Agri News
A golden opportunity to reclaim land through the Department of Agricultural Engineering
குறைவான வாடகையில்
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மேட்டுப் பகுதி நிலங்களில் நிலத்தை சீரமைக்கவும், விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மண்வளப் பாதுகாப்பு பணிகளில் கவனம் செலுத்தவும், அதேசமயம் மிகவும் குறைவான வாடகையில் மேற்கண்ட பணிகளைச் செய்வதற்காக வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிகளால் பொதுவாக அழைக்கப்படும் *ஹிட்டாச்சி மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் விவசாய பணிகளுக்காக மட்டும் வாடகை அடிப்படையில் தமிழகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் மொத்தமாக 10 எண்ணிக்கையிலான ஹிட்டாச்சி இயந்திரங்களும்,
60 எண்ணிக்கையிலான ஜேசிபி கருவிகளும் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பொதுவாக உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வாடகை
சிறு குறு விவசாயிகள் ஆதிதிராவிட விவசாயிகள் மற்றும் பொதுப் பிரிவினருக்கு பலன் தரும் வகையில்
ஒரு மணி நேரத்திற்கு ஹிட்டாச்சி இயந்திரம் பயன்படுத்த ரூபாய் 1440/-*
மற்றும்
*ஒரு மணி நேரம் ஜேசிபி இயந்திரம் பயன்படுத்த ரூபாய் 660/- ம்* வாடகையும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்பு கொண்டு இக்கருவிகளை வாடகையில் பெற்று குறைந்த செலவில் கட்டமைப்புகளை முறைப்படுத்திக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
இக்கருவியின் நன்மைகள்
1.அனைத்து வகை நிலங்களிலும், முறையான உயரமான கரைகள் அல்லது வரப்புகள் அமைக்க உதவும்.
2. குழி எடுத்து வரப்பு அமைத்தல் என்ற தொழில்நுட்பத்தின் படி பட்டா நிலங்களில் மண் அரிமானத்தை தடுத்து அதிகமான அளவு மழைநீரை நிலங்களில் தேக்கி வைத்து நிலத்தடி நீர் பெருக வாய்ப்பாக அமையும் .
3. நிலத்தினில் ஓடும் ஓடைகளை முறைப்படுத்தி மண் அரிமானத்தை குறைக்க பெரிதும் உதவும்.
4.விவசாய நிலங்களுக்குள் ஏற்படுத்தப்படும் பாதைகள் மற்றும் கட்டமைப்புகளை முறைப்படுத்தவும் பாறைகள் போன்ற கடின அமைப்புகளை வகைப்படுத்தவும் உதவும்.
5.மழைக் காலங்களில் முறையான வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு நிலத்தில் தண்ணீர் தேங்குவதை சரிசெய்ய ஒரு வாய்ப்பாக அமையும்.
6. நீர்வடிப்பகுதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட நிலங்களில் இக்கருவிகளை செயல்படுத்த முன்னுரிமை வழங்கப்படும்.
7. இக்கருவிகளை முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்கு பெற, அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
0 Comments
Smart vivasayi