What natural post materials can be used for how long
இயற்கை இடு பொருட்களை எதை எதை எவ்வளவு காலம் பயன்படுத்தலாம்
பஞ்சகாவியா
குறைந்தபச்சம் ஆறு மாதங்கள் உபயோகப்படுத்தலாம்
மீன் அமிலம்
ஆறு மாதங்கள் உபயோகப்படுத்தலாம் ஒருதடவை தயார் பண்ணின அதாவது தயாரித்து முடித்த தேதியிலிருந்து ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்
ஜீவாமிர்தம்
ஏழு நாட்கள் அல்லது அதிகமாக பத்து நாட்கள் அதற்குமேல் பயன்படுத்த வேண்டாம்
அமிர்தக்கரைசல்
ஐந்து நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்
ஈ எம் கரைசல்
பழங்கள் இருந்து தயார் செய்தாலும் சரி வெளியில் இருந்து வாங்கினாலும் சரி 90 நாள் வரை பயன் படுத்தலாம்
அக்னி அஸ்திரம்
நீங்க தயார் செய்த தேதியிலிருந்து 1 மாசத்துக்கு நன்றாக இருக்கும் அடுத்து ஒருமாதம் வைத்திருக்கலாம் மொத்தம் இரண்டு மாதங்கள் வரை பயன் படுத்தலாம்
கற்பூரக்கரைசல்
தயார் செய்த உடனே கொடுக்கவேண்டும்
ஐந்து மற்றும் பதிலை கஷாயம்
இரண்டுமே ஆறு மாத அளவுக்கு பயன்படுத்தலாம் ஒருவேளை இடையில் இதன் செறிவு குறைவாக இருந்தால் 20 சதம் நாட்டு மாடு கோமியம் சேர்த்து கொள்ளலாம்
வேப்பங்கோட்டை கரைசல் மற்றும் வேப்பஎண்ணெய் கரைசல்
முடிந்த அளவு தயார் செய்த ஒருவாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்
உயிர் உரங்கள்
அதேகபச்சம் ஒருவருடம் பவுடராக இருந்தாலும் திரவமாக இருந்தாலும் பயண்படுத்தீ விடவேண்டும்
1 Comments
தங்கள் பதிவு மிக தரமானது.
ReplyDeleteSmart vivasayi