மாமரம் பராமரிப்பு - டிசம்பர் மாதத்தில் மா விவசாயிகளுக்கான ஆலோசனை-Natural Agriculture Mango Care for December
டிசம்பர் மாதத்தில் மா விவசாயிகளுக்கான ஆலோசனை
தமிழகத்தின் பெரும்பாலான மேட்டுப் பகுதி நிலங்களில் மா விவசாயம் நடைபெறும் பகுதிகளில் ஐப்பசி மாதம் போதுமான மழை இல்லாததாலும், கார்த்திகை இலும் குறைந்த அளவே மழை பெய்தாலும், மழை குணம் மார்கழி மாதத்திலும் வரும் சூழ்நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் பூ எடுப்பது கடந்த வருடங்களைப் போல் தள்ளிப்போகும் நிலை உள்ளது.
இவ்வாறாக உள்ள மா மரங்களுக்கு மாதம் ஒருமுறை சூடோமோனஸ் பத்து லிட்டருக்கு 50 மில்லி என கலந்து தெளித்துவிட்டு இரண்டு நாள் கழித்து பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசலை 10 லிட்டருக்கு 300 மில்லி என கலந்து தெளிக்கலாம். குணம் இருக்கும்போது தெளிப்பதை தவிர்க்கலாம். குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் மழை இருக்காது என்ற சூழ்நிலையில் தெளிக்கலாம்.
அதே வேளையில் நன்கு பூத்து உள்ள மாமரங்களில் பூக்களின் மீது ஒருமுறையாவது 10 லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் அல்லது விரிடி அல்லது சில சப்டிட்லஸ் கலந்து பூக்கள் மீது நேரடியாகப் படாமல் வாயை தெளிப்பானில் வாயை சற்று மேலே தூக்கி மழை பொழிவது போல பூக்கள் மேல் படுவதை உறுதிப்படுத்தலாம்.
இதனால் நோய்வாய்ப்பட பூக்கள் கிடைக்க வாய்ப்புண்டு பூக்கள் மீது 8 முதல் 10 நாட்கள் கழித்து பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசல் 10 லிட்டருக்கு 100 மில்லி கலந்து இதேபோல் தெளிப்பது தேன் பூச்சி எனப்படும்பூ அறுகு தலை இல்லாமல் செய்ய வாய்ப்புண்டு.
சூடோமோனஸ் அதற்கு பதிலாக 100 லிட்டர் தண்ணீருக்கு 5 கிலோ வேப்பங்கொட்டையை இடித்து ஒரு நாள் ஊறவைத்து பின்பு அதனை காதி சோப்பு அல்லது சீயக்காய் தூள் கலந்து நன்கு கரைத்து பழகிய பின்பு தெளிப்பது நல்லது. இந்த காலத்தில் நாம் தரைவழி பாசனம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பிஞ்சுகள் சுண்டு விரல் நீளம் வந்த பிறகே தரைவழி பாசனம் செய்ய வேண்டும்.
மா பூக்களில் அழுகல் குணம் இருந்தால் ஆக்டினோமைசீட்ஸ் என்ற திரவத்தை பத்து லிட்டருக்கு 30 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.
Comments
Post a Comment
Smart vivasayi