Mango stem borer
தமிழக மா உற்பத்தியில் ஆண்டுதோறும் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி வருகிறான் ஒரு வில்லன். ‘‘மா மரங்கள், அடர்ந்து, பச்சை பசேல்னு நல்லாத்தான் இருக்கு...ஆனா, காய் தான் பிடிக்க மாட்டேங்குது‘ என்ற புலம்பலை பெரும்பாலான மா விவசாயிகளிடம் கேட்கலாம். அதற்கு காரணம், தண்டு துளைப்பான் என்ற வில்லன் தான். மா மரங்களைப் பொறுத்தவரை, தண்டு துளைப்பான் தான் எமன். மரத்திற்குள் நுழைந்து விட்டால், அந்த மரத்தை வேரோடு சாய்க்காமல், வெளியேறாது. இந்த கொடிய வில்லனை பற்றி விளக்குகிறார்,
மாமரம் தண்டு துளைப்பான் எப்படி கட்டுப்படுத்தலாம் - How to control mango stem borer
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் செந்தூர்குமரன்
மா மரங்களைப் பொறுத்தவரை, தண்டு துளைப்பான் தாக்குதல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. தண்டு துளைப்பான் என்பது ஒருவகை புழு. இது, மா மரத்தின் தண்டுகளில் இருக்கும் பட்டைகளுக்கு இடையில் உள்ள இடைவெளியில் நுழைந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்டுக்குள் துளைப்போட்டு, உள்ளே சென்று விடும். மரங்களுக்கு மண்ணில் இருந்து சத்துக்களை எடுத்துக் கொடுக்கும், சைலம் உள்தண்டைச் சுற்றி, தசைப்போல படர்ந்திருக்கும். தண்டுக்குள் செல்லும் புழு, இந்த சைலத்தை கொஞ்சம் கொஞ்சமா தின்னத் தொடங்கும். நாளாக நாளாக, மஞ்சள் நிறத்தில் இருக்கும் சைலத்தின் திசுக்கள் இறந்து கருப்பு நிறத்தூளாக மாறிவிடும். இதனால், மண்ணில் இருந்து மரங்களுக்கு சத்துக்கள் போவது தடைபடும். சத்துக்கள் இல்லாமல் ஒவ்வொரு கிளையாக பட்டுப்போகும். ஒரு கட்டத்தில் ஒட்டு மொத்த மரமே பட்டு, கீழே விழுந்து விடும். ஏழு புழுக்கள் உள்ளே போனாலே போதும்...30 வயதான பெரிய மரத்தைக் கூடச் சாய்த்து விடும்.
எப்பொழுது தாக்கும் - When to attack
பொதுவாக, பத்து ஆண்டுகளுக்கு மேலான மரங்களைத் தான் தண்டு துளைப்பான் அதிகம் தாக்கும். மரத்தின் தூர் பகுதியில் ஆட்கள் நுழைய முடியாதபடி அடர்த்தியாக உள்ள மரங்கள், தரையைத் தொடும் கிளைகள் உள்ள மரங்கள், தூர் பகுதியில் காய்ந்த இலைகள், குப்பைகள் உள்ள மரங்களைத் தான் தண்டு துளைப்பான் தேர்ந்தெடுக்கும். தண்டு துளைப்பான் தாக்குதலுக்கு உள்ளான மா மரத்தின் பட்டை முதலைத் தோல் போல வெடிப்பு வெடிப்பாக காணப்படும். மரத்தின் தண்டு பகுதியில் இருந்து மரத்தூள் வெளியேறி இருக்கும். இந்த அறிகுறிகளை வைத்து தண்டு துளைப்பான் தாக்குதலை கண்டுக்கொள்ளலாம். இந்த தண்டு துளைப்பான் ஆகஸ்ட் மாதத்தில் இனப்பெருக்க பணிகளில் ஈடுபட்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் முட்டையிடும். மரத்தின் பட்டைகளைக்கு இடையில் இது, முட்டை டர்மினேட்டர்.
சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் - Be sure to keep it clean
மா மரங்களைப் பொறுத்தவரை, மரத்திற்குக் கீழே, ஆட்கள் சென்று வருவதற்கு வசதியாக, தாழ்வான கிளைகள் இல்லாமல் இருக்க வேண்டும். மா மரத்தில் தரையை நோக்கி வளரும் கிளைகளை அனுமதிக்கவேக் கூடாது. தரையில் படர்ந்துள்ள அல்லது தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் கிளைகள் உள்ள மரங்களின் தண்டுகள் தான் தண்டுதுளைப்பானின் குடியிருப்புகள். அதேப் போல, மா மரங்களின் அடியில் காய்ந்த இலைகள், குப்பைகள் இல்லாமல் தோப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வருமுன் காப்பது - Take precaution
தண்டு துளைப்பானைப் பொறுத்தவரை வருமுன் காப்பதுதான் சிறந்த உபாயம். வந்த பிறகு, அதை சரிசெய்வது கடினமான வேலை. தரையில் இருந்து ஒன்றரை அடி உயரத்தில் தான் தண்டு துளைப்பான் முட்டைப் போடும். மரத்தை தட்டிப்பார்த்து, பட்டையை உரித்துப் பார்த்தால் உள்ளே சைலத்தை உண்டுக்கொண்டு புழுக்கள் இருக்கும். அந்த புழுக்களை எடுத்து விட்டு, தண்டு பகுதி முழுக்க, முந்திரி எண்ணெய்யைத் தடவி விடவேண்டும்.
கவாத்து செய்ய வேண்டும் - To march
இதையெல்லாம் விட ஆண்டு தோறும் முறையாக கவாத்து செய்வது அவசியம். முறையாக கவாத்து செய்யும் மரங்களில் தண்டு துளைப்பான் தாக்குதல் இருக்காது. மா மரங்களை கவாத்து செய்வதற்கு இதுதான் ஏற்ற தருணம். வரும் மழை காலத்துக்கு முன்பாக அதாவது செப்டம்பர் மாதத்திற்குள் கவாத்து செய்வது மிகவும் முக்கியம்
Comments
Post a Comment
Smart vivasayi