Ad Code

மாடி தோட்டத்தில் வாழை மரம் சாகுபடி - Cultivation of banana tree in terrace garden

Cultivation of banana tree in terrace garden





தமிழகத்தை பொறுத்தவரை மொட்டை மாடியில் செடிகள் வளர்ப்பது 
கடந்த வருடங்களில் அதிகரித்து வருகிறது . மாடியை பொறுத்தவரை சிறு காய்கறிகளோ அல்லது பூக்களோ பயிர் செய்வது கொஞ்சம் சுலபம் . அவ்வளவு ஏன் சில நாட்களுக்கு முன்னாள் மாடியில் நெல் பயிரிட்டதை பார்த்திருப்பீர்கள் . அதே சமயம் , மாமரம், வாழை  போன்ற பயிற்களையோ பயிர்செய்வது சற்று கடினம் , சரியான திட்டமிடல் இருந்தால் வாழையை 

சரி இப்ப வாழை வைக்கனுமுனு முடிவு பண்ணிட்டிங்க அதை எப்படி வைக்கலாம் என்ன ரகம் பயிரிடலாம் அப்படின்னு ஒரு கேள்வி எழலாம் . 

A ) தொட்டி 





படத்தில் உள்ளது போல் தொட்டி கட்டி வைக்கலாம் ஆனால் இந்த மாதிரி வைக்க பணம் செலவாகும் , இருந்தாலும் இந்த தொட்டி நிரந்தரமாக இருக்கும் , காற்று சற்று பலமாக வீசினாலும் கிழே விழாது

B) Drum 

இது கொஞ்சம் செலவு கம்மியாக இருக்கும் , தேவையான சைஸில் நாம் வாங்கி கொள்ளலாம் . 

C ) Bags 




ஒரு சீப் அண்ட் பெஸ்ட்ன்னு சொல்லலாம் நீங்க ஹாண்ட்டில்  பண்ணுவதற்கு வசதியா இருக்கும் . 24*24 பைகளில் வளர்க்கலாம் . 

Bags அல்லது  Drum காற்று சற்று பலமாக வீசினால் கவிழ்ந்து விட வாய்ப்புண்டு இதனை தடுப்பதற்கு மாடியின் மூலை பகுதியில் வைத்து வளர்க்கலாம் 

என்ன ரக வாழை பயிரிடலாம் - What kind of banana can be grown


எல்லா ரகங்களும் வளர்க்கலாம் என்றாலும் 

1) செவ்வாழை 
2) நேந்திரம் 
3) மலை வாழை  
போன்ற வாழைகள் சிறந்தது , பச்சை வாழை வளர்க்கலாம். இது ரொம்ப உயரம் போகாது  குட்டையாக வளரும் .நம்ம என்ன மாதிரியான பயிர்களில் வைக்கிறமோ அதற்கேற்றாற் போல் வாழை தன் உருவத்தை மாற்றி கொள்ளும் 

Soil Mixture 





வாழை மாடியில் பயிரிடும் போது  மற்ற செடிகள் போல் கோகோ பிட் அதிகம் சேர்க்க முடியாது 

A ) 4 பங்கு செம்மண் கிடைத்தால் நல்லது அல்லது  நம் தோட்டத்து பகுதியில் கிடைக்ககூடிய மண் 
B ) 2 பங்கு ஆற்று மணல் 
C ) 2 பங்கு கோகோபிட் 
D ) 2 பங்கு தொழு உரம்  அல்லது காய்கறி உரம் 
மறக்காம மண்புழு உரம் மற்றும் உயிர் உரம்  சேர்த்தால் நன்றாக வரும் 

உர மேலாண்மை - Fertilizer management






சமையலறை கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம்.

இதன் காய்ந்த பட்டைகளை உரித்து மூடாக்கு போல் போடலாம். பின்னர் அதுவே மக்கி சிறந்த உரமாக மாறிவிடும்.

பஞ்சகாவ்யா 10 மில்லியை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.

E .M  கரைசல் 10 மில்லியை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஊற்ற  வேண்டும் 






பூச்சி நோய்  மேலாண்மை - Pest disease management


பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூள், வேப்பங்கொட்டை தூள் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். வேறு எந்த ஒரு பாதுகாப்பு முறையும் இதற்கு தேவைப்படாது.

இயற்கை உரங்களை இடுவதால் வாழையின் வேரானது நீடித்து இருக்கும். குலை தள்ளும் சமயத்தில் காற்று அடித்தால் சாய்ந்து விடாமல் இருக்க உறுதியான மரக்கட்டைகளை கொண்டு முட்டு கொடுக்க வேண்டும்.

காய்களை சாகுபடி செய்த பின் அவற்றை நீக்கி பக்கக்கன்றுகள் வளர அனுமதிக்க வேண்டும். அடியுரங்களை மாற்றுவதற்காக இரு தொட்டிகளில் மாற்றி மாற்றி வளர்க்கலாம்.












Post a Comment

0 Comments

Comments

Ad Code