Coconut water management
எந்த ஒரு பயிருக்கும் பாசனம் என்பது சூழ்நிலையை பொறுத்தது . அதவது நீங்கள் பாசனம் செய்யும்பொழுது , அந்த மாதத்தில் இருக்கக்கூடிய வெயில் , மண்ணோடத்தன்மை , பயிரோடத்தன்மை இந்த மூன்றையும்
அடிப்படையாக கொண்டது . உதாரணமாக மே மாசத்துல வெயில் அதிகமாக அடிக்கும்போது செம்மண் தரையில கொடுக்கக்கூடிய நீருக்கும் , அதே மாதிரி மழைக்காலத்துல செம்மண் நிலத்துல கொடுக்ககூடிய நீருக்கும் வித்யாசம் இருக்கு . மழை பெய்யும்போது , பெய்யாதபோதும் ஒருசில நடவெடிக்கை எடுக்க வேண்டும். இது தென்னைக்கு மட்டுமல்ல எல்லாப்பயிருக்கும் இதுதான் அடிப்படை .
தென்னையை பொருத்தளவுல மூன்று வயது மேல் உள்ள ஒரு தென்னைக்கு சராசரியா சரளை மண்ணாக அல்லது செம்மண்ணாக இருந்தால் 80 லிட்டர் நீர் கொடுக்க வேண்டும் . அதே களிமண்ணாக இருந்தால் 50 லிட்டர் கொடுக்க வேண்டும் . இத முதல் தடவ கொடுகிறீங்கனா , இரண்டாவது நாள் வட்டப்பாத்தீல இருந்து ஒரு இரண்டடி தள்ளி ஈரம் இருக்க , இல்லையா என்று மண் எடுத்து பாருங்கள் . புவிஈர்ப்பு விசையில் மண்களுக்கு இடையில் உள்ள ஓட்டையின் காரணமாக நீர் உளளே இறங்கியிருந்தால் இரண்டாவது நாள் நீர்பாய்ச்சலாம் .
இல்லையென்றால் இனொருனாள் பாய்ச்சலாம் . எவ்வளவு நாளுக்கு ஒருநாள் நீர் பாய்ச்சலாம் என்பதை மண்களுக்கு இடையில் உள்ள ஓட்டை முடிவுசெய்யும் . மண்ணில் உள்ள ஓட்டை குறுக குருக ஈரப்பதம் நிக்கும்
களிமண் தரையாக இருந்தால் ஒருதடவை தண்ணி பாசன 4 முதல் 5 நாட்களுக்கு நிக்கும் . தண்ணீரோட எடையை பொறுத்து , ஒரு 80 லிட்டர் நீர் கொடுத்தால் இந்த தண்ணி உளளே புவிஈர்ப்பு விசை காரணமாக இறங்கிக்கொண்டே இருக்கும் . ஒரு தென்னை மரத்தோட வேரோட அளவு மூணு அடிதான் அதிகபச்சமாக இருக்கும் அதாவது ஆழம் . அகலம் 35 அடிக்கு 35 அடி இருக்கும் ஒரு மரத்துக்கு . அப்ப நீங்க கொடுக்ககிற தண்ணி மூனுஅடிய தண்டி போன அது மரத்துக்கு பயன்படாது . நம்ம பண்ணவேண்டியது வேரை ஈரமாக வச்சுக்கணும் . அப்படி வச்சுக்கும்போது , காலை 9 முதல் 1 30 மணிவரை உணவு தயாரிக்கும்போது நீங்க கொடுத்த தண்ணீர் மரத்தை சுற்றியுள்ள சத்துகளை வேர்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் . அளவுக்கு மீறி தண்ணீர் கொடுக்கும்போது அந்த வேரால் மூச்சு விடமுடியாது , இருக்கிற சத்தை எடுத்து வேருக்கு கொடுக்க முடியாது .
அப்பா நாம என்ன செய்யணுமுன்னு நம்ம மண்ணோட தன்மைக்கு ஏற்ற மாதிரி செம்மண் நிலத்திற்க்கு 80 லிட்டர் தண்ணீர் தரலாம் , இதையுமே காலையில் 40 மாலையில் 40 ஆக பிரிச்சு கொடுக்கலாம் . மழைக்காலத்துல தண்ணீர் பாய்ச்சலாமுன்னா கண்டிப்பா கூடாது . அதாவது வேர்ல உள்ள பொதுவான ஈரம்தான் கணக்கு. மண்ணோட ஓட்டைகளை அடைச்சு நம்மகிட்ட இருக்கற கொஞ்சம் தண்ணீரை கொடுக்க , பக்கத்தில் உள்ள கரம்பை மண்ணை எடுத்துட்டு வந்து மரத்தோட வேர்பகுதிகளில் ஒரு 3 சட்டி அளவுக்காவது பரப்பிவிட்டால் அந்த கரம்பை மண் மெதுவா இறங்கி மண்ணுக்கு இடையில் உள்ள ஓட்டையில் அடைஞ்சு நின்னுகிச்சுனா குறைஞ்ச அளவு தண்ணீல கூட ஒரு பொதுவான ஈரத்தை அந்த தென்னை மரம் வச்சுருக்கும். ஒருவேளை கரம்பை மண் கிடக்கலைனா , தென்னை நார் கழிவுகளை தண்ணீரில் ஊரவச்சு அதிலிருந்து வரக்கூடிய சிவப்பு நிற திரவத்தை எடுத்துவிட்டு வரக்கூடிய நார் கழிவுகளை எடுத்து வட்டப்பாத்தீயில் ஒரு மூணு தட்டு அளவு மட்டும் போட்டால் போதும் . பரப்பிவிட்டு இப்போ தண்ணீ கொடுக்கலாம் இதனால் அதுவும் ஊரீக்கும் மண் இடைவெளியில் உள்ள ஓட்டையை அடைக்கும் .
மேலும் பொதுவான ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும் தேவையான இடுபொருட்களும் மரத்திற்கு கிடைத்து கொண்டே இருக்கும் தென்னையில் மகசூல் அதிகமாக இருக்கும்
Comments
Post a Comment
Smart vivasayi