Let’s see about the best agricultural mobile apps for farmers in 2021
நமது கிராமத்தில் உள்ள மக்கள் டிஜிட்டலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருககிறார்கள் . பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் நடத்திய ஒருஆய்வின் படி 2020 குள் 48 சதவீதம் கிராம மக்கள் டிஜிட்டலை நோக்கி செல்வது அதிகரித்துள்ளனர் என்று சொல்கிறார்கள் . அதே சமயம் 58 % மக்கள் விவசாயத்தையே தங்கள் வாழ்வாதாரம்மாக நம்பி உள்ளனர் . விவசாய ஆஃப்கள் வந்த பின்பு விவசாயிகளுக்கு வழிகாட்ட சுலபமான ஒரு ஊடகமாக அது மாறியுள்ளது . பயிர் அல்லது காய்கறி, வேளாண்மை, பயிர் சாகுபடி, விதைத்தல் அல்லது அறுவடை செய்வதற்கான சரியான விஞ்ஞான வழியை இது வழங்குகிறது. பூச்சி மற்றும் நோய்களுக்கான பிரச்சனைகளையும் மருந்துகளையும் மற்றும் சரி செய்வதற்கான சரியான வழிமுறைகளை இந்த விவசாய ஆப்கள் தருகின்றன . இந்த விவசாய ஆஃப்கள் விவசாயிகளுக்கு சிறந்த நண்பனாக விவசாயத்துக்கு உதவி செய்கிறது . நீங்கள் எந்த ஒரு பணமும் செலவு செய்யாமல் சுலபமாக கூகிள் PLAY STORE ல் டவுன்லோட் செய்யலாம் .
இந்தியாவின் சிறந்த விவசாய ஆஃப்களை பார்ப்போம் தற்பொழுது இந்த ஆஃப்கள் தமிழ் மொழியிலும் பார்க்க முடியும் .
Kisan Suvidha
கிராமங்களில் உள்ள விவசாயிகளின் வளர்ச்சிக்காக உருவாக்க பட்ட ஆஃப் , 2016-ல் பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கி வைக்கப்பட்டது . இதில் அடுத்த ஐந்து நாட்களுக்கு உள்ள காலநிலை முன்னறிவிப்பை தெரிந்து கொள்ள முடியும் . சந்தை விலை நிலவரம் , உரங்கள் , விதைகள் மற்றும் மெஷின் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் . அணைத்து வித மொழிகளிலும் இதை பார்க்க முடியும் .
IFFCO Kisan Agriculture
இது 2015 -ல் தொடங்கப்பட்டது. விவசாயின் தேவை அறிந்து அதற்க்குரிய பதில்களை அளிப்பதாகும் . இந்த ஆப் மூலம் பல தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம். விவசாயம் , காலநிலை , விலை பட்டியல். மேலும் இந்த செயலி மூலம் விவசாயம் சம்பத்தப்பட்ட விவரங்களை டெக்ஸ்ட் , ஆடியோ , மற்றும் வீடியோ மூலமாக சொந்த மொழியிலே தெரிந்து கொள்ளலாம் . முக்கியமாக இந்த செயலியில் போன் நம்பர் மூலமாக கூட உங்கள் சந்தேகங்களை கேட்கலாம் .
2016 ஆம் ஆண்டு விவசாயிகள் விவசாயத்தில் உள்ள தொழில் நுட்பங்களை தெரிந்துகொள்ள IARI யால் அறிமுகப்படுத்தப்பட்ட விவசாய செயலியாகும். இந்த செயலி அதிக வருமானம் வருவதற்க்கு உதவும் . மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் ரகங்களை பற்றி தெரிந்துகொள்ளவும் , பண்ணைக்கு தேவையான இயந்திரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
Agri App
இந்த செயலியை விவசாயிகளுக்கு மட்டுமே உதவக்கூடிய சிறந்த செயலியாகும் . இந்த செயலியில் பயிர் பாதுகாப்பு , பயிர் உற்பத்தி மற்றும் விவசாயம் சார்ந்த அணைத்து தொழில்களுக்கும் சரியான தகவல் கிடைக்கும் . மேலும் விவசாயம் சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் கலந்துரையாடலாம் , வீடியோ பதிவுகளும் மூலம் கற்றுக்கொள்ளலாம் . உரங்கள் பற்றிய விவரங்களை இதில் தெரிந்து கொள்ளலாம்
RML Farmer- Krishi Mitr
இது விவசாயிகளுக்கு சிறந்த முறையில் உதவக்கூடிய செயலியாகும். விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள சமீபத்திய பொருட்கள் விலை நிலவரம் மற்றும் மண்டியில் விலை நிலவரங்களை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும் . விவசாயம் மற்றும் விவசாயிகள் சார்ந்த செய்திகளை அறியலாம். விவசாயம் சார்ந்த அறிவுரைகள் மேலும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் .
Crop Insurance
ஒவ்வொரு விவசாயியும் வைத்திருக்கவேண்டிய முக்கியமான செயலியாகும் . உங்களுடைய பயிர்காப்பீடு பற்றியும் , உங்களுடைய பிரீமியம் பற்றியும் எவ்வளவு தொகை கட்டவேண்டும் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம் . இது விவசாயிகளுக்கு அவர்களின் காப்பீட்டைப் பற்றியயும் மற்றும் எவ்வளவு கட்டவேண்டுமென்றும் தெரிவிக்கும் . எந்தவொரு அறிவிக்கப்பட்ட பகுதியிலும் அறிவிக்கப்பட்ட பயிரின் சாதாரண காப்பீடு, நீட்டிக்கப்பட்ட தொகை காப்பீடு, பிரீமியம் விவரங்கள் மற்றும் மானியத் தகவல்களைப் பெறவும் இந்த செயலியை பயன்படுத்தலாம்.
Kheti-Badi
இந்த செயலி இயற்கை விவசாயிகளுக்கென உருவாக்கப்பட்டதாகும் . இது இயற்கை விவசாயம் சம்பந்தப்பட்ட விவரங்கள் மற்றும் செய்திகளை தெரிந்துகொள்ளலாம் . இந்த செயலி செயற்கை விவசாயத்திலிருந்து இயற்கை விவசாயத்துக்கு மாற உதவி செய்கிறது . ஆனால் இந்த செயலி ஹிந்தி , ஆங்கிலம் ,மராத்தி மற்றும் குஜராத்தி மொழியில் மட்டும் உள்ளது
Comments
Post a Comment
Smart vivasayi