Cultivation of Organic beans - control of nematode aphid and radish beetle pest in bean plant
பட்டை அவரை செடியில் காய்ப்புழு, அசுவினி மற்றும் நாவாய்(ரப்பர் போன்று பிஞ்சுகள் உள்ளது) போன்றவற்றில் இருந்து காக்க என்னென்ன வழிமுறைகள் உள்ளது.
இயற்கைவழி தீர்வு
காய்ப்புழுவை கட்டுப்படுத்த அக்னி அஸ்த்திரம் அல்லது கற்பூரக்கரைசல் தெளிப்பது நல்லபலன்கள்தரும் அஷ்வினி அல்லது கதிர்நாவாய் பூச்சியென்றால் வேப்பஎண்ணெய் கரைசல், பொன்னீம் , வசம்பு கரைசல் , ஐந்திலை கரைசல் ,பத்தில்லை கரைசல் , இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் ,அக்னி அஸ்த்திரம் மற்றும் கற்பூரக்கரைசல் இதில் எதுவேண்டுமானாலும் பயன்படுத்தலாம் . இதில் அஸ்வினிக்கு கொஞ்சம் அழுத்தமாக அடிக்கவேண்டும் ஏன்னெனில் அஸ்வினி பூச்சியின் தாக்குதல் கடுமையாக இருக்கும் . உதாரணமா அவரைச்செடியில நுனியில காம்பில் அஸ்வினி பூச்சி இருக்கறதோட
அளவு கொஞ்சமாக இருக்கிறதென்றால் போக போக அதன் அளவு அதிகமாகும் ஒன்றின் மேல் ஓன்று இருக்கும் முதல்வரிசை கருப்பாகவும் அதன்மேல் இனொருவரிசை உட்காந்து , அதன்மேலும் ஒருவரிசை இருக்கும் இப்படி அஸ்வினி பூச்சி அடுக்கு அடுக்காய் இருக்கும் எனவே நாம் அடிக்கும் போது அழுத்தமாக இருக்கவேண்டும்
உயிர் வழி தீர்வு
காய் புழுவிற்கு பெவேரியா பேசியானா அல்லது பேசில்லஸ் துருஞ்சயன்சிஸ் இரண்டுல ஏதாவது ஒன்றை பத்து லிட்டருக்கு 50 மில்லி கலந்து அடிக்கலாம். அஷ்வினி அல்லது கதிர்நாவாய் பூச்சிக்கு வெர்டிசீலியம் லக்கானி 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து அடிக்கலாம் .
அவரையே பொறுத்தவரை இதை வந்தபின்புதான் செய்வேண்டுமென்றில்லை ஒரு சீரான இடைவெளியில் ஒரு தடுப்பு நடவெடிக்கையாக இதை செய்யலாம் . இப்படி செய்வதன் மூலம் நமக்கு அதிக லாபத்தை கொடுக்கும்
பொதுவா அவரை அல்லது பட்டை அவரை புழுவோட தாக்குதல் அதிகமாக இருக்கும் . புழு எங்கிருந்து வருமான பூவிலிருந்தே வரும் அதனால் ஒருதடவை மருந்தடிப்பதை விட்டுட்டு காலத்தோட சூநிலைக்கு ஏற்றமாதிரி , பணியோட சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி மண்ணோட பண்புக்கு ஏற்றமாதிரி ஒரு சீரான இடைவெளியில் அடித்தால் போதும் அவரை பயிர் நன்றாக வரும் உங்களுக்கு வருமானமும் கிடைக்கும்
Comments
Post a Comment
Smart vivasayi