கீரை விற்பனையில் அதிகம் லாபம் பெற - To make more profit in the sale of lettuce OR Amaranthus
இன்று தமிழ்நாட்டில் காய்கறிகள் வாங்க வாய்ப்பு இல்லாத நிலையில கீரைகள் மட்டுமே தினசரி உணவுல இருக்க கூடிய பசுமை பொருளா இருக்குது . முக்கியமா பார்த்தால் சென்னை மட்டும்மில்லாமல் அடுத்த கட்ட மாவட்ட தலை நகரங்கள் அதற்கப்புறம் இருக்ககூடிய இரண்டாம் மூன்றாம் கட்ட நகரங்கள் எல்லாத்துலயும் கீரை உட்க்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகுது.
இதுல முக்கியமா பார்த்திங்கனா காலையில கீரை வாங்குபவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதுவே சாய்ந்தர நேரங்களில் வேலை விட்டு வீட்டுக்கு போகும் கீரை வாங்குபவர்களின் எண்ணிக்கை 60 முதல் 70 சதவீதம் ஆகும் இந்த மாதிரியான நிலைமையில நாம் கீரை சாகுபடியை அதிகப்படுத்தி நாம் நல்ல பயன் அடையலாம்
பொதுவாகவே விவசாயிகள் வந்து கீரையை ஒரு பொருட்டாக எடுத்து கொள்வதில்லை என்ன காரணம் என்று பார்த்தோம்னா தினசரி அதை அறுவடை செய்யணும் , முறையான டைம்ல்ல மார்கெட்டிற்கு கொண்டு போய் கொடுக்கணும் இந்த மாதிரி ரிஸ்க் இருப்பதால் என்னமோ விவசாயிகள் அதிகமாக கீரை விவசாயத்தில் ஈடுபடுவதில்லை ஒரு முக்கியமான விஷயம் விவசாயம் அப்படினு பார்த்தால் எந்த எந்தமாதிரி நிலங்கள் உப்புத்தன்மை சற்று சமநிலைக்கு கூட இருக்கோ அதாவது P H 7க்கு சற்று அதிகமாக இருக்கும் நிலங்களில் தாராளமாக கீரை சாகுபடி செய்யலாம்
கீரை சாகுபடி எவ்வளவு இடத்தில் பண்ணலாம் - Lettuce cultivation can be done in any place
நம்மால் ஒரு நாளைக்கு எவ்வளவு கீரைகள் விக்க முடியும் என்பதை பொறுத்து அந்த இடத்தை முடிவு பண்ணலாம் இந்த கீரை விவசாயம் பண்ணுவதற்கு முன்னாடி ஒரு சின்ன ஆய்வு செய்து விட்டு அதன் பின்பு கீரை விவஸ்யத்தில் நாம் இறங்கலாம் . ஒரு கிராமத்தை மிஞ்சிய ஒரு சிறு நகரம் இருக்குன்னு சொன்ன அதுல எத்தனை கட்டு கீரை விக்கிது விற்பவர்களிடம் கேட்டு தேர்ந்து கொள்ளலாம் பொதுவா ஒரு நகரத்துல மார்க்கெட்டுல வந்து வாங்கிட்டு போறவங்களோட எண்ணிக்கை 15 சதம்தான் இருக்கும் அதற்கப்புறம் அந்த அந்த லோக்கல் மல்லிகை கடைகளில் வாங்குபவர்களின் எண்ணிக்கை 40 சதம் இருக்கும் இப்ப நாம எங்கலாம் கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ணலாம் மேலும் அந்த மாதிரி பகுதிகளுக்கு போய் ஆய்வு செய்து எத்தனை கீரைக்கட்டு போகுது என்ன விதமான கீரைகள் போகுது எதை விரும்பி வாங்குறாங்க இதை அனைத்தையும் சின்னதா ஒரு கள ஆய்வு செஞ்சுட்டு அதன் பின்பு கீரை விவசாயத்துல ஈடுபடுவது நல்லது . இது எதுக்கு நல்லதுன்னா எவ்வளவு பரப்புள்ள சாகுபடி செய்யலாம்னு முடிவு பண்ணலாம்
அதிகமாக விற்பனையாகும் கீரைகள் - The best-selling greens
தினசரி ஒரு 5 விதமான கீரைகள் அதிகமாக விற்பனை ஆகின்றன
1) அரைக்கீரை
2) சிறுகீரை
3) அகத்தி கீரை
4) தண்டு கீரை
5) மணத்தக்காளி கீரை
இததெல்லாம் எல்ல இடத்திலும் போகும் இதுலையும் அரைக்கீரையோட விற்பனை அதிகமாக போகும்
எப்படி பாத்தி பிரிக்கலாம் -How to divide the bed
இப்ப நமக்கு 1 ஏக்கர் நிலம் இருந்தால் அதுல பத்து பத்து சென்டாக பிரிக்கலாம் அல்லது அரைக்கீரைக்கு 40 சென்ட் வச்சுக்கிட்டு மீதி உள்ள 60 செண்டை 5 செண்டாகவோ அல்லது 10 செண்டாகவோ பிரிச்சுக்கலாம் கொஞ்சம் கொஞ்சமாக பிரிச்சுக்கலாம் பொதுவா வயல்கள் எல்லாமே நீல நீல அமைப்புலதா பிரிச்சுக்கிட்டோம்னா நல்லாயிருக்கும் . ஏன் நீளமாக பிரிக்கவேண்டுமென்றால் நீளத்தை வந்து திரும்பி சின்ன சின்ன தீப்பெட்டி மாதிரி பாத்தியா பிரிக்கலாம்.
பாத்தி எப்பொழுது போடலாம் -When to put the bed
முதல் 1 ஆம் தேதி ஒரு பாத்தில போடலாம். இரண்டாவது பாத்தியும் நாம போட்டுவிடலாம் இது எப்பனா முதல் பாத்தி போட்ட மூன்றாவது நாள் செய்யலாம். அடுத்து மூன்றாவது பாத்தி அடுத்து இருக்ககூடிய மூன்றாவது நாள் போடலாம். 15 முதல் 20 நாள்ல நமக்கு முதல் அறுவை கிடைக்கறப்ப அதை எடுத்து கொண்டுபோய் விற்பனைக்கு கொடுக்கலாம். அதை விற்பனைக்கு கொடுக்கும்பொழுது எப்படி போகுது அதாவது முழுமையாக விற்று தீர்ந்துடுச்சான்னு முடிவு பண்ணிட்டு அதன் பின்பு மீதமுள்ள பாத்திகளுக்கு நம்ம விதைகள் பாவலாம் இதுவந்து நம்மளுடைய நகரத்தை புரிந்து கொள்வதும் , நம்முடைய விற்பனை வாய்ப்புகளை வந்து நாம் நிலை படுத்திக்கொண்டும் , ஏரியாவை அதிகப்படுத்தும் , கீரை விவசாயத்தை அதிக நாள் செய்வதற்கும் உதவியாக இருக்கும்எல்லாரும் ஆசைக்கு செய்வாங்க பின்பு விட்டுட்டு போய்டுவாங்க அப்படி இருக்ககூடாது இதைத்தான் நாம் புரிந்து கொள்ளவேண்டும்
எண்ணலாம் நடக்குது சந்தை படுத்துவதற்க்கு - Counting is going on to flatten the market
சென்னைல ஒரு அமைப்பு இருக்காங்க அவர்களுடைய வேலை என்னனா செங்கல்பட்டுல ஆரம்பித்து பீச் ஸ்டேஷன் வரையிலும் உள்ள அணைத்து ரெயில்வே ஸ்டேஷன்லயும் படி ஏறுமிடத்தில் ஒரு வியாபாரியை உட்கார வச்சுருப்பாங்க அவர்கள் மூலமாக மாலை வேளைகளில் விற்பார்கள் முக்ககியமா வந்து அந்த கீரைகள் 5.30 மணி அல்லது 6.30 மணிக்குள்ள ஒவ்வொரு ஸ்டேஷன்ல உள்ள படிகள்லயும் கொடுக்கப்படுது. அத வந்து எந்த எந்த ஊருக்கு என்ன என்ன கீரைகள் வந்து அதிகமாக போகுது எந்த நேரத்துல அதிகமா போகுது , மழை நேரங்களில் எது போகுது வெயில் நேரத்துல எது போகுது , பண்டிகை நாட்கள எது போகுது , சாதாரண நாட்களில் எது போகுது . இதையெல்லாம் ஒரு ஆயுவு செய்து . அதற்கேற்றர்போல் இந்த ரயில்வே ஸ்டேஷன்ல விக்கிறது அடுத்து பஸ்ஸ்டான்ல விற்பது அடுத்து சின்ன சின்ன கடைகளில் விற்பது , பெரிய மால் வெளியே விற்பது நம்மலே கொண்டு போய் வீடுகள்ல கொடுப்பது இப்படி நிறைய வழிகள் வச்சுகிறாங்க
இதே மாதிரி இன்னொரு அமைப்பு இருக்காங்க அவங்க வந்து சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன்ல ஆரம்பித்து அரக்கோணம் வரையிலான மொத்த நீளத்துக்கும் அவங்க ஒரு அமைப்பு வச்சுருக்காங்க. ஏன் இவ்வளவு நீளமா வைக்கணும் பார்த்தோம்னா அதிக ஏரியா விளைவித்து வருதுன்னா அதை சந்தைபடுத்தி தீர்க்கவேண்டும் குறுகிய நேரத்தில் அதனாலதான் இவ்வளவு இடத்தை கவர் பண்றங்க
சிறு நகரங்களில் விற்பது - Selling in small towns
இதை சென்னை மாதிரி ஊர்னு வச்சுக்கிட்டா ,இப்ப சின்ன ஊர் இருக்கு உதாரணமா , உடுமலைப்பேட்டை எடுத்துக்கொண்டால் எங்க விக்கலாம் , தினசரி மார்க்கெட்ல எத்தனை கட்டு போகுது என்பதை ஒரு ஆய்வு எடுத்துக்கலாம் , இது மட்டுமில்லாமல் புறநகர் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளை டார்கெட் செய்து அவங்கள்ட இத விக்ரிங்களான்னு கேட்டு அங்க கொடுக்கலாம் இப்படி செய்றப்ப ஒரு பரவலாக்கம் கிடைக்கும் அதிகமான எண்ணிக்கைல விற்பதற்கு ரூ வாய்ப்பாக இருக்கும் . இன்னொரு விஷயம் நமக்கு விலை நன்றாக கிடைக்கும் . விலை உத்தேசமா காட்டுக்கு 5 அல்லது 6 ரூபாய் போடுவோம் அவங்க மார்க்கெட்டுல நமக்கு 10 ரூபாய்க்கு விற்பாங்க இதையே நேரடியா வீட்டுல கொண்டுபோய் கொடுகிறப்ப 10 ரூபாய்க்கு நீங்களே கொடுக்கலாம் அல்லது நல்ல கீரையை இருக்கு இயற்கை முறையில விளைய வச்சிருக்கிங்க 13 ரூபாய் வரையில் கூட விற்கலாம் . குறுகிய நேரத்துல இந்த வேலையை செய்யலாம் வேலைக்கு போறவங்களா முதல் நாள் சாயந்தரம் டார்கெட் செய்து விற்கலாம் காலையில 7 டு 8 மணிக்கு விற்பது வீட்டுல உள்ளவர்களிடம் டார்கெட் செய்து விர்க்கலாம் . முடிந்தவரை சந்தைபடுத்துதலை முறையை ஆய்வு செய்து விட்டு முடிவு செய்வது நீண்ட காலத்துக்கு கீரை விவசாயத்தில் ஈடுபடுவதற்கும் நல்ல லாபம் கிடைப்பதற்கும் பெரிய உதவியாக அமையும்
0 Comments
Smart vivasayi