Incubating Poultry care
அடைக்காக்கும் கோழி பராமரிப்பு
1.சித்திரை மாதம் மற்றும் மார்கழி மாதத்தில் அடை வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக வெப்பம் மற்றும் அதிக குளிரால் முகத்தில் அம்மை நோய் தாக்கி சிறு குஞ்சுகள் இறக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
2.நாட்டுக்கோழிகள் பிறந்த 150 நாட்களில் முட்டை இட ஆரம்பிக்கும். முதன்முதலாக அடைக்காக்கும் கோழிகளை தவிர்த்து 2 அல்லது 3-வது முறையாக அடைக்கு வரும் கோழிகளை பயன்படுத்தலாம். ஏனெனில் முதல்முறையாக அடைக்காக்கும் போது பல கோழிகளுக்கு முட்டைகள் மீது சரியாக உட்கார தெரியாது.
3.ஒரு அடைக்கு 12 முட்டைகளுக்கு மேல் வைக்கக்கூடாது. ஏனெனில் வெப்பம் சீராக இல்லாமல் குஞ்சு பொரிக்கும் திறன் குறைய வாய்ப்பு அதிகம் உண்டு.
4.அடை வைக்கும் முட்டைகளை காய்ந்த வைக்கோல் அல்லது உமி போன்றவற்றின் மீது வைப்பதை விட, இலேசான ஈர மணல் மீது வைப்பதால் பொரிக்கும் தன்மை அதிகரித்து, பேன் போன்ற ஒட்டுண்ணிகள் தாக்காமல் இருக்கும்.
5.அடையில் உட்காரும் கோழி தான் விரும்பிய பொழுது எழுந்து வெளியில் சென்று வருமாறு இருக்க வேண்டும். மூடி வைக்கும் நிலையில் இருக்குமானால், அதை 1 நாட்களுக்கு ஒரு முறை திறந்துவிட வேண்டும்.
6.அடையில் இருந்து வெளியே வந்த கோழிகள் உடனடியாக குடிக்கும் வகையில் தண்ணீரை தயாராக ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.
7.காய்ந்த மிளகாய்கள் இரண்டினை முட்டைகள் அருகில் வைப்பதன் மூலம் ஒட்டுண்ணிகள் கோழிகளை தாக்காது.
8.21-வது நாள் குஞ்சுகள் அனைத்தும் பொரித்து விடும். 21 நாட்களில் முட்டைகள் அனைத்தும் பொரிக்கவில்லை எனில், அதே கோழியை மறுபடியும் வேறு முட்டைகள் மீது உட்கார வைக்ககூடாது.
9.ஏனெனில் அடைக்காக்கும் கோழிகள் சரியாக உண்ணாது. எனவே தொடர்ந்து முட்டைகள் மீது உட்கார வைப்பதால் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு கோழி இறக்க வாய்ப்பு உள்ளது.
10.கோழிகள் அடையில் இருக்கும் போது பெரும்பாலும் நோய்கள் அவற்றை தாக்காது. ஏனெனில் எந்த நோய்களும் முதலில் வலுவான கோழிகளை மட்டுமே தாக்கும்.
0 Comments
Smart vivasayi