நார்க்கழிவு ஓர் வரம் - Coconut fiber waste is a boon



தென்னை நார்க்கழிவு ஓர் வரம் நீரை நிறுத்தி பயர்களுக்கு வழங்கும். இந்த தென்னை நார்கழிவை எப்போது பயன்படுத்த வேண்டும். முதல்நாள் இரவு நீர் நிரப்பப்பட்ட ஒரு வாழியில் இரு கைபிடி கழிவை இட்டு மறு நாள் பாருங்கள். அடர் காப்பி நிறத்திலிருந்தால் நச்சுக்கள் அதிகம் என்று பொருள்படும். 


இலேசான இளம் மஞ்சள் அல்லது வெண்மை நிறத்தில்லிருந்தால் பயன்படுத்தலாம். 


*நச்சுக்கள் நீங்க..நாம் செய்யவேண்டியது*


Coco pith ஆக மாற்ற காலமும் செலவும் கைக்கு அடக்காமாக இருந்தால் விவசாயிகளினால் உடனே நடைமுறைப்படுத்த முடியும்.
அரைக்கப்பட்ட கூழை  தேட்டத்தின் தாழ்வான பகுதிகளில் பட்டி தினமும் இருமுறை நீர் இறைத்து வந்தால் நச்சுக்கள் நீங்கும்.(70%). அல்லது பெரிய பயன்படுத்தாத தொட்டிகளில் கூழ் நிரப்பி நீர்தேக்கி அன்றாடம் வடிகட்டி இரண்டு மூன்று மாதம் கழித்து பயன்படுத்தலாம்.


இதில் வடி கட்டும் தண்ணீரை நாம் வேறு ஏதாவது பயண்பாட்டுக்கு பயன் படுத்தலாமாங்க?


நிச்சயமாக பயன்படுத்தலாகது. சில வேலிக்கருவேல் போன்று தீமைத்தாவரங்களை அழிக்க பயன்படுத்தலாம். மேலும், வடநாட்டிலிருந்து சிலர் வாங்கி மேலை நாடுகளுக்கு இந்த நீரை வியாபாரமாக செய்கிறார்கள்.



Click PDF File


Post a Comment

0 Comments

Comments

Ad Code