Egg lemon solution - stimulant of plant growth
தேவையான பொருட்கள்
முட்டை -10 ,எலுமிச்சை பழம்-20 பழம் சாறு,250 கிராம் -நாட்டு சக்கரை )செய்முறை எலுமிச்சை பழ சாற்றில் மூழ்கும் படி முட்டைகளை இட வேண்டும், உடையாமல் உள்ள முட்டைகளை பயன்படுத்த வேண்டும், அதனுடன் 250 கிராம் அளவு நாட்டு சர்க்கரை இட்டு 10 நாட்கள் பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றி மூடியில் சிறிதளவு துளையிட்டு வைக்க வேண்டும், பின்னர் முட்டை ஓடனது எலுமிச்சை சாற்றில் கரைந்து விடும், பின்னர் முட்டைகளை மட்டும் எடுத்து கையால் கூலாக மாற்றி இந்த கரைசலுடன் கலந்து விட வேண்டும், பின்னர் 20 நாட்களுக்கு பிறகு கரைசல் தயார், *10 லிட்டர்* தண்ணீருக்கு *200ml* அளவு எடுத்து *மாலை* வேளையில் செடிகள் நன்கு நினையும்படி தெளிக்கலாம்,பயன்கள்:செடியின் வளர்ச்சி ஊக்கியாகவும்,பூக்கள் பூக்கவும் உதவியாக இருக்கும்,இலைகளில் வெள்ளை நிறத்தை மாற்றக்கூடியது
Comments
Post a Comment
Smart vivasayi