Organic Groundnut Cultivation Management
கடலை செடி
வெட்டுக்கிளி தாக்குதல்
இலைகள் ஓட்டை ஓட்டையாக இருந்தால் வெட்டுக்கிளி தாக்குதலாக இருக்கலாம் அல்லது கடலை இலைகளை கடிக்க கூடிய சில பூச்சிகளோட தாக்குதலாக இருக்கலாம். அந்த ஓட்டையை நாம் சரி பண்ணியாக வேண்டும் , இல்லையெனில் அது வைரஸ் தாக்குதல் அளவுக்கு கொண்டுபோய்விடும் . இதனால் பூக்காது அதனால் காய்கள் வராது. இதற்க்கு கரைசல்கள் எதாவது கொடுக்கலாம் வேப்பெண்ணை கரைசல் , ஐந்திலை , பத்திலை கஷாயம் , அல்லது அக்னி அஸ்திரம் , கற்பூரக்கரைசலை எட்டு நாளைக்கு ஒரு முறை தெளிக்கலாம் கொஞ்சம் செலவானாலும் கடலை செடிக்கு இதை செய்வது முக்கியம்
பூஞ்சை தாக்குதல்
கடலை செடியின் இலைகள் மஞ்சளும் பச்சையுமாக இருந்தால் பூஞ்சாண தாக்குதலாக இருக்கலாம் இது அடுத்த கட்டமாக சிகப்பு புள்ளி வரலாம் அல்லது கருப்பு புள்ளி வரலாம் இதுவும் வேர் மற்றும் காய் வளர்ச்சியை பாதிக்கும் இதற்க்கு சூடோமோனஸ் மற்றும் பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் இது இரண்டையும் 10 லிட்டருக்கு ஐம்பது ஐம்பது மில்லி கலந்து தெளிக்கலாம். இரவை பயிர் தரைவழியும் கொடுக்க முடியும்மென்றால் ஒவ்வொரு லிட்டர் தண்ணீரில் கலந்து தரைவழி ஊற்றி விடுங்கள் தெளிப்பதை மட்டும் 8வது நாள் மறுபடியும் செய்யவே வேண்டும்
சத்து குறைபாடு
இலைகளோட அளவு சிறியதாக இருக்க கூடாது இருந்தால் சத்து குறைபாடாக இருக்கும் . இதற்க்கு இடு பொருட்கள் கம்மியாக கொடுப்பதால் ஏற்படலாம் . இதற்க்கு பஞ்சகாவியா , ஈ எம் கரைசல் , மீன் அமிலம் அதை முதலில்அதிகாலை நேரத்தில் தெளிக்க வேண்டும் தெளித்தால் இலைகள் பெரிதாகும் . அடுத்து அடிஉரத்தில் சாம்பல் போடவில்லை எனில் ஒரு ஏக்கருக்கு 60 கிலோ சாம்பல் சாம்பலை தூவி விடுங்கள் . அல்லது பொட்டாஷ் பாக்டீரியா 1 கிலோ வாங்கி தூவி விடுங்கள்
Comments
Post a Comment
Smart vivasayi